அக்னிப்புரட்சி இன்றைய (22.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.07.2022) முக்கிய செய்திகள்.

* செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 10 வரை இலவச பேருந்துகள் இயக்கம்

* திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

* இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றார்

* ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும்

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

* கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது விசாரணை.

உச்சநீதிமன்ற உத்தரவு நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அரசு வழக்கறிஞர்.

மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை- நீதிபதி.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை என நீதிபதி திட்டவட்டம்.

பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு.

ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள்: அமைதியாக தீர்வு காண வேண்டும் - நீதிபதி.

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் அனுதாபம் தெரிவித்து கொள்கிறது - உயர் நீதிமன்றம்.

மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்பட வில்லை - தடயவியல் நிபுணர்.

மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக் கொள்ளலாம் - கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் நிபுணர் விளக்கம்.

மாணவியின் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் ஆய்வு செய்ய உத்தரவு - உயர்நீதிமன்றம்.

3 மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்ய உத்தரவு.

உடற் கூராய்வு அறிக்கையோடு, உடற்கூராய்வு வீடியோ பதிவுகளையும் ஜிப்மர் மருத்துவ குழுவுக்கு ஒப்படைக்க உத்தரவு - உயர்நீதிமன்றம்.

தகுதியான தடயவியல் நிபுணர்களை கொண்டு அறிக்கையை ஆய்வு செய்யவும் உத்தரவு.

மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் - நீதிபதி

மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக  மதியம் 12 மணிக்குள் பதில் அளிக்க உத்தரவு

மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு

ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜிப்மர் மருத்துவக்குழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை: மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் - நீதிபதி

மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பது குறித்து முதல்வர் ஆலோசித்துள்ளார் என அரசு தரப்பு விளக்கம்

* மாணவி ஶ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்.

நாளை காலை 6 மணிக்கு மாணவியின் உடலை பெற்று, 11 மணிக்குள் அடக்கம் செய்து கொள்கிறோம் - மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் தகவல்.

* அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம்

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை அறிவிப்பு

* விமான நிலையங்களில் செக் இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது - விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை!

* சென்னை தலைமை செயலகத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா சிகிச்சைக்குப் பின் தலைமைச் செயலகம் திருப்பிய முதல்வர் தனது பணிகளை தொடங்கினார்.

* கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்கள் கண்காணிப்பு.

ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை கண்காணிக்கும் எஸ்.பி. பகலவன் தலைமையிலான தனிப்படை தீவிரம்.

வதந்திகளை பரப்பிய சமூக வலைதள பக்கங்களை முடக்கவும் நடவடிக்கை.

* கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி அருகே கண்டெடுக்கப்பட்ட 14 செட் கம்மல் போலீசாரிடம் ஒப்படைப்பு.

கள்ளக்குறிச்சி கலவரத்தன்று பள்ளி வழியாக வந்தபோது சாலையில் கிடந்ததாக ஒப்படைத்த நபர் தகவல்.

கலவரம் நடந்த பள்ளியில் களவாடப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க தண்டோரா போட்டதைத் தொடர்ந்து இரவோடு இரவாக வந்து சேரும் பொருட்கள்.

கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப அளிக்குமாறு காவல்துறை வேண்டுகோளை ஏற்று, எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் வீசி செல்லும் மக்கள்.

ஆர்.ஓ.வாட்டர் பியூரிபயர், மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரம், ஃபேன், இரும்பு கிரில் கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் கனியாமூர் பகுதியில் குவிப்பு.

* விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.

* சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சிலை கடத்தல்காரர்கள் சுபாஷ் கபூர், தீனதயாளனை தப்ப வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்கு பதிந்ததாக புகார்.

* TNPSC-EXAM-
சர்வேயர் மற்றும் DRAUGHTSMAN தேர்வுக்கான -புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது....

'அய்யப்பன் கோஷியும்' இயக்குநர், மறைந்த  சச்சிதானந்தத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.

ஐயப்பனும் கோஷியும் படத்திற்காக பிஜூ மேனனுக்கு சிறந்த துணை நடிகர் விருது.

தேசிய விருத்துக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

* பிரேத பரிசோதனை - ஆய்வுக் குழு அமைப்பு.

உயிரிழந்த கள்ளகுறிச்சி மாணவியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு.

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட ஆய்வுக் குழு அமைப்பு.

ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷ குமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

* கடலூர், பெரியநெசலூரில் நாளை நடைபெறும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க கூடாது - காவல்துறை.

மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - காவல்துறை

* 10 தேசிய விருதுகளைத் தட்டிய தமிழ் சினிமா

'சூரரைப் போற்று' தமிழ் திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை), சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது. இது 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் (2020-ம் ஆண்டுக்கான விருதுகள்) அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' மூன்று விருதுகள், 'மண்டேலா இரண்டு விருதுகள்' என மொத்தம் 10 தேசிய விருதுகளை வசப்படுத்தியிருக்கிறது தமிழ் சினிமா.

கடந்த 2020 நவம்பரில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் 'சூரரைப் போற்று' வெளியாகி இருந்தது. 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் ‘சூர்யா - ஜோதிகா’ தம்பதியர் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி இருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு, கருணாஸ், பூ ராமு, காளி வெங்கட் என பலரும் இதில் நடித்திருந்தனர்.

'சூரரைப் போற்று' திரைப்படம் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. திரைப்பட விமர்சகர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இப்போது இந்தப் படம் இந்தி மொழியில் உருவாகி வருகிறது.

இந்தச் சூழலில்தான் ஐந்து விருதுகளை வென்றுள்ளது இந்தத் திரைப்படம். படக்குழுவினருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உலக சினிமா விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர்: இந்தப் படத்தில் லீட் ரோலில் நெடுமாறன் ராஜாங்கம் (மாறா) கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான சூர்யா இந்தப் படத்திற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்திருந்தார். கேப்டன் கோபிநாத் கேரக்டரில் அவர் தன்னை இரண்டறக் இணைத்துக் கொண்டார். இந்தப் படத்தில் அவர் நடித்தார் என சொல்வதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார். படம் வெளியான போதே அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என சொல்லப்பட்டது. இப்போது அது நிஜமாகி உள்ளது. வெற்றிக்காக மாறாவாக சூர்யா இந்த படத்தில் போராடி இருப்பார்.

சிறந்த நடிகை: சூரரைப் போற்று திரைப்படத்தில் ‘பொம்மி’ கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பிய நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். சூரரைப் போற்று, தமிழில் அவர் நடித்த மூன்றாவது திரைப்படம்.

கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்திருந்தார். நிஜ வாழ்வில் பார்க்கவி பேக்கரி கடை நடத்தி வருகிறார். திரைப்படத்திலும் இந்த காட்சிகள் வரும். அபர்ணாவின் அசலான நடிப்பை படம் வெளியானபோதே பாராட்டியிருந்தார் கேப்டன் கோபிநாத்.

காதல் தொடங்கி அத்தனை உணர்வுகளையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார் அபர்ணா. முக்கியமாக அவர் பேசும் வசனங்கள் பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்போது அதுவே அவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): இந்தப் படத்திற்கு பின்னணி இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ராணுவ பயிற்சி, விமான நிலைய காட்சி, தந்தையின் மரணம் என பல்வேறு காட்சிகளுக்கு தன் பின்னணி இசை மூலமாக உயிர் கொடுத்திருப்பார் ஜி.வி. அதனை இந்த படத்திற்காக ஜி.வி சேர்த்த ஜீவன் எனவும் சொல்லலாம்.

சிறந்த திரைக்கதை: இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் சுதா கொங்காரா மற்றும் ஷாலினி உஷா நாயர் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். படத்தின் கதை கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை கதையின் தழுவல் என்றாலும் திரைக்கதை அமைப்பில் இருவரும் அசத்தி இருப்பார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு ஆணிவேர். இப்போது தேசிய விருதையும் வென்றுள்ளனர்.

சிறந்த படம்: இந்த பிரிவில் தேசிய விருதை வெல்லும் ரேஸில் பல்வேறு திரைப்படங்கள் போட்டா போட்டி போட்டிருந்தன. இருந்தாலும், அனைத்து டிப்பார்ட்மென்டிலும் அற்புதமான உழைப்பை அர்ப்பணித்த 'சூரரைப் போற்று' சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை விருதை வென்றுள்ளது.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது, லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த உறுதுணை நடிகர் (பெண்) விருது மற்றும் சிறந்த எடிட்டிங்குக்காக ஸ்ரீகர்பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டேலா

'மண்டேலா' திரைப்படத்தை எழுதி, இயக்கி இருந்த அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைப் பிரிவில் வசனத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்தப் படத்தை இயக்கி கவனம் ஈர்த்திருந்தார் அவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages