முதல் கடமையை செய்தீர்களா... செயல்வீரர்களே! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்களுக்கு நேற்று முன்நாள் 20 கட்டளைகளை பிறப்பித்து இருந்தேன். அவை அனைத்து அன்புக் கட்டளைகள். என் அன்புக்குரியவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள். அவை அனைத்தையும் நீங்கள் கண்டிப்பாக செயல்படுத்தியாக வேண்டும்.
20 கட்டளைகளில் 13-ஆவதாக இடம் பெற்றிருந்த கட்டளை, ‘‘பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் கூறப்பட்டவாறு, மாதத்திற்கு ஒரு முறை கிளை, பேரூர், ஒன்றிய, மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். பவுர்ணமி நாளில் கிராமக் கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும். ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்’’ என்பது தான்.
நான் அன்புக்கட்டளை பிறப்பித்த நாள் ஜூலை 2. ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது தான் எனது அன்புக்கட்டளை. இந்த மாதத்தில் அந்தக் கட்டளையை எத்தனை பேர் நிறைவேற்றினீர்கள்?
மாவட்ட அளவிலான செயற்குழுவாக இருந்தாலும், ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான செயற்குழு கூட்டங்களாக இருந்தாலும் குறித்த நாளில், குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.
செயற்குழு கூட்டங்களின் போது குழு இயக்கவியல் (Group Dynamics) பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக அவர்களின் கருத்துகளை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது தெரிவிக்க வேண்டும். அதை பதிவாளர் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சி பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு உதவும்.
No comments:
Post a Comment