அக்னிப்புரட்சி இன்றைய (27.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (27.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (27.07.2022) முக்கிய செய்திகள்.

* பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

அரசு கலைக்கல்லூரிகளில் சேர இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்.

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

புதிய மதிப்பெண் சான்றிதழும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை
தெரிவித்துள்ளது.

* மாமல்லபுரம் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு;

கடந்த மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்றுடன் நிறைவு

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஒலிம்பியாட் ஜோதியை பெற்றுக்கொண்டனர்

* கள்ளக்குறிச்சி பள்ளி பூட்டை உடைத்தவர் கைது

கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது பள்ளி கட்டடத்தின் மெயின் கேட் பூட்டை உடைத்தவர் கைது.

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனிஷ் என்பவரை கைது செய்தது சிறப்பு புலணாய்வு குழு.

வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மனிஷை கைது செய்தது புலணாய்வு குழு.

* 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணையில் நேற்றே கையெழுத்திட்டுள்ளேன் - மு.க.ஸ்டாலின்.

மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம்.

நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும்.

மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது - மாணவர்கள் மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* மின்கட்டண உயர்வை கண்டித்து சென்னையில் துவங்கிய அதிமுக ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்.

சென்னையில் நடந்துவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம்

* டெல்லி வீட்டில் இருந்து மகள் பிரியங்கா காந்தியுடன் காரில் அமலாக்கப்பிரிவு அலுவலகம் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா 3 வது முறையாக ஆஜர்.

சோனியாவிடம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்.

* அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.

முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.

* கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி நிர்வாகி உட்பட 5 பேரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி-க்கு அனுமதி வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்

* சென்னையில் இருந்து பெங்களூரு வரை விமானத்தில் அழைத்துச் செல்லப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள்

அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மெய்யநாதன், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்

கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி -முதலமைச்சர்.

* கடலூர் மாவட்டம் மானடிகுப்பம் மைதானத்தில் மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது.

இந்த கபடிப் விளையாடிக்கொண்டிருந்த போது போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் என்ற இளைஞர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

இந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்; உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த திரு.சஞ்சய் (எ) விமல்ராஜ் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பள்ளி சொத்துகள் சேதம், சம்பந்தப்பட்ட பெற்றோரே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை.

மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்க வேண்டும்.

தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களை, அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்றலாம் - மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த சுற்றறிக்கையை அமல்படுத்த, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு.

* மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது செஸ் விளையாடி மகிழ்ந்தார்.

தென்காசி- குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 2 பேர் உயிரிழப்பு.

கடலூர் மற்றும் சென்னையை சேர்ந்த இருவர் பலி. மேலும் மூவரை தேடும் பணி தீவிரம்.

* பாஸ்போர்ட் மோசடி வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் நோடல் ஆபிசர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிக்ககூடும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இவ்விவாகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நாளை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை- தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு

* பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்கிறோம் - செல்வப்பெருந்தகை.

வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, மத்திய வருமானவரித்துறையை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது, தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வில் பிடிவாதமாக இருப்பது, தமிழக ஆளுநரை தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக பேச வைப்பது போன்ற பல விசயங்களில் துணைபோகும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் புறக்கணிப்பு - செல்வப்பெருந்தகை.

* குற்றாலம் மெயின் அருவியில் சற்றுமுன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 5 பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.

தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர், ஆகாஷ், எஸ்பி ஆர்.கிருஷ்ணராஜ்  அருவிப்பகுதிக்கு விரைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை பலியான சென்னை பெரம்பூர் மற்றும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் உடல் மீட்கப்பட்டுள்ளது  மேலும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குற்றாலத்தில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

* அதிர்ச்சி: குற்றால அருவி வெள்ளத்தில் 5 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு!

2 பெண்கள் பலி: 3 பேர் உயிருடன் மீட்பு!

Watch: https://t.co/izfvaMHy9v

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இன்று மாலை பெய்த கன மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் மல்லிகா,  கலாவதி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது மீட்கப்பட்டது.5 பேர்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages