அக்னிப்புரட்சி இன்றைய (08.08.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.08.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.08.2022) முக்கிய செய்திகள்.

* ஐந்தாவது 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி, 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 4-1 என வென்று, கோப்பை கைப்பற்றியது.

இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஓடியன் ஸ்மத், 3 விக்கெட் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவரில் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இந்தியா சார்பில் பிஷ்னோய் 4, அக்சர், குல்தீப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இப்படி ஸ்பின்னர்கள் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவது சர்வதேச 'டி--20' வரலாற்றில் முதல் முறையாக அரங்கேறியது.

* மோசடி புகார் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்து மக்கள் கட்சி பிரசன்ன சுவாமி  தற்கொலை.

குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் பிரசன்ன சுவாமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இரு தினங்களுக்கு முன்பு அவரது தாயார் உயிரிழந்தார்.

* மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது!

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவதற்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது

குறைந்தபட்ச, அதிகபட்ச மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது

* நகைக்கடையில் 281 சவரன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி புக்கிரவாரி புதூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகைகள் கொள்ளை

மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை

புக்கிரவாரி அருகே விளைநிலத்தில் நகைகள் சிதறி கிடந்த நிலையில் போலீசார் விசாரணை

* காவலர் குடியிருப்புகள் - முதல்வர் திறப்பு

சென்னை: ஆயிரம் விளக்கில் புதிய காவலர் குடியிருப்பை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

ரூ.186.51 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1,036 காவலர்கள் குடியிருப்புகள் திறப்பு

* ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

ஜே.இ.இ. மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.

ஆளுநர் ஆர்.என் ரவியுடன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆர் என் ரவியை சந்தித்தார் ரஜினிகாந்த்.

மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன் -  ரஜினி பேட்டி

தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிடித்துள்ளது

தமிழக மக்களின் நலனுக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயார் என்று ஆளுநர் கூறினார்.

ஆளுநருடனான சந்திப்பில் அரசியல் பேசினோம், மீண்டும் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை

ஆளுநருடன் சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை, வரும் 15 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கும்

ஆளுநருடனான சந்திப்பிற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.

* தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திக்கேயன் உள்பட உயர் அலுவலர்கள் பங்கேற்பு.

அண்ணாமலை பல்கலை விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு.

மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு:

மின்சார சட்டத் திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பியதால், மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பினார் சபாநாயகர்.

* பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு.

ஆக.25 தொடங்கி அக்.21 வரை பொறியியல் கலந்தாய்வு- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

* சென்னை, கிண்டியில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்த சண்முகசுந்தரம் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.1 லட்சமும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவு

* பர்மிங்காம் காமன்வெல்த் பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா

19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா

* அமைச்சர் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்

Watch: https://youtu.be/pl3SYVLtu-A

திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடக்கரையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வின்போது, எதிரே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அமைச்சர் கார், வாகனங்கள் சென்ற பிறகே ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.

அதேநேரம் அப்பகுதியை சேர்ந்த காவல்துறையினர் தெரிவிக்கையில், அணைக்கரையில் இருந்து கொள்ளிடக்கரை சாலை குறுகிய சாலை, கொள்ளிடத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வேறு செல்கிறது. அமைச்சர் வந்த சாலை மிகவும் குறுகலான சாலை என்பதால் அமைச்சரின் கார் அருகே வந்துவிட்டபடியாலும் சிறிது நேரம் அனைவரது பாதுகாப்பும் கருதியே ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கொள்ளிடக்கரையில் ஆம்புலன்ஸ் சென்றால் அமைச்சர் மற்றும் அதனைத்தொடர்ந்து வரும் வாகனங்களினால் ஏதாவது விபத்து ஏற்பட்டால் வாகனம் ஆற்றுக்குள்தான் பாயும் நிலை. மேலும், ஆம்புலன்ஸ் வந்த அதே நேரத்திலேயே அமைச்சரின் காரும் அந்த வலைவான பகுதிக்கு வந்ததால் தான் ஆம்புலன்ஸ் பயணம் சிறிது நேரம் தடைபட்டது.

* தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு. ஏதாவது ஒரு பட்டம் என்ற தகுதி மாற்றப்பட்டு, ஊடகம், விளம்பரம் சார்ந்த பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயம். 2 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அனுபவம் என்ற விதி நீக்கம்

* ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் கருத்து கேட்கிறாராம்...

சீட்டு ஆடுறது சரியா.. தப்பான்னு ஒரு முதலமைச்சருக்கு தெரியாதா?
-சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கேள்வி..

* ஆலங்குளம் அருகே உரிய அனுமதி இல்லாமல் குளத்திலிருந்து மண் கடத்திய ஊராட்சித் தலைவருக்குச் சொந்தமான 18 டிராக்டர்கள் மற்றும் 5 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் ஊராட்சித் தலைவராக இருந்து வருபவர்கள் முருகன் இவர் தனது பெயரில் கழுநீர்குளம் பகுதியிலுள்ள வண்ணான் குளத்தில் மண் அள்ளுவதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி வாங்கியுள்ளார்.

ஆனால் இந்த குளம் தொலைவில் உள்ளதால் அருகில் இருந்த அனுமதி பெறாத மற்றொரு குளமான பெரியகுளத்தில் விதிகளை மீறி 50க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுத்துள்ளார்.

இது குறித்த சமூக ஆர்வலர்கள் வட்டாட்சியருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து ஆலங்குளம் தாசில்தார் பரிமளா மற்றும் வீரகேரளம்புதூர் போலீசார் பெரியகுளம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வருவதை அறிந்த மண் அள்ளும் கும்பல் டிராக்டர்களுடன் ஓட்டம் பிடித்தது. மேலும் சுற்றி வளைத்த போலீஸார் உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த 5 பொக்லைன் இயந்திரம் மற்றும் 18 டிராக்டர்களை மடக்கிப் பிடித்தனர். 

தொடர்ந்நது அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு  வீரகேரளம்புதூர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது.

* மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்சார சட்ட திருத்த மசோதா ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்

100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவார்கள்

மின்சார சட்ட திருத்த மசோதா மாநில மின் வாரியங்களின் அதிகாரத்தை பறிக்கிறது

அரசின் கட்டமைப்புகளை தனியாருக்கு தாரை வார்க்கவே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது

மத்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

“நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார மசோதாவிற்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார்;

ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும், தனியார் துறைகள் அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக் கொள்வார்கள்”
- அமைச்சர் செந்தில் பாலாஜி

* அதிமுக ஆட்சியில் தடையில்லாமல் மின்சாரம் கொடுத்தோம்;

தற்போது, மக்கள் பாதிக்கும் வகையில் மின் கட்டணம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள்;

சாக்குப் போக்குகளை சொல்லி மக்களை அரசு திசை திருப்புகிறது, மக்கள் உணர்வுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும். - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

* காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஆடவர் ஒற்றையரில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் தங்கம் வென்று அசத்தல்

* நிதிஷ் குமார் vs பாஜக: பிஹாரில் உடைகிறது கூட்டணி; ஆர்ஜேடியுடன்  இணைந்து ஆட்சியமைக்க முடிவு

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் நாளை அவசரமாக கட்சி எம்.பி.க்களுடன் அலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒட்டி இன்று மாலையோ அல்லது நாளை காலைக்குள்ளோ அனைத்து எம்.பி.க்களும் பாட்னா தலைமை அலுவலகத்துக்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் தேஜஸ்வினி யாதவுடன் கைகோத்து ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages