அக்னிப்புரட்சி இன்றைய (30.07.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.07.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.07.2022) முக்கிய செய்திகள்.

* வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததை அடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

* பிரதமர் மோடி கொண்டாடிய செஸ் சாம்பியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி தனது உரையில் திருப்பூவனூர் சதுரங்கவல்லப நாதர் திருக்கோயில் பற்றிக் குறிப்பிட்டார். பூவனூர் எங்கே இருக்கிறது? சதுரங்கம் ஆடிய ஈஸ்வரன் யார்? இங்கே பார்ப்போம்.

பார்வதி தேவி வசுசேனன் என்ற மன்னனுக்கு மகளாக இப்புவியில் அவதரித்தார். சகல கலையிலும் பாண்டித்யம் மிக்கவளாகத் திகழ்ந்த அம்பிகை சதுரங்க விளையாட்டில் யாராலும் வெல்லமுடியாதவளாக இருந்தாள். உடனே மன்னன் சதுரங்கப் போட்டியில் வெல்பவனுக்கு தனது மகளை மணமுடித்துத் தருவதாக அறிவித்தான். எவராலும் அம்பிகையை வெல்ல முடியவில்லை.

சிவபெருமான் சித்தர் வேடம் பூண்டு அங்கு வந்தார். அம்பிகையுடன் சதுரங்கம் ஆடி ஜெயித்தார். சித்தருக்கு எப்படி தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பது என்று மன்னன் சிந்தனையில் ஆழ்ந்த போது சிவபெருமான் தனது சொரூபத்தைக் காட்டியருள, அவருக்கே தனது பெண்ணாகப் பிறந்த அம்பிகையைத் திருக்கல்யாணம் செய்துவைக்கிறான்.

இந்தத் தலம் மன்னார்குடி-நீடாமங்கலம் சாலையில்,  மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. ஹரித்ராநதியில் சைக்கிளில் ஏறி மேலப்பாலம் தாண்டியதும் நாலு மிதியில் பூவனூர் வந்துவிடலாம். இருபுறமும் புளிய மரங்கள் நிழல் தர ரோடோரத்தில் பாமணி சலசலக்க ஓடி வரும். ஆற்றுப் பாலத்தைக் கடந்தால் ராஜகோபுர தரிசனம் கிட்டும். சுற்றிலும் பச்சை வயல்கள் சூழ்ந்த ரம்மியமானப் பிரதேசம்.  இறைவன் சதுரங்கவல்லபநாதர் சுயம்பு மூர்த்தி. மைசூருக்குப் பிறகு இறைவி இங்குதான் சாமூண்டீஸ்வரியாக தனி சன்னிதியில் கோயில் கொண்டிருக்கிறாள்.

எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் வேர் கட்டி நீராடி நலம் பெறுகிறார்கள்.

“பூவனூர் புகுவார் வினை போகுமே..” என்று அப்பர் பெருமானால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.

வினை தீர பூவனூர் சென்று சதுரங்கவல்லபநாதர் - சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து புண்ணியம் அடையலாம்.

* மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு.

கிழக்கு கோதாவரி பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டது, மகா புண்ணிய சேத்திரம் கோயில்.

* எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே அழைப்பு!

ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்!

* திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல; கொள்கைக்கான கூட்டணி.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே, நாடு வளர்ச்சி அடையும்.

மாநில அரசுகள் வலுவாக இருப்பது, மத்திய அரசுக்கு பலம்தானே தவிர பலவீனமல்ல - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பதே, நாட்டை காப்பதாக அர்த்தம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை

தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் 'கான்க்ளேவ் 2022' நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று மலையாளத்தில் உரை.

கொரோனா தொற்று காரணமாக கான்க்ளேவ் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* திருவள்ளூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு திருவள்ளூர்  மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் கஞ்சா,குட்கா போதை பொருட்களை உடனடியாக தடை செய்ய கோரி  பாட்டாளிகள் பங்கேற்ற    ஆர்ப்பாட்டத்தில் ....

* சிவகங்கை அருகே மின்வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

முயல் வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

முகவூரை சேர்ந்த அய்யனார், அவரது மகன்கள் அஜித், சுகந்திரபாண்டி உயிரிழப்பு

* ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயல் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

குமரி மாவட்டம் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்-தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம்காட்டி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதில்லை; இதை ஏற்றுக் கொள்ள முடியாது - நீதிபதிகள்.

* சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து ஆலோசனை.

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, சட்டத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு.

* கடந்த 2012ம் ஆண்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரம்: காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2012ல் சென்னை, அயனாவரத்தை சேர்ந்த நித்தியராஜை விசாரணைக்காக ஐசிஎப் போலீசார் அழைத்து சென்றனர்.

உடல்நலக்குறைவு ஏற்பட்ட நித்தியராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு.

காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக நித்தியராஜின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.
இழப்பீட்டு தொகையை குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு.

* வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை(ஜூலை 31) கடைசி நாள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அபராதத் தொகை அறிவிப்பு.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விவரங்களை இதுவரையில் 4 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ளனா். ஜூலை 31-ஆம் தேதி வரையில் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.

இதுவரை தாக்கல் செய்யாதவா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை சார்பில் தெரிவித்திருந்தது.

தற்போதைய நிலையில் காலக்கெடு வழக்கம்போல் நீட்டிக்கப்படும் என்ற எதிா்பார்ப்பு பெரும்பாலான மக்களிடம் நிலவுவதால் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை சிறிது குறைவாக உள்ளது.

தற்போது கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளையுடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது: 

அதன்படி, ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருமான வரித்  தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000, ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரித்  தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா அணி முதல் வெற்றி!

செஸ் ஒலிம்பியாட் போட்டி : 2வது சுற்றில் இந்தியா B அணி பொது பிரிவில் களமிறங்கிய தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.

* செஸ் ஒலிம்பியாட் 2ம் சுற்று - பாலஸ்தீனத்தை சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா சேடர் வெற்றி

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற குறைந்த வயது வீராங்கனை ராண்டா சேடர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages