அக்னிப்புரட்சி இன்றைய (01.08.2022) முக்கிய செய்திகள்
* வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.36.50 குறைப்பு.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைக்கப்பட்டு ரூ.2,141க்கு விற்பனை.
வீட்டு உபயோகத்துக்கான மானிய சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ.1,068.50ஆகவே நீடிக்கிறது.
* கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்- தேடல் குழு அறிவிப்பு.
தகுதியான பெண்கள் வரும் 31-ம் தேதிக்குள் motherteresawomenuniv.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
www.tnmedicalselection.org, www.thhealth.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.
இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று அசத்தல்.
* என்.எல்.சி. பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு பற்றி விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்.
என்.எல்.சி பொறியாளர் பணியிடங்களில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக கண்டனம்.
* திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், வரும் 7 - 10ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட், நாளை வெளியிடப்பட உள்ளது- தேவஸ்தானம்.
திருமலை ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது.
இதையடுத்து, 7 - 10ம் தேதி வரையிலான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவை தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கான விரைவு தரிசனத்திற்கான முன்பதிவு, நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரின் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
* தனியார் பள்ளிகளில் பயிலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு.
அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும்- அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
* கேரளா: திருவனந்தபுரம்,கொல்லம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி,போன்ற 5 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்,மற்ற மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்.
5 நாட்கள் கன மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அம்மாநில முதலமைச்சல் பினராயி விஜயன் அறிவுறுத்தல்.
* திருமலைநாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், போட்டோசூட் எடுக்க நிரந்தர தடை.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை- மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு.
விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ சூட் நடத்தவும் நிரந்தர தடை.
வரலாற்று புகழ்பெற்ற திருமலை நாயக்கர் அரண்மனையை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை.
* நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்.
சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
* சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் 4,795 ரூபாய்க்கு விற்பனை.
* நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.
உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாததால் அதிகாரிகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம்.
* கடலுக்கு நடுவில் அமைய உள்ள கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் - அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம்
* மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி அளித்த உத்தரவாதத்தை ஏற்று, ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்பிக்களின் இடைநீக்கம் ரத்து.
பதாகையை ஏந்தி வரக்கூடாது என எம்பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை.
* IMPORTANT!
உங்கள் வங்கிக் கணக்கை தொடர்ந்து பயன்படுத்தவும், இல்லையெனில் அது செயல்படாமல் போகலாம். அதை செயல்படுத்த மற்றும் செயல்படாத கணக்கிலிருந்து பணத்தை பெறவும் வங்கியைத் தொடர்பு கொள்ளவும். மேலும் அறிய 14440-ஐ அழைக்கவும்
-RBI
* INFORMATION
வங்கி/NBFC/கட்டண பங்கேற்பாளர்களுக்கு எதிரான உங்கள் புகாரை RB ஒருங்கிணைந்த குறைகேட்பாளர் திட்டத்தின் கீழ் https://cms.rbi.org.in-ல் பதிவுசெய்யவும். மேலும் விவரங்களுக்கு 14440-ஐ அழைக்கவும் -RBI
* மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு.
* புகழ்பெற்ற நடிகர் என்.டி.ஆரின் இளைய மகள் தற்கொலை.
தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ஆரின் 4வது மகள் உமா மகேஷ்வரி தற்கொலை.
ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியும், உமா மகேஷ்வரியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
* விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் ஜோதிமணி எம்.பி கடும் விமர்சனம்.
பால் மீது 5% ஜிஎஸ்டி விதித்தால் ஒருவர் எப்படி குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும். பென்சிலுக்கு கூட வரி போடும் இந்த அரசுக்கு மனசாட்சி இல்லையா?
பிறந்தது முதல் இறந்தது வரை வரி போடும் அரசு, பிரதமர் மோடியின் அரசாக மட்டுமே இருக்கும் - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம்.
* பலத்த மழை எச்சரிக்கை - தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்.
தென்காசி மாவட்டத்திற்கு 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
விவசாயிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம்.
மழை வெள்ள பாதிப்புகளுக்கு 04633-290548 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் - மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்.
* வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கு பதிவு செய்ய வருடத்திற்கு 4 வாய்ப்புகள் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தி வெளியீடு!!!
* கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (02.08.2022) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
No comments:
Post a Comment