அக்னிப்புரட்சி இன்றைய (20.07.2022) முக்கிய செய்திகள்.
* 12 ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை.
12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
* குட்கா முறைகேடு வழக்கு- முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரிக்கை.
மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடிதம் என சிபிஐ விளக்கம்.
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய அனுமதி அளிக்க கோரிக்கை.
முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை- சிபிஐ அதிகாரிகள் விளக்கம்.
* கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்.
மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் கல்வித்துறை நடவடிக்கை.
* கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம்.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம்.
* வட்டியில்லா கடன் தரப் போகிறேன் - நித்யானந்தா அறிவிப்பு
Watch Live:
https://youtu.be/c1A05Um3I8g
உயிருடன்தான் இருக்கிறேன்; என் உடல் 22 வயது இளைஞரை போல் உள்ளது - நித்யானந்தா
* தமிழகத்தில் சென்னை உட்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கேரளா விழிஞ்ஞம் துறைமுகம் அருகே ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல் தொடர்பாக என்.ஐ.ஏ. சோதனை
வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்ட திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
🔴 இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு.
இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது
பரபரப்பான சூழலில் கூடியது இலங்கை நாடாளுமன்றம்.
இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு தொடங்கியது.
அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க போட்டியிட்டனர்
இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு.
* கள்ளக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் முன்னுரிமை.
சிபிசிஐடி போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்- புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. பகலவன் பேட்டி.
* தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறை சோதனை.
20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
* மேகதாது வழக்கு - தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - தமிழக அரசு.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளி வைக்க உத்தர விட வேண்டும் - தமிழக அரசு.
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது தொடர்பாக விவாதிக்க கூடாது - உச்ச நீதிமன்றம்.
உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
* பயணிகளின் கனிவான கவனத்திற்கு...
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு சென்னை- திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி தடத்தில் விரைவு இரயில் இயங்க உள்ளது...
புதன்கிழமை தோறும் இரவு 7-05 மணிக்கு செகந்திராபாத்தில் கிளம்பி வியாழன் காலை 9-30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து பின்னர் அங்கிருந்து 9-45 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு மாலை 3.15 மணிக்கு வந்து பின் 3.25 க்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு பட்டுக்கோட்டை- காரைக்குடி வழி இராமேஸ்வரம் சென்றடைய உள்ளது.
மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.50 க்கு இராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி பிற்பகல் 3.15மணிக்கு திருவாரூர் வந்து பின்னர் 3.25 க்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேர்கிறது. அதன் பின்னர் இரவு 10.10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் வண்ணம் நேரம் அமைந்துள்ளது.
* அதிமுக அலுவலகம் ஈபிஎஸ்க்கு சொந்தம். உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
சீலை அகற்றி தங்களிடம் அலுவலக உரிமையை ஒப்படைக்கக் கோரி ஒபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல்.
* தமிழ்நாடு முழுவதும் 22 தொடக்கப்பள்ளிகள், 18 உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகள் என 40 பள்ளிகள் கடந்த 15 ஆண்டுகளில் படிப்படியாக மூடல்;
அதிகபட்சமாக நீலகிரி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தலா 5 அரசுப்பள்ளிகள் மூடல்.
* சென்னை நுங்கம்பாக்கத்தில் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸிடம் சிக்கிய சிறுவர்களிடம் இருந்து ₹18,500 ரொக்கம் பறிமுதல்.
* ஜூடோ கேடட் சாம்பியன்ஷிப்; இந்தியாவுக்கு தங்கம்!
பேங்காக்கில் நடைபெற்று வரும் ஜூடோ ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லின்தோய் சினம்பரம் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் லித்தோல் சினம்பரம் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்தது.
* டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சரியான நேரத்தில் உள்ளே அனுமதிக்கப்படாததால், பெண்ணுக்கு வெட்ட வெளியில் பிரசவம் நடந்த விவகாரம்.
5 மருத்துவர்கள் விசாரணை முடியும் வரை பணி செய்ய தடை.
* தென்காசி குற்றாலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் சாரல் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு.
விழாவுக்கான லோகோ வடிவமைக்க ஆர்வம் உள்ளவர்கள் edm.tenkasi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24ம் தேதிக்குள் அனுப்பலாம். - மாவட்ட நிர்வாகம்.
* தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். காமன்வெல்த் தொடரின் 100 மீட்டர் தொடரோட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் தமிழக வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.
* ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
* கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டிஐஜி பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது. சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
* கேரளாவில் 300 கிலோ ஹெராயின், ஏகே47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் 20 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 9 இடங்கள், திருச்சியில் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
* மரக்காணம் அருகே வாழை தோப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ₨2 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
* அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த 6 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிப்பு - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து ஈ.பி.எஸ் அறிவிப்பு.
மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 25-ஆம் தேதி அதிமுக போராட்டம்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி.
திருச்சி மாநகருக்கு அமைப்பு செயலாளர் தங்கமணி.
தேனி மாவட்டத்திற்கு ஆர்.பி.உதயகுமார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு தளவாய் சுந்தரம்.
தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு அமைப்பு செயலாளர் காமராஜ்.
தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு ஓ.எஸ்.மணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம்.
* புதுச்சேரியில் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
புதிய கல்விக்கொள்கையில் எந்த மொழியையும் திணிப்பதாக இல்லை.
தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்- தமிழிசை.
* கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம். இறப்பதற்கு முன்பாக மாணவி பள்ளியில் நடந்து செல்லும் காட்சி வெளியானது.
மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக படிக்கும் அறையிலிருந்து, விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கும் செல்லும் காட்சி வெளியானது.
12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி மாடிக்கு செல்லும் காட்சி வெளியானது.
இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
* உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் மாற்றம்.
புதிய உளவுத்துறை ஐஜியாக செந்தில் வேலன் நியமனம்.
தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
உளவுத்துறை ஐ.ஜி.-யாக செந்தில்வேலன், அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமனம்.
ஐபிஎஸ் அதிகாரிகள் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவச், ஹர்ஷ் சிங், சாய் பிரனீத் ஆகிய 5 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
* கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக ஆராயவும் சமூக வலைதளங்களை கண்காணிக்கவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment