அக்னிப்புரட்சி இன்றைய (06.07.2022) முக்கிய செய்திகள்.
* சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ₹50 உயர்த்தப்பட்டு, ₹1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது!
* தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,068.50க்கு விற்பனை.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைவு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனை.
* ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
* 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்:
தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து விளக்கமளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது ; மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அண்ணா பல்லலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்லலைக்கழகம், 225 கல்லூரிகளில் உரிய உட்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள் இல்லாததை கண்டறிந்தது. இதைத்தொடர்ந்து இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.
* நீலகிரி : கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அம்ரித்.
* இந்தியாவில் 24 மணி நேரத்தில் 13,086 கோவிட் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன, செயலில் உள்ள தொற்றுகள் 1,14,475; 2 வருட கோவிட் தடைக்குப் பிறகு சீனா உலகளாவிய விமானப் பயணத்தைத் திறக்கிறது, இந்தியாவுக்கான விமானச் சேவைகள் இன்னும் இழுபறியில் உள்ளன; கோவிட்-19 'வெடிப்பு' இன்றைய வார்த்தை - அன்டேட் - தேதியை அகற்ற 13MN சீன நகரமான Xi'an மீண்டும் மூடப்பட்டது.
* பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவை காலையில் சந்திக்கலாம்.... மாலையில் பேசலாம்! என் தனது முகநூலில் கூறியுள்ளார்.
பாட்டாளி சொந்தங்களுக்கு தைலாபுரம் தோட்டத்துக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவை இப்போதும் திறந்தே தான் இருக்கின்றன.
என்னை சந்திக்க விரும்பும் பாட்டாளி சொந்தங்கள், தைலாபுரம் தோட்டத்தில், நான் இருக்கும் நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சந்திக்கலாம். அதற்காக முன் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை.
அதேபோல், என்னுடன் தொலைபேசியில் பேச விரும்புவர்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்பு கொண்டு பேசலாம் என கூறியுள்ளார்
* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.4,740க்கு விற்பனை.
* வேலூரில் இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் சாலை அமைத்த விவகாரம்
உதவி பொறியாளர் பழனியை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை
* ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை -உச்சநீதிமன்றம்.
கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது- உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுவில் நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன்?- சிவி சண்முகத்துக்கு நீதிபதிகள் கேள்வி.
* கோவையில் "நமது அம்மா" நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரின் வடவள்ளி இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
* தமிழகத்திற்கு பொருந்தாது..
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது
நிலநீர் பாதுகாப்பு & நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்
- தலைமைப் பொறியாளர், நீர்வளத்துறை
* மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இஸ்லாமிய மத தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.
காரில் சென்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்த குவாஜா சையத் சிஷ்டியை சுட்டு கொன்ற நான்கு பேர்.
நாசிக்கில் பதற்றம் அதிகரிப்பால் போலீஸ் குவிப்பு; கொலையாளிகளை தேடும் போலீசார்.
* முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை
கோவை வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டிலும் சொந்தமான இடங்களிலும் ஐடி ரெய்டு
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார் சந்திரசேகர்
* தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்படும்:
225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம்.
இரண்டு வாரங்களில் குறைகளை சரிசெய்ய வேண்டும்.
தவறினால் கல்லூரிகளின் பெயர் பட்டியல் பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிடப்படும் - அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ்.
* பொதுக்குழுவிற்கு எதிரான ஒ.பன்னீர் செல்வம் வழக்கு - உயர்நீதிமன்றம் நாளை தள்ளிவைப்பு.
பொதுக்குழு திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தல்.
உடனடியாக விசாரித்து உத்தரவிடுங்கள் என நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது - உயர்நீதிமன்ற நீதிபதி.
* பஞ்சாபில் ஒவ்வொரு மாதமும் 600 யூனிட் மின்சாரம் இலவசம்.
பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு...
திருத்தம் பஞ்சாபில் 300 யூனிட் மின்சாரம் இலவசம் இருப்பினும், பிற்படுத்தப்பட்ட சாதிகள், தாழ்த்தப்பட்ட சாதியினர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.
* புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி இன்று (06.07.2022) மரியாதை நிமித்தமாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் சென்னை இல்லத்தில் சந்தித்தார்.
* ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு.
ஷிகர் தவான் (c), ஜடேஜா (vc), ருதுராஜ், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷான் (wk), சஞ்சு சாம்சன்(wk), ஷர்துல் தாகூர், சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், ப்ரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
* மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா.
அவரது ராஜ்யசபா எம்.பி பதவி நாளையுடன் முடிவதால் ராஜினாமா என தகவல்
* பொறியியல் செமஸ்டர் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி - அண்ணா பல்கலைக் கழகம்.
கடந்த 2021 நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு தாமதமாக கடந்த மார்ச் - ஏப்ரலில் நடைபெற்றது
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால அளவு 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைப்பு.
2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியதிலிருந்து 9 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் செலுத்த முடியும் என இருந்ததை 6 மாதமாக குறைத்தது மத்திய அரசு.
* மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங் ராஜினாமா.
பிரதமர் மோடியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
* சமையல் எண்ணெய் விலையை குறைத்திடுக"
சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உணவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள்.
சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் கோரிக்கை சமையல் எண்ணெய் விலை 10% முதல் 15% வரை குறைய வாய்ப்பு.
* இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்.
Twitt: https://t.co/SgxaYnWt6N
இளையராஜாவின் படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கிறது - பிரதமர் மோடி.
சாதாரண பின்னணியில் இருந்து வந்து இளையராஜா சாதித்தது அதிகம் - பிரதமர் மோடி.
* மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோரும் தேர்வு.
திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு.
மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை
* ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல; அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என தருமபுரம் ஆதினம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
No comments:
Post a Comment