4 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா கலந்தாய்வு! - Agnipuratchi

4 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா கலந்தாய்வு!

Share This

4 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா கலந்தாய்வு!

கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர்  ஆகிய  வருவாய்  மாவட்டங்களைச்  சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர்  செயலாளர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று கலந்தாய்வு செய்தார்கள். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொத்தம் 140 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன்,  தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பிரிவு செயலாளர் செல்வகுமார், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பா.ம.க. செயலாளர்கள்  ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages