அக்னிப்புரட்சி இன்றைய (19.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.07.2022) முக்கிய செய்திகள்.

🔴 கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் -  மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் பதில்.

உயர்நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லையா எனவும், உச்சநீதிமன்றம் கேள்வி ?.

* 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ், அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்?

விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.

அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும்.

பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்.

காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் உள்ள போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு.

* உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் POLICE ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்றவேண்டும்.

இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், உத்தரவை பின்பற்றி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டிஜிபி உத்தரவு.

🔴 சென்னை, மெரினா கடற்கரையில் 100 - க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக சமூக வலைதளங்கள் மூலம் பரவும் தகவல்!

கலங்கரை விளக்கம் முதல் தலைமைச் செயலகம் வரை தீவிர கண்காணிப்பு!

* திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து "காவிரி - கொள்ளிடம்" என இரண்டாகப் பிரிந்து ஆர்ப்பரித்துச் செல்லும் காவேரி நீர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் 26 ம் தேதி விடுமுறை;

* கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரையான 26ம் தேதி  ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி  விடுமுறை- மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி.

* கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆலோசனை.

* கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.

மாணவியின் உடலுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை குறித்து மருத்துவமனை டீனிடம் விசாரணை.

* கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு புதிய சான்றிதழ் வழங்கப்படும்
- அமைச்சர் அன்பில் மகேஷ்.

உடனடியாக சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* மாணவி உடலின் மறு பிரேத பரிசோதனை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் - மாணவியின் வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான பெரிய நசலூர் கிராமத்திலுள்ள வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் இல்லாமலே உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி.மாணவியின் பெற்றோர் மருத்துவமனை வந்தால் அனுமதிக்கலாம் - உயர்நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் தடை வழங்காததால் மறு பிரேத பரிசோதனை நடைமுறையை தொடங்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் மற்றும் எதிர்க்கட்சி துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

* கள்ளக்குறிச்சி மாணவி உடலின் மறு பிரேத பரிசோதனை தொடக்கம்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை.

சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த மருத்துவக்குழு மறுபிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.

🔴 கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் குழு அமைப்பு.

கனியாமூர் வன்முறை தொடர்பாக 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வன்முறை குறித்து விசாரிக்க பிரவீன்குமார் அபநபு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவில் ஆவடி பட்டாலியன் தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்.பி. கிங்ஸ்லி உள்ளிட்ட 5 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

வன்முறைக்கு பின்னணியில் உள்ள சதியை சிறப்பு புலனாய்வு குழு கண்டறியும்.

* கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த பள்ளி மாணவி உடலின் மறுபிரேத பரிசோதனை தொடங்கியது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை.

சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த மருத்துவக்குழு மறுபிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.

🔴 கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி: எஸ்பி மற்றும் ஆட்சியர் மாற்றம்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார் பணியிட மாற்றம்- புதிய எஸ்பியாக பகலவன் நியமனம்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஶ்ரீதர் இடம் மாற்றம்- புதிய கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமனம்

* உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை கண்டித்து, வரும் 25ம் தேதி அதிமுக போராட்டம்  - எடப்பாடி பழனிசாமி.

* செஸ் ஒலிம்பியாட் - பிரதமருக்கு தமிழக அரசு நேரில் அழைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்களின் சார்பில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,  மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, சென்னையில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும்,  வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

* அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட, ஈபிஎஸ் அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றன.

அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் கையாள, 12ந் தேதி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

கடிதத்துடன் இணைக்கப்பட்ட ஆதாரங்களை சரிபார்த்த பின், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை வங்கிகள் ஏற்றன.

🔴 மறுபிரேத பரிசோதனை முடிந்ததற்கான நோட்டீஸ் மாணவி வீட்டில் ஒட்டப்பட்டது.

பிரேத பரிசோதனை குறித்து தகவல் அனுப்பியும் நீங்கள் வரவில்லை.
பிரேத பரிசோதனை முடிந்தது, உடலை பெற்றுக்கொள்ள வருமாறு நோட்டீஸில் தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages