அக்னிப்புரட்சி இன்றைய (09.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.07.2022) முக்கிய செய்திகள்.

* ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தார் மஸ்க்.

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார் எலான் மஸ்க்.

போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

* கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவு.

கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம்.

* ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை அடுத்து இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஷின்சோவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

* அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 29 பேர் மீட்பு

9 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அமர்நாத் வெள்ளப்பெருக்கில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தகவல்

* திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்.

ரூ.340 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1,74,169 பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலையை 1989 ல் தனி மாவட்டமாக அறிவித்தது திமுக அரசு திருவண்ணாமலையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

அறிவுக்கு ஒவ்வாத மூட கருத்துக்களை தூக்கிச் சுமக்கும் சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும், பொய்களும்தான் தேவை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மனிதர்களை பிளவுபடுத்துவதற்கு ஆன்மீகத்தை பயன்படுத்துபவர்கள், உண்மையான ஆன்மீகவாதியாக நிச்சயமாக இருக்க முடியாது

2004ல் அண்ணாமலையார் கோயிலை பக்தர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மீட்டுக்கொடுத்தது திமுக.. இன்று மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.

அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து, அதனை கட்டிக்காத்தது திமுக அரசு - திருவண்ணாமலை அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அறிவார்ந்த யாரும் இந்த அரசுக்கு ஆலோசனை சொல்லலாம், அதனை நாங்கள் செயல்படுத்துவோம்; பொய்யும், புரட்டும் மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீணர்களைப் பற்றி I Don't Care, நான் மட்டுமல்ல நீங்கள் ஒவ்வொருவரும் I Don't Care என்று கூறி நகர வேண்டும்- முதலமைச்சர்.

* பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது.

அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது

கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

* கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக இலங்கை ராணுவம் தகவல்

கொழும்பில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தப்பியோடியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டாபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்.

* கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் காவிரியில் 20,000 கன அடி தண்ணீர் திறப்பு.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

* பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கோரி வழக்கு.

தற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே TETல் தேர்ச்சி பெற்றுள்ளனர் -பள்ளிக்கல்வித்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை.

TETல் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் முதலில் பரிசீலிக்க அறிவுறுத்தி, வழக்கு 15ம் தேதி தள்ளிவைப்பு.

* அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து.

திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய புகாரில் வழக்குப்பதிவு.

புகாரை திரும்பப்பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

* சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் மீண்டும் சிபிஐ சோதனை.

கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.

* இலங்கையில் அதிபர் மாளிகையை தொடர்ந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்

எனினும், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றது முதல் அங்கு வசிக்கவில்லை, தனது சொந்த வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

* இலங்கை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே தெரிவிப்பு.

அனைத்து கட்சி ஆட்சியை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் அறிவித்துள்ளார்.

* இலங்கை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே தெரிவிப்பு.

அனைத்து கட்சி ஆட்சியை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் அறிவித்துள்ளார்.

* இலங்கை - கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு.

ரணில் வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பொருட்களை உடைத்து தீ வைத்ததால் பரபரப்பு.

கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயற்சி.
வீடியோ: https://t.co/ToXCq5faQU

* இரண்டாவது டி20 போட்டி இந்திய அணி வெற்றி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை.

* பதவி விலகுகிறார் கோத்தபய ராஜபக்சே:

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார்.

இலங்கை முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ம் தேதி பதவி விலக முடிவு செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages