அக்னிப்புரட்சி இன்றைய (26.07.2022) முக்கிய செய்திகள்.
* குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழப்பு, மேலும் 20 பேர் கவலைக்கிடம்
குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது
* ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ₨35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நெல்லைக்கு மாற்றப்பட்ட நடராஜன் சஸ்பெண்ட்.
* பனிமயமாதா பேராலயத்தின் 440வது திருவிழா கோலாகலம்:
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 440 வது திருவிழா கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புறாக்கள் பலூன்கள் பறக்கவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* DIPR - GO - Public Dept.- 44 th Chess Olympiad -Local Holiday- Date - 25.07.2022 .pdf
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - அரசாணை
* 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஆன்லைன் மூலம் தொடங்கி உள்ளது!
அதானி டேடா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பு!
* எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
* கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது.
தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்கிறேன்- சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடந்தால் அரசு வேடிக்கை பார்க்காது, குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தரும்;
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு.
மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
* மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட்
விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு குறித்து அவையின் மையப்பகுதியில் முழக்கமிட்டதால் துணை சபாநாயகர் நடவடிக்கை
திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 11 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட்
* கஞ்சா விற்பனை - 1,450 வங்கிக் கணக்குகள் முடக்கம்:
கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கையாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில், 831 வழக்குகளில் 1,450 வங்கிக் கணக்குகள் முடக்கம்.
1,000 குற்றவாளிகளிடம் நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது - தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
* பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
விண்ணப்பம் பதிவு செய்து கட்டணம் செலுத்தாமல், சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்களுக்காக மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு - உயர் கல்வித்துறை அறிவிப்பு
No comments:
Post a Comment