அக்னிப்புரட்சி இன்றைய (31.07.2022) முக்கிய செய்திகள்.
* காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் அலைமோதும் அசைவப் பிரியர்கள் கூட்டம்!
ஞாயிற்று கிழமை என்பதால் மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம்!
மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.50 முதல் ரூ.200 வரை குறைந்தது!
* கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது!
* கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு!
* பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு.
பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.
விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை.
* நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் ஆகிய 1089 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டது.
தகுதியுடையோர் www.tnpsc.gov எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வரும் நவ-6 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
* குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் நிகழ்ச்சி:
தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குடியரசுத் தலைவரின் கொடி;
சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமே குடியரசு தலைவர் கொடி
இதுவரை 10 மாநில போலீசாருக்கு மட்டுமே குடியரசு தலைவரின் கொடி
தென்மாநிலங்களில் தமிழகமே இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம்
சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு உள்ளிட்ட பல அடிப்படைகளை கொண்டு கொடி கெளரவம்
தமிழக காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது, மிக உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது;
தமிழக காவல்துறை தனக்கு தானெ சல்யூட் அடித்துக் கொள்ளக்கூடிய சிறப்பு இது; தமிழகத்துக்கே வரலாற்று சிறப்புமிக்க பெருமை இது.
* தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
தமிழக காவல்துறை இந்தியாவின் பல மாநிலங்களின் காவல்துறைக்கு முன்மாதிரியானது.
தமிழக காவல்துறையில் ஒரு டிஜிபி 2 ஏடிஜிபி, 14 ஐஜி, 20,000 காவலர்கள் பெண்களாக உள்ளனர்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குற்றங்களை தடுப்பதை விட, குற்றங்களே நிகழாத சூழலை உருவாக்க வேண்டும்.
காவல்நிலைய மரணங்கள் குறைந்துள்ளது என்று தான் சொல்கிறேனே தவிர, முற்றிலும் இல்லை என்று சொல்லவில்லை;
காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும்.
சிறு தவறு செய்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும்;
பாலியல், போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
மக்களுக்கு பெரும் சேவையை காவல்துறை செய்து வருகிறது.
அமைதியான மாநிலமாக இருப்பதால் தான், பெரிய பெரிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன.
மக்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்,உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* என் மனதில் சென்னைக்கு என்றும் தனி இடம் உண்டு.
இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழக காவல்துறை என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை- தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரை.
தமிழக காவல்துறையின் வரலாற்றில் இது முக்கியமான நாள், ஒவ்வொரு தமிழருக்கும் இது மகிழ்ச்சியான நாள்;
Elite States வரிசையில் தமிழகமும் இணைந்துள்ளது-குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.
புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணத்தில் உள்ள வரணேஸ்வரர் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம், மருத்துவமனையில் அனுமதி.
* வாஞ்சிநாதன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!
Watch: https://t.co/rnuuK3L0em
"நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோடு பேச நேர்ந்தால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை இந்த நிலையம் தாங்கி இருக்கிறது. இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினான்."
* இன்று (31.07.2022) மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சென்று கண்டுகளித்து வந்தார். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment