அக்னிப்புரட்சி இன்றைய (05.07.2022) முக்கிய செய்திகள்.
* அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இரண்டு நாள் பயணமாக வரும் 7 மற்றும் 8ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலை செல்கிறார்..
* அரக்கோணத்தில் போலீஸ் விசாரணையின்போது பூச்சி மருந்து குடித்த ஜோதிபுரத்தை சேர்ந்த தளபதி (32) என்பவர் உயிரிழப்பு!
தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி மீனா காயத்ரி போலீசில் புகார்!
* இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு வந்துள்ளனர்.
* தஞ்சை ராணிபேரடைஸ் திரையரங்கம் உரிமையாளர் குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி
* சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்:
ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் துவங்கியது.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கோயிலுக்குள் நடந்த தேரோட்டம் இந்த ஆண்டு வழக்கம் போல் நடைபெறுகிறது.
* திருப்பதியில் வரலாறு காணாத உச்சம் தொட்ட காணிக்கை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் 2012 ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ.5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது.
* திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாஜகவினர் உண்ணாவிரதம்
திருச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம்
* வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓ.பி.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி கிருஷ்ணன் இராமசாமி முன்பு முறையீடு.
முறையீட்டை ஏற்று நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல்.
* மாநில கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் ‘கலைஞர்’ பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி அமைக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது:
கடலூர் மேல்பாதி கிராமத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் கைது.
மேல்பாதி கிராமத்தை சேர்ந்த ரவி என்ற கூலி தொழிலாளி இடம் லஞ்சம் வாங்கிய போது கைது.
ரூ. 3000 லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் பாட்ஷாவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் போலீசார் கைது செய்து செய்தனர்.
* டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்தி வைப்பு.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து பேசக்கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
* சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாரம் விதிக்கப்படும் - சென்னை மாநகராட்சி.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் தினசரி பாதிப்பு 2000-ஐ கடந்து பதிவாகி வருகிறது.
* இரட்டை மடிப்பு வலை விவகார வழக்கு; இடைக்கால தடை விதிக்க முடியாது-உச்சநீதிமன்றம்.
கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை எதிர்த்து ஒன்பது பேர் சார்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்கு மடிப்பு வலைக்கு தடை விதித்தது சட்ட விரோதமாகும்.
கடலில் 12 நாட்டிக்கள் மைல்கள் தாண்டி மீன் பிடிக்க அனுமதி உள்ளது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, படகு மற்றும் வலைகளை பறிமுதல் செய்யவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.
அதனால் சுருக்கு மடிப்பு வலைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்து வந்தது.
கடைசியாக நடந்த விசாரணையின் போது, மத்திய அரசும், மாநில அரசும் இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான கோடைகால அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், ‘பிரதான வழக்கின் உத்தரவு வெளியாக தாமதமாகும் என்பதால், இடைக்காலமாக 3 மாதத்திற்கு மட்டும் இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
இதன்மூலம் 60 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும்.
எனவே தமிழக அரசு பிறப்பித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினார்.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பிரதான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா அமர்வு விசாரிக்கிறது.
அந்த நிலையில் நாங்கள் இடைக்கால தடை விதிக்க முடியாது.
நீங்கள் மேற்கண்ட அமர்வின் முன் ஆஜராக உங்களது கோரிக்கையை வைக்கலாம் எனக்கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.
* இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி.
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றும் வழக்கம்போல அதிரடியாக விளையாடினார்கள் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும். 66-வது ஓவரில் இந்தக் கூட்டணி 200 ரன்களைத் தொட்டது.
ஜோ ரூட், 136 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 28-வது டெஸ்ட் சதம்.
2022-ல் தனது 5-வது சதத்தை அடித்துள்ளார் ரூட். 2021 ஜனவரி முதல் விளையாடிய 24 டெஸ்டுகளில் 11 சதங்களை எடுத்துள்ளார்.
அடுத்ததாக பேர்ஸ்டோவும் சதத்தைப் பூர்த்தி செய்தார். 138 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்தார். 2022-ல் 8 டெஸ்டுகளில் 6 சதங்கள் அடித்துள்ளார் பேர்ஸ்டோ.
இந்தியாவுக்கு எதிராக இந்த டெஸ்டில் இரு சதங்களும் நியூசிலாந்துக்கு எதிராக இரு சதங்களும் மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தலா ஒரு சதமும் அடித்துள்ளார்.
76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி.
ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது.
ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கியுள்ளார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்கிற புதிய சாதனையையும் இங்கிலாந்து அணி படைத்துள்ளது.
மேலும் இங்கிலாந்து அணி டெஸ்டில் அதிக ரன்களை விரட்டி வெற்றி பெற்று மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது.
* குஜராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் - மும்பையில் விமானம் அவசர தரையிறக்கம்
இன்று ஒரே நாளில் 2 ஸ்பைஸ் ஜெட் விமானம் கோளாறை சந்தித்துள்ளது
* இனி யாருக்கும் தயவு காட்ட மாட்டோம்- உயர் நீதிமன்றம் அதிரடி.
மக்களுக்கான திட்டங்களை அரசு குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தி முடிப்பதில்லை.
பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி.
* ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை.
கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம்
11ம் தேதி அடுத்த பொதுக்குழு என அவைத்தலைவர் அறிவித்தது கட்சி விதிகளுக்கு முரணானது - ஓ.பி.எஸ். தரப்பு மனுவில் தகவல்
* செல்போன் உபயோகிக்கும் நேரத்தை குறைத்து, வாழ்க்கையை வாழுங்கள் - செல்போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர்.
தான் ஒரு நாளைக்கு 5% நேரத்திற்கும் குறைவாகவே செல்போன் உபயோகிப்பதாக தெரிவித்துள்ளார் மார்டின் கூப்பர்.
* நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு.
காதி பொருட்கள், அரசு உப்பு, பனைவெல்லம் உள்ளிட்டவற்றை அதிகம் விற்பனை செய்தால் விற்பனை தொகையில் 1% ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - தமிழக அரசு.
* Tet தேர்வு தேதி அறிவிப்பு ..
தாள் 1க்கான தேதி மட்டும் அறிவிப்பு..
ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும்.
TET தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
* 5,318 காலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து
அரசு பணி ஆட்சேர்ப்பு பணிகளை டி.என்.பி.எஸ்.சி. மட்டுமே மேற்கொள்ளும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் ரத்து
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் - மின்வாரியம்
* கடலூர் - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் ஆலய ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு விடுமுறை - பல்கலை.
* வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பெருநகர போக்குவரத்துக் கழக இயங்குனர்களுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்
கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் ;பொது இடங்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும் - மாநகராட்சி
* தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா பாதிப்பு.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழப்பு.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மேலும் 1,060 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒருவர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு 16,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி நாளை (6ம் தேதி) விடுமுறை என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு.
No comments:
Post a Comment