அக்னிப்புரட்சி இன்றைய (14.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (14.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (14.07.2022) முக்கிய செய்திகள்.

* கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் சமீரன்.

* ஊரன் அடிகளார் காலமானார்:
கடலூர்: பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஊரன் அடிகளார்(90) காலமானார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் உயிரிழந்தார்.

ஊரன் அடிகளார் இறுதி சடங்குகள் வடலூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு.

* குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; tnpscexams.in என்ற தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் அம்ரித்

* காரைக்கால் - பெங்களூர் வண்டி விரைவில் இயக்கம், ஃபாஸ்ட் பாசஞ்சராக(56513/56514) இயங்கிய ரயில் விரைவு ரயிலாக மாற்றம்(16529/16530) பெங்களூரில் இருந்து ஜூலை 25 ஆம் தேதியும், காரைக்காலில் இருந்து 26 ஆம் தேதியும் இயக்கம்..KSR Bengaluru நிலையத்திற்கு பதிலாக புதிதாக திறக்கப்பட்ட பையபனஹள்ளி யில் இருக்கும் SMVB Terminal ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும்

காலை 5.30 க்கு காரைக்காலில் இருந்து கிளம்பி, 6:40 திருவாரூர், 7.38 மயிலாடுதுறை, சிதம்பரம் 8.28, கடலூர் துறைமுகம் 9.10, விருத்தாசலம் 10.50, சேலம் 14.40, ஓசூர் 19.24, பையபனஹள்ளி 21.30 க்கு சேரும்

இதேபோல் பையபனஹள்ளியில் இருந்து காலை 7.30 க்கு கிளம்பி, ஓசூர் 8:46, சேலம் 12.55, விருத்தாசலம் 16.15, கடலூர் துறைமுகம் 18.05, சிதம்பரம் 18.48, மயிலாடுதுறை 19.45, திருவாரூர் 20.50 கடைசியாக 22.35 க்கு காரைக்கால் சேரும்..

பெங்களூரில் இருந்து வரும் போது இந்த ரயில் வல்லம்படுகையில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.. மற்ற நிறுத்தங்கள் நேரங்கள் கீழே படத்தில் உள்ளது

* அரசு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் முறை, ஆகஸ்ட் 3 முதல் அமலுக்கு வருகிறது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

விரைவு போக்குவரத்துக் கழகங்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்.

* சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர்:
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்;

வியட்நாம் வீராங்கனை துய் லின் குயேன் உடன் மோதி, 2-1 என்ற  கணக்கில் வெற்றி

* கொரோனா பிடியில் இருந்து அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு!!

கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர்  அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது!(1/2)

நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது.  அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட  அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!(2/2)

* சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு.

ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்கவில்லை; அதிர்ச்சியாக இருக்கிறது

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.

சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது.

விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை.

அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனை களையும் மூட உத்தரவு.

4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி!

சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்!

* தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.

அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்.

இந்த வரி விதிப்பினால் சில்லறை கிலோவுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு என கவலை.

* மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5, டீசல் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு.

* அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்  கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை துவங்கியது.

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை

ஓ.பி.எஸ். கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச் சென்றதாக இ.பி.எஸ் தரப்பு வாதம்

கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை - இ.பி.எஸ். தரப்பு

மொத்த இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது - காவல்துறை தரப்பு வழக்கறிஞர் வாதம்

இருதரப்பு மோதல் முற்றியதால் சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

பாதுகாப்பு வழங்கப்படவில்லையா என்ற நீதிபதியின் கேள்விக்கு, உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என இபிஎஸ் தரப்பு பதில்

* அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.

விரிவான அறிக்கை, வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு.

* பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது அமலாக்கத்துறை.

ஏற்கனவே சித்ராவை சிபிஐ கைது செய்த நிலையில், தற்போது டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.

* பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூகப்பாதுகாப்புத்துறை உத்தரவு:

காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட /அணிய அனுமதி இல்லை.

பிறந்த நாளன்றும் சீருடையில்தான் வர வேண்டும்.

டூவீலர், மொபைல் போனுக்கு அனுமதி இல்லை.

Tattoo வுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.

மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது.

* ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாத யாத்திரை

அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, 148 நாட்களில் காஷ்மீரில் முடிவடைகிறது

* நீலகிரியில் இரவு நேர பயணத்துக்கு தடை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என போலீசார் அறிவிப்பு

* கோத்தபாயவுக்கு அடைக்கலம் தரவில்லை- சிங்கப்பூர்

கோத்தபாய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் தரவில்லை- சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்

தனிப்பட்ட பயணமாக கோத்தபாய ராஜபக்சே வருகை என சிங்கப்பூர் அரசு விளக்கம்

* கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம் - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம்:

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் 18 பேர் கூண்டோடு நீக்கம்.

ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேர் அதிரடி நீக்கம் .

வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோரும் நீக்கம்.

கட்சியினர் யாரும் நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது - எடப்பாடி பழனிச்சாமி.

* நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15-07-2022) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவு.

* எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் எழுதிய சிறுகதை தொகுப்பு நூலுக்கு விருது!

கொடிசியா மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 2022  கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவையொட்டி வழங்கப்படும் விருதுகளில் புனைவு நூல் பிரிவில் சுரேஷ் பிரதீப்பின் "பொன்னுலகம்" நூல்  தேர்வாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages