திருத்தணி இராஜா நகர் நில சர்ச்சை: பா.ம.க உண்மை அறியும் குழு இன்று சனிக்கிழமை (02/07/2022) நேரில் ஆய்வு! - Agnipuratchi

திருத்தணி இராஜா நகர் நில சர்ச்சை: பா.ம.க உண்மை அறியும் குழு இன்று சனிக்கிழமை (02/07/2022) நேரில் ஆய்வு!

Share This

திருத்தணி இராஜா நகர் நில சர்ச்சை: பா.ம.க உண்மை அறியும் குழு இன்று சனிக்கிழமை  (02/07/2022) நேரில் ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி இராஜா நகர் பகுதியில் வன்னியர் சமுதாய மக்களிடமிருந்து, 1990-களின் தொடக்கத்தில் பொதுப் பயன்பாட்டுக்காக என்று உறுதியளித்து, கையகப்படுத்தப்பட்ட சுமார்  5 ஏக்கர் நிலத்தை, அந்த நோக்கத்திற்கு முற்றிலும் மாறாக பட்டியலின மக்களுக்கு வழங்க தமிழக அரசு முயல்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அச்செயலை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இரு தரப்பு மக்களும் அமைதியாகவும், நட்புடனும் வாழ விரும்புகின்றனர். மாற்று இடம் வழங்கப்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக பட்டியலின மக்களும் கூறியுள்ளனர்.

இத்தகைய நிலையில் அப்பகுதியில் நிலவும் சூழலை ஆய்வு செய்து, சுமூகத் தீர்வு ஏற்படுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தலைமையிலான உண்மை கண்டறியும் குழு இன்று (ஜூலை 2) சனிக்கிழமை திருத்தணி இராஜாநகருக்கு நேரில் செல்கிறது. பா.ம.க. மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மயிலம் சி.சிவக்குமார்,  பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் வைத்திலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலயோகி,  செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் வினோபா பூபதி ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages