அக்னிப்புரட்சி இன்றைய (16.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.07.2022) முக்கிய செய்திகள்.

* ஒகேனக்கல்லில் தொடரும் வெள்ளப்பெருக்கு - 1,25,000 கன அடி நீர்வரத்து

காவிரி கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர்ந்து 7 நாட்களாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

* உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

கத்தார் விமான சேவை 'ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்' தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது

ஏர் நியூசிலாந்து 2வது இடத்தையும், எதிஹாட் ஏர்வேஸ் 3வது இடத்தையும் பிடித்தன

* மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.17 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் - 118.39அடி, நீர் இருப்பு - 90.92 டிஎம்சி, நீர் வெளியேற்றம் - 25,000 கன அடி

* துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காவலர் உயிரிழப்பு:

கோவையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் காவலர்.

* பொருளாதார தடைச் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விளக்கு அளிக்கும் தீர்மானம் அமெரிக்காவில் நிறைவேற்றம்.

* நாளை நீட் நுழைவு தேர்வு!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வில் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.

* அரிசிக்கு ஜிஎஸ்டியா... ரைஸ் மில்கள் மூடல்: அரிசி விற்பனை கடைகள் அடைப்பு.

மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு அரிசியின் மீது 5% வரியை விதிக்கும் பட்சத்தில், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும்.

இதன் காரணமாக தற்போது இருப்பதை விட, 3 முதல் 5 ரூபாய் வரை அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வேளாண்மை சார்ந்த உணவு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும்.

* கல்லூரி முன்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் - பாஜகவினருடன் மாணவிகள் கடும் வாக்குவாதம்

கல்லூரிக்கு முன்பாக பிரச்சார நிகழ்ச்சி நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சூழலில் பாஜகவினர் அனுமதி பெறாத காரணத்தை கூறி கலைந்து போக வேண்டும் என போலீசார் எச்சரித்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் "செல்பி வித் அண்ணா" என்ற போட்டி நடத்தப்படுவதாகவும் அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் பாஜகவில் இணைந்து தேசத்தின் கரத்தை வலுப்படுத்த வாருங்கள் எனவும் இதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி பெண்கள் கலைக் கல்லூரி என்ற இரண்டு கல்லூரிகளிலும் இன்று நடைபெறுவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த விளம்பரத்தை அறிந்த இரண்டு கல்லூரி முதல்வர்களும் இதற்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும் தங்களிடம் அனுமதி பெறப்படாமல் கல்லூரியின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மண்டல கல்வி இயக்குனரகம் என மூன்று இடங்களுக்கும் கடிதம் மூலமாக விளக்கம் அளித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கல்லூரிக்கு சென்ற பா.ஜ.க.வினர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் முன்பக்க கதவை திறக்காமல் பின்வாசல் வழியாக தேர்வு முடிந்த மாணவிகளை வெளியே அனுப்பினார். இந்த தகவலை அறிந்த பாஜகவினர் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முன் பக்க கதவுகளை திறக்க வலியுறுத்தினர். அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சில மாணவிகள் தேர்வு உள்ள சமயத்தில் தங்களுக்கு இது போன்ற இடையூறுகளை எதற்காக ஏற்படுத்துகிறீர்கள்? தங்களால் வெளியே வர முடியாத சூழலுக்கு பாஜகவினர் தங்களை உள்ளாக்குவதாக குற்றம் சாட்டி சில மாணவிகள் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரிக்கு முன்பாக இது போன்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சூழலில் பாஜகவினர் அனுமதி பெறாத காரணத்தை கூறி கலைந்து போக வேண்டும் என போலீசார் எச்சரித்தனர். இதனை எடுத்து பாஜகவினர் பிரச்சாரத்தை கைவிட்டு புறப்பட்டனர்.

* முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது?.. மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், பூரண குணமடைந்து வருகிறார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உடற்சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, காவேரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நேற்று சென்றிருந்தபோது அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே முதல்வர் விரைவில் குணமடைந்து வர, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘’கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின்படி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள முதல்வர் பூரண குணமடைந்து வருகிறார். மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கே.பி.முனுசாமிக்கு திமுக உதவியதா? பொன்னையன் ஆடியோவுக்கு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

பொன்னையன் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக கேட்டபோது `பொன்னையன் முன்பைப் போல இல்ல; இப்போதெல்லாம் எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார்” என பதிலளித்தார். பின் அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த கேபி முனுசாமி குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவருடைய குவாரிக்கு ஏற்கனவே சீல் வைத்துள்ளோம். சமீபத்தில் நடைபெற்ற டெண்டர் ஒன்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்து ஒரு குவாரியை பெற்றுள்ளார். கே.பி.முனுசாமிக்கு திமுக உதவவில்லை" என விளக்கம் அளித்தார்.

* எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய பொன்னையன்  மற்றும் ஜெயக்குமார் அதிருப்தியில் இருப்பதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கக்கூடிய பொன்னையன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அங்கு மாற்றங்கள் வர இருப்பதாகவும் கூறினார். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்துதான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை சேர்த்து உள்ளதாகும் குற்றம் சாட்டினார்.

* தமிழகத்தில் அரிசி ஆலைகள் வேலைநிறுத்தம்:

அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி தமிழகத்தில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

வேலை நிறுத்தத்தில் சுமார் 4,000 அரிசி ஆலைகள், 20,000 சில்லறை விற்பனை கடைகள் பங்கேற்றுள்ளன.

ஒரு கிலோ அரிசி விலை ரூ.3 முதல் 5 வரை உயரும் என்பதால் 5% ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி போராட்டம்.

* 42வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணை.

120 அடியை எட்டியதால் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்.

காவிரி ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* நாமக்கல்: ஒரே வாரத்தில் 1 ரூபாய் 10 காசுகள் சரிந்த முட்டை விலை, 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், அன்று ஒரே நாளில் 30 காசுகளும், 11ஆம் தேதி 30 காசுகளும், 14ஆம் தேதி 30 காசுகள் என படிப்படியாக குறைக்கப்பட்டது.

இன்று மீண்டும் 20 காசுகள் விலை குறைப்பு செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 1 ரூபாய் 10 காசுகள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

* குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.30,000ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது -சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்துவிட்டால், வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்வு - தமிழ்நாடு அரசு.

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்பும் கருவுற்றதால் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு.

* சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து;

ஜப்பானின் சேனா கவாகமி- ஐ 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அபாரம்

* ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தொடர்ந்து 5 நாட்கள் (ஜூலை 21-ந் தேதி வரை) ஆடி மாத சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

* வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படு வார்கள்.

வட இந்திய பயிற்சியாளர்களைக் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு காகிதக் கலைப் பயிற்சியா?

அனுமதியை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழ்நாட்டு கலை ஆசிரியர்களைக் கொண்டு கலைப் பயிற்சியை வழங்க வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்..

* பந்தேல்கண்ட் விரைவு சாலையை திறந்தார் பிரதமர் மோடி:

உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பந்தேல்கண்ட் விரைவு சாலையை ஜலானில் திறந்து வைத்தார் பிரதமர்.

14,850கோடி மதிப்பில் 296 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட 4வழி விரைவு சாலை எதிர்காலத்தில் 6 வழி சாலையாக மாற்றும் வகையில் பந்தேல்கண்ட் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பந்தேல்கண்ட் எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய பூமி, இந்த நிலத்திற்கு அதிவேக நெடுஞ்சாலையை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொழில்துறையில் முன்னேற்றம் அடைய இந்த சாலை பேருதவியாக இருக்கும்-உ.பி- இல் விரைவுச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு.

* குடியரசுத் தலைவர் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா-விற்கு  ஆம் ஆத்மி கட்சி ஆதரவு;

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு

* மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1.13 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

16 கண் மதகு வழியாக 90,000 கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

* செஸ் போர்டு போன்று ஜொலிக்கும் சென்னை நேப்பியர் பாலம்.

சென்னையில் 44வது செஸ் ஒலிம்யாட் நடைபெறுவதையொட்டி நேப்பியர் பாலம் செஸ் கட்டங்களால் வரையப்பட்டிருக்கிறது.

* கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்.

மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்தன.

மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன - உடற்கூறு ஆய்வில் தகவல்.

மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் தகவல்.

கொலையாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்.

* கீரை சத்து... கழிவுநீரோடு போச்சு - மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கீரையை அறுவடை செய்யும் வியாபாரி, அதை கழிவுநீரில்  கழுவி எடுக்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வீடியோ: https://youtu.be/vvxwMuU0h8M

சாமளாபுரம் பகுதியில் சாக்கடை அருகே உள்ள கீரைகளை பறித்ததோடு, அதை அந்த வியாபாரி கழிவுநீர் கால்வாயில் கழுவி எடுக்கும் காட்சியை பேருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதோடு, உடலுக்கு சத்து கிடைக்குமே என கீரையை வாங்கும் மக்கள், அந்த கீரையாலேயே சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

* தமிழகத்தில் கோவை, கடலூர், கரூர், திருப்பத்தூர், நாகை, ஈரோடு ஆகிய ஆறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்.

* பாஜக துணை ஜனாதிபதி தலைவர் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கார் பாஜக வேட்பாளராக அறிவிப்பு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages