அக்னிப்புரட்சி இன்றைய (07.08.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (07.08.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (07.08.2022) முக்கிய செய்திகள்.

* ஐஸ்லாந்து நாட்டில் வெடித்துச் சிதறும் எரிமலை: எச்சரிக்கையையும் மீறி எரிமலை வெடிப்பை காணக் குவியும் மக்கள்

ஐஸ்லாந்து: ஐஸ்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையம் அருகே இரு தினங்களுக்கு முன்னர் வெடிக்க தொடங்கிய எரிமலையிலிருந்து லாவா குழம்பு வழிந்தோடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஐஸ்லாந்து தலைநகரான ரேக்ஜவிக்கிள் இருந்து 32கி.மீ. தொலைவிலும், அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஃபக்ராடால்ஸ்பியால் எரிமலை. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3ம் தேதி எரிமலை வெடிக்க தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் எரிமலையிலிருந்து புகையுடன் கூடிய லாவா குழம்பு வெளியேறி வருகிறது.

எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எரிமலை வெடித்துச் சிதறுவதை காண, அப்பகுதியில் எச்சரிக்கையும் மீறி ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல விமான போக்குவரத்தும் தடையின்றி செயல்பட்டு வருகிறது. எரிமலை வெடிப்பின் தொடக்க கட்டத்தில் அதன் பாதிப்புகளை முழுமையாக கூறமுடியாது என்றாலும் அதிலிருந்து விஷவாயுகள் வெளியேறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இதே எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு சுமார் 6 மாதங்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. 

* காமன்வெல்த் போட்டி: மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ( 97 கிலோ) மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை சந்தித்தார். இந்த போட்டியில் வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை 10-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

* காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலப்பதக்கம் வென்றார்

குத்துச்சண்டை அரையிறுதி ஆட்டத்தில் கானாவின் ஜோசப் காமியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

ஆண்களுக்கான (57 கிலோ) குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் கானாவின் ஜோசப் காமியை எதிர்த்து போட்டியிட்டார். இப்போட்டியில் முகமது ஹுசாமுதீன் 1-4 என்ற கணக்கில் கானாவின் ஜோசப் காமியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

* சீனா போா்ப் பயற்சி ஒத்திகை: முப்படைகளும் உஷாா் நிலையில் வைக்க தைவான் உத்தரவு

தைவான் நீா்ச்சந்தியில் சீனா நடத்தி வரும் போா்ப் பயற்சி, தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.

சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி வருகை தந்ததைக் கண்டிக்கும் வகையில், அந்த தீவைச் சுற்றியும் சீனா போா்ப் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தைவான் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து தைவான் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தைவான் நீா்ச்சந்தியில் சீனா மேற்கொண்ட போா்ப் பயிற்சியின்போது, எல்லைக் கோட்டை அந்த நாட்டு போா்க் கப்பல்களும் போா் விமானங்களும் பல முறை கடந்து தைவான் எல்லைக்குள் நுழைந்தன. தைவான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையைப் போல் அந்த போா்ப் பயிற்சி அமைந்திருந்தது.

அதையடுத்து, நாட்டின் முப்படைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவை உஷாா் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், வான்பாதுகாப்பு ஏவுகணைகளும் தயாா் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

எல்லை மீறி வரும் சீன விமானங்களை எச்சரிப்பதற்காக, தைவான் போா் விமானங்கள் பறக்கவிடப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* என்.வி.ரமணாவின் பதவிகாலம் 26ம் தேதியுடன் முடியும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியின் பதவிகாலம் 74 நாட்களே: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு கோரிக்கை என்னாச்சு?

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்க உள்ள நிலையில், அவர் வெறும் 74 நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருப்பார். அதேநேரம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான கோரிக்கை நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் வழக்கமான நடைமுறைகளை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதன்படி யு.யு.லலித் 49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பார். புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள யு.யு.லலித்தின் பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு (74 நாட்கள் மட்டுமே) குறைவாகவே இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் யு.யு.லலித் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி யு.யு.லலித் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகி பின்னர் தலைமை நீதிபதியான இரண்டாவது நீதிபதி ஆவார்.

ஏற்கனவே நீதிபதி எஸ்.எம்.சிக்ரி வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகி அதன்பின் 13வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 1971 முதல் 1973ம் ஆண்டு ஏப்ரல் வரை இருந்தது. இருப்பினும், நீதிபதி யு.யு.லலித்தின் பதவிக்காலம் வெறும் 74 நாட்கள் மட்டுமே. அவர் நவம்பர் 8ம் தேதி ஓய்வு பெறுவார். அவருக்கு அடுத்ததாக உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக வரவாய்ப்புள்ளது. இவர் வரும் 2028ம் ஆண்டு மே மாதம் ஓய்வு  பெறுவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நீதிபதி யு.யு.லலித், கடந்த 2014ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.

அவரது தந்தை மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக  இருந்துள்ளார். கடந்த 2019 ஜனவரியில் அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில்  தீர்ப்பளித்த அரசியலமைப்பு பெஞ்சில் இருந்து நீதிபதி யு.யு.லலித்  விலகினார். இந்த வழக்கில் இவர் 1997ம் ஆண்டு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்  கல்யாண் சிங்கின் வழக்கறிஞராக இருந்ததாகவும், அதனால் இந்த அமர்வில் தான்  இடம்பெறக்கூடாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்கள் வரை உயர்த்த வேண்டும் என்று பேசப்படும் நிலையில், ஓய்வு வயதை உயர்த்துவதற்கான யோசனையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் ஒன்றிய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்தது. இருந்தாலும் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் யோசனையானது, ஒன்றிய அரசால் முழுமையாக நிராகரிக்கப்படவில்லை. ஒருவேளை ஒன்றிய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, நீதிபதிகளின் ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தினால், நீதிபதி யு.யு.லலித், நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக வரும் 2024ம் ஆண்டு நவம்பர் வரை பணியில் இருப்பார். இரண்டு ஆண்டுகள் எட்டியதும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறுவார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தற்போது 65 ஆக உள்ளது.

இதனை 67 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64 ஆகவும் உயர்த்த நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரை செய்தது. ஆனால் அவை ஏற்றுக் கொள்ளப்படாமல் நிலுவையில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா. அமெரிக்க நீதிபதிகளுடனான சந்திப்பில் பேசும்போது, நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என்றும், 65 வயதில் ஓய்வு பெறும் போது அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறினார்.

அமெரிக்காவில் ஒருமுறை நீதிபதியாக இருந்தால், அவர் தனது வாழ்நாள் முழுவதும் பதவியில் இருப்பார்; ஓய்வு பெறுவதற்கு அவருக்கு வயது அடிப்படையாக இருக்காது என்று கூறினார். இவரது பேச்சின் மூலம், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்றும், அப்போதுதான் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் விவாதிக்கப்பட்டது. இருந்தாலும் ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாததால், நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிக்கும் திட்டம் அமலுக்கு வருமா? என்பது கேள்வியாக உள்ளது....

* அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி ஆனார்; செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க நாட்டில் உள்ள 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் ரூபாலி எச்.தேசாய் நியமிக்கப்பட்டார்.

அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது தொடர்பான ஓட்டெடுப்பு செனட் சபையில் நடந்து முடிந்துள்ளது. இதில் அவரது நியமனத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால், ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட்டு (கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ நகரில்) நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவர் கனடாவில் டொராண்டாவில் பிறந்தவர். அமெரிக்காவின் அரிசோனா ஜேம்ஸ் இ ரோஜர்ஸ் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து தேறினார். தற்போது நீதிபதியாகியுள்ள 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதி மேரி ஸ்ரோடரின் சட்ட குமாஸ்தாவாக 2005, 2006 ஆண்டுகளில் பணியாற்றினார். பின்னர் வக்கீல் தொழில் செய்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இவரை 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்தார். அதற்கு இப்போது நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் தந்துள்ளது.

இந்த கோர்ட்டில் தெற்காசியாவில் இருந்து முதன் முதலாக இவர்தான் நீதிபதியாகி இருக்கிறார் என்பது சிறப்பு.

* பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட சினிமா தயாரிப்பாளர்களிடம் இருந்து ரூ.200 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின: ஐடி அதிகாரிகள் தகவல்

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்பட சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ரூ.26 கோடி பணம், ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பவர் அன்புச்செழியன். இவர் தனியாக சினிமா தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அதோடு விநியோகஸ்தராகவும் உள்ளார். இவரது சென்னை தி.நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், மதுரையில் உள்ள வீடு, அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, டி.ஜி.தியாகராஜன், சீனிவாசன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் டெல்லியில் இருந்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். பின்னர் தொடர்ந்து 3 நாட்களாக நடந்த இந்தச் சோதனை நேற்றுடன் முடிந்தது. அதைத் தொடர்ந்து, வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருமான வரித்துறையினர் கடந்த 2ம் தேதி திரைப்படத் துறையுடன் தொடர்புடைய சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களின் வீடுகளில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின்போது, ​​கணக்கில் வராத பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சோதனையின்போது, மறைக்கப்பட்ட சொத்து ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட பைனான்சியர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கணக்கில் காட்டப்படாமல், கொடுக்கப்பட்ட ரகசிய கடன்கள் மற்றும் அது தொடர்பான உறுதிமொழி பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் நடந்த சோதனையில், வரி ஏய்ப்புக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேலும், திரைப்படங்களின் வெளியீட்டில் இருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் குறித்த ஆவணங்கள் சிக்கின. ஆனால், வழக்கமாக வருமான வரித்துறைக்கு காட்டப்பட்ட குறைவான விவரங்களும் கிடைத்தன. இதனால் வரி ஏய்ப்பு செய்த முழுமையான விவரங்கள் சிக்கியுள்ளன. வருமான வரித்துறைக்கு காட்டப்பட்ட வருமானத்தை விட பெருமளவில் தியேட்டர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளன.

மேலும், அவர்களால் உருவாக்கப்படும் கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு வெளிப்படுத்தப்படாத ரகசிய கடன்கள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதேபோல் திரைப்பட விநியோகஸ்தர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், திரையரங்குகளில் இருந்து கணக்கில் வராத வசூலைக் காட்டுகின்றன. ஆதாரங்களின்படி, விநியோகஸ்தர்கள் சிண்டிகேட்களை உருவாக்கி, தியேட்டர் வசூலை திட்டமிட்டு வருமான வரித்துறைக்கு மறைத்து விட்டனர். இதன் விளைவாக உண்மையாக அரசுக்கு வரவேண்டிய வருமானம் தடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, நடந்த சோதனையில் ரூ.200 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்த மற்றும் மறைக்கப்பட்ட வருமானம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆபீஸ், வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.26 கோடி மற்றும் கணக்கில் வராத ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....

* தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துங்கள்; தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை விடுத்துள்ளது.

தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தும்படி தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அம்மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தகுதியுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அதனுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன்,ழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 4 வது டி20- வெஸ்ட் இண்டீசை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா: தொடரையும் கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. புளோரிடா, இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து 4 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் (33), சூர்யகுமார் யாதவும் (24) சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த தீபக் ஹூடா 21 ரன்களும், ரிஷப் பண்ட் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். சஞ்சு சாம்சன் 30 ரன்களும், கடைசியில் அக்சர் படேல் அதிரடியுடன் 20 ரன்களையும் எடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

தொடக்கம் முதலே தடுமாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லாத அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் தலா 24 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் அந்த அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது

* முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் இன்று:

சென்னை, பெசண்ட் நகரில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தின மாரத்தான் தொடங்கியது

42.2 கி.மீ, 21.1 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என 4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது

அமைச்சர் மெய்யநாதன் 42 கி.மீ மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அமைச்சர் எ.வ.வேலு 21.1 கி.மீ மாரத்தான் பிரிவை தொடங்கி வைத்தார்

அமைச்சர் கே.என்.நேரு 10 கி.மீ மாரத்தான் பிரிவை தொடங்கி வைத்தார்.

* சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடல் போல அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது நினைவிடம்.

* மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4வது நினைவுநாள்:
சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு.

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணி

* வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்.

விண்ணில் செலுத்தப்பட்டது SSLV-D1 ராக்கெட்; PSLV, GSLV ராக்கெட்டுகளை தொடர்ந்து ISRO வின் புதிய முயற்சி SSLV.

SSLV என்றால் என்ன?

தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது.

இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.

அந்த வகையில் 120 டன் எடை அதிகபட்சம் புதிய வகை ராக்கெட், எஸ்எஸ்எல்வி டி-1 இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

SSLV யில் உள்ள இரு செயற்கைக்கோள்கள் என்ன?

1), 145 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகா்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டா் அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.

2), ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் மூலம் உருவாக்கப்பட்டது.

* ஆன்லைன் விளையாட்டு - கருத்து தெரிவிக்கலாம்:

ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்துவது குறித்து மக்கள் homesec@tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 12ம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் - தமிழக அரசு.

* செயற்கைகோள் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்:

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை.

EOS 2 மற்றும் ஆசாதி-சாட் செயற்கைக்கோள்களின் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்.

கோளாறு சரிசெய்யப்பட்டு வருகிறது -இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

* இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 528 வாக்குகளுடன் வெற்றி பெற்று இந்தியாவின் 14-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் ஜக்தீப் தன்கர் அவர்கள் அனைத்து வகைகளிலும் அவரது பணி சிறக்க! - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

* சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மகிழ்ச்சி.

இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பாமக வலியுறுத்தியிருந்தது. அதன்படி சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை மத்திய அரசு உறுதிசெய்யவேணடும்.

* கிராண்ட் மாஸ்டரானார் பிரனவ் வெங்கடேஷ்.

இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் பிரணவ் வெங்கடேஷ்.

சென்னையை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் இந்தியாவின் 75வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

* சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.

இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்.

சென்னையில் நடந்த தேர்தலில் FIDE தலைவராக அர்காடி வோர்கோவிச் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

* SSLV ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் செயலிழந்துவிட்டன.

நீள்வட்ட பாதையில் உள்ள 2 செயற்கைக்கோள்களையும் மேற்கொண்டு பயன்படுத்த முடியாது - இஸ்ரோ அறிவிப்பு.

* சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்து விபத்து.

மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ, பைக் மீது விழுந்ததில் 2 பேர் படுகாயம், ஒருவர் பலி.

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை.

சென்னை, ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலை வழிகாட்டி பலகை சரிந்து விபத்து.

மாநகர பேருந்து மோதியதால் வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து விபத்து.

சாலை வழிகாட்டி பலகை சரிந்து மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது விழுந்துள்ளது.

வழிகாட்டி பலகை விழுந்ததில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.

* காமன்வெல்த் போட்டிகளில் மொத்தம் 48 பதக்கங்களுடன் நான்காமிடத்திற்கு முன்னேறியது இந்தியா

17 தங்கம்
12 வெள்ளி
19 வெண்கலம்

குத்துச்சண்டை போட்டிகளில் மட்டும் இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் பெற்று அபாரம்

காமன்வெல்த் - இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கலம்

பெனால்டி ஷூட் அவுட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல்

'காமன்வெல்த்' - மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்..!

* சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்யுமாறு நாட்டின் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், இதர வேளாண் பொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை கடைபிடிக்கவும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

* காமன்வெல்த் உறுப்பு நாடுகள் மொத்தம்-53

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்தரம் பெற்ற நாடுகள் இவை.

இந்த நாடுகளுடான உறவுகளை துண்டிக்காமல் இருக்க,
பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய அமைப்பு தான் Commonwealth of nations

* 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தரவரிசை பட்டியல் (ஓபன் பிரிவு)

அர்மேனியா - 15
இந்தியா B - 14
உஸ்பெகிஸ்தான் - 14
நெதர்லாந்து - 13
ஈரான் - 13
அஜர்பைஜன் - 13
இந்தியா A - 12
துருக்கி - 12
அமெரிக்கா - 12
ஜெர்மனி - 12
இந்தியா C - 10

* உலகின் பெரிய பணக்காரர்களாக வருவதற்காக இந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார்

ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள்;

அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையுயையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம்" - அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

* சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் செஸ் லெஜண்ட் விஸ்வநாதன் ஆனந்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது உண்மையில் தமிழ்நாட்டிற்கு பெருமையான தருணம்"
"விஸ்வநாதன் போன்ற அனுபவமுள்ள ஒரு நபர் இந்த பொறுப்பில் இருப்பது செஸ் விளையாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது" - - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages