ஜூலை- 23 சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு நாளில், பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி மலர்மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். - Agnipuratchi

ஜூலை- 23 சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு நாளில், பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி மலர்மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Share This

ஜூலை- 23 சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு நாளில், பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி மலர்மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தியாகி சுப்ரமணிய சிவா அவர்கள் இந்திய திருநாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு போராடியவர், வாழ்நாள் முழுவதும் சுதந்திரப் போராட்டமே, வ.உ.சிதம்பரம் பிள்ளை இயக்கிய சுதேசி கப்பல் போராட்டத்தில் அவரோடு சேர்ந்து போராடியவர், விடுதலை உணர்வு தூண்ட நிறைய எழுதியவர்,ஒரு சிறந்த எழுத்தாளர், மிகச்சிறந்த பேச்சாளர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர், இவரது கடுமையான போராட்டத்தை கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு இவரையும் வ.உ.சி போன்றவர்கள் எல்லாம் சிறையில் அடைப்பது, சுப்பிரமணிய சிவா அவர்கள் ஆறாண்டு காலம் சேலம் சிறையில் இருந்த அவரை தொழுநோய் நோயினால் பாதிக்கப்பட்ட நேரத்தில் சிறையில் ஆங்கிலேய அரசு கடுமையாக கொடுமைப்படுத்தியது, அதையும் பொருட்படுத்தாமல் சுதந்திர வேட்கையை தூண்டி எழுதினார், அவர் எழுதிய பாடல் வரிகளில் கொடியது ஓர் வியாதி கொல்லுதே என்னை எனவும் எழுதி உள்ளார்,

            விடுதலைப் பெற்று வெளியே வந்து சென்னையிலும், தமிழ்நாடு முழுவதும் சென்று போராடினார், மீண்டும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள், சிறையில் இருந்து மீண்டு வந்த பிறகு போராட்டத்தில் வெளியே செல்ல ஆங்கிலேய அரசு ரயிலில் பயணம் செய்ய தடை விதித்துவிட்டது, இந்நிலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் தான் பிறந்த ஊரான வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கால்நடையாகவே தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி பாப்பாரப்பட்டி வந்து சேர்ந்தார், பாப்பாரப்பட்டி பொதுமக்களும் அவருக்கு உற்ற நண்பர்களாக இருந்தவர்களும் அவர் தங்குவதற்கு இடம், உணவு, உடை கொடுத்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட  அவரை ஆதரித்து வந்தனர், இந்நிலையில் பாரத மாதா கோவில் கட்டப்பட வேண்டும் என்று விரும்பி நிதியும் திரட்டினார் என்ற சூழலில் தன்னுடைய 41 வது வயதில் ஜூலை 23 இயற்கை எய்தினார். அவரது கனவை நினைவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற சட்டமன்றத்தில் தொகுதி உறுப்பினர் என்ற அடிப்படையில் பாப்பாரப்பட்டி பாரத மாதா கோயில் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வாதாடி வந்தேன், அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரது நினைவிட வளாகத்தில் பாரதமாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது, அவரது கனவு நினைவாகிவிட்டது அவரது நினைவை போற்றுவோம் புகழஞ்சலி செலுத்துவோம். பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் பாமக நிர்வாகிகளும் மலர்வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages