அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.06.2022) முக்கிய செய்திகள்.

* இந்தியாவில் புதிய கார்களுக்கு விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து நட்சத்திர மதிப்பீடு அளிக்கும் திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்- மத்திய அரசு.

விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து புதிய கார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடு வழங்கப்படும்.

இந்த நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வு செய்து வாங்கலாம்.

இந்த திட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் பிரிவு 1ல் உள்ள வாகனங்களுக்கு மட்டும்  கார் மதிப்பீடு திட்டம் பொருந்தும்.

இதன் எடை 3.5 டன்னுக்கு குறைவானதாக இருக்க வேண்டும்.

மோதல் சோதனைகளில் கார்களின் செயல்பாடுகளை பொருத்து, நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்படும்.

* ரோகித் சர்மாவுக்கு கொரோனா:
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பிசிசிஐ தகவல்.

ஜூலை 1ல் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு தொற்று உறுதி.

* பிரதமர் மோடி ஜெர்மன் பயணம்:
ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மன் பயணம்.

ஜி-7 உச்சி மாநாட்டின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

ஜெர்மன் பயணத்துக்கு பின் ஜூன்28-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி.

* மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றதாக எழுந்த புகாரில் என்ஐஏ நடவடிக்கை.

* கடலூர்; விருத்தாசலம் அருகே வலசை பகுதியில் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் பெண் காயம்.

வனவிலங்குகளை வேட்டையாட வந்த மர்மநபர்கள் சுட்டதில் தவறுதலாக  குண்டு பாய்ந்தது - போலீசார் விசாரணை

* இலங்கையில் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உயர்வு:

-92 பெட்ரோல் 470 (+ 50)

-95 பெட்ரோல் 550 (+ 100)

-ஓட்டோ டீசல் 460 (+ 60)

-சூப்பர் டீசல் 520 (+75)

* பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பீகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் மருந்து ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். மருந்து ஆய்வாளராக பணிபுரியும் இவர் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் குவிந்து வந்தன. இதன்பேரில், அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 5 சொகுசு வாகனங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜிதேந்திர குமார் கடந்த 2011-ம் ஆண்டு மருந்து ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். தற்போது பாட்னாவில் அவர் ஒரு பார்மசி கல்லூரியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை நடத்த இபிஎஸ் தீவிரம் - கூட்டத்தை தடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 11-ம் தேதி நடத்துவதற்கான பணிகளை இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் அக்கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பினர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் கடந்த ஜூன் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. அப்போது முதல் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்தது. இரட்டை தலைமைதான் வேண்டும் என்பதில் ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை என்பதில் இபிஎஸ் தரப்பும் உறுதியாக உள்ளன. எம்ஜிஆர் காலத்து மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டோரின் சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

பொதுக்குழுவிலாவது தீர்வு கிடைக்கும் என்று தொண்டர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் 23-ம் தேதி அதிகாலை வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் விடிய விடிய நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற நிபந்தனையுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்மானங்கள் நிராகரிப்பு

கூட்டத்திலாவது தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவில் கட்சியின் மூத்த தலைவர் தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என கூட்டத்தில் அறிவித்தார். இதனால் ஒற்றைத் தலைமை சர்ச்சை முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை முறையே ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இழந்துவிட்டதாக இபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது. தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால், கட்சியின் அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ரத்து செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திட்டமிட்டபடி 11-ம் தேதி இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ், பொதுக்குழுவே நடக்காது என தெரிவித்துள்ளார். பொதுக்குழு தொடர்பாக இரு தரப்பினரிடையே சொற்போரும் நீடித்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் அதிமுக அலுவலகங்களில் ஓபிஎஸ் படங்கள் அகற்றப்பட்டும், பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் அழிக்கப்பட்டும் வருகின்றன. நாகப்பட்டினம் போன்ற இடங்களில் இபிஎஸ்ஸூக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதற்கிடையில் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பிய ஓபிஎஸ் மற்றும் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர், எப்படியாவது 11-ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவை தடுத்து நிறுத்துவதற்கான சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று, ஓபிஎஸ் தரப்பு முன்வைக்க வாய்ப்புள்ள வாதங்களுக்கு எதிராக வாதிடுவதற்கான சட்ட நுணுக்கங்கள் குறித்தும், ஓபிஎஸ்ஸின் திட்டத்தை முறியடிக்கவும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இரு தரப்பினரின் தொடர் ஆலோசனைகளால் கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமையோ, இரட்டை தலைமையோ, ஏதேனும் ஒன்றை விரைந்து முடிவு செய்து கட்சியில் ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சங்ககிரி கோயிலில் பிரதோஷம், அமாவாசையை ஒட்டி இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி! - கோயில் நிர்வாகம்

* ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப்பிரதேச அணி!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மத்திய பிரதேச அணி.

பெங்களூருவில் நடந்த இறுதி போட்டியில் 44 முறை சாம்பியனான மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மத்திய பிரதேச அணி.

* முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே

கொரோனா ஊரடங்கு முன் இயங்கிய நெல்லை - செங்கோட்டை, நெல்லை - திருச்செந்தூர், மதுரை - செங்கோட்டை இடையே ஜூலை 1 முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* பஞ்சாபில் சிரோமணி அகாலி தளத்தின் (அமிர்தசரஸ்) சிம்ரஞ்சித் சிங் மான் சங்ரூர் லோக்சபா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

* பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.எ.எஸ் அதிகாரியை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

* நாடு முழுவதும் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தல் முடிவுகள் வெளியீடு.

உத்தரபிரதேசத்தில் 2 மக்களவை தொகுதி இடைதேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி.

பஞ்சாபில் ஒரு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை வீழ்த்தியது சிரோன்மணி அகாலி தளம்.

திரிபுராவில் 4 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் - 1,  பாஜக - 3ல் வெற்றி.

டெல்லியில் ஆம் ஆத்மி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலா ஒரு தொகுதியில் வெற்றி.

* தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்.

கொரோனோ தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவு.

முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் - தமிழக அரசு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரிப்பு - தமிழக அரசு.

* நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம்:
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது - அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை, எம்.ஜி.ஆர். மாளிகை அரங்கில் நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் - அதிமுக தலைமை

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் பெயர் இல்லாமல் தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அறிக்கை.

ஓ.பன்னீர்செல்வம் தேனி சென்றுள்ள நிலையில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages