அக்னிப்புரட்சி இன்றைய (10.08.2022) முக்கிய செய்திகள்.
* 889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவ பணியாளர் தேர்வாணையம்.
* முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள், எஸ்பி.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதல்வர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது
* முதல் கட்டமாக சென்னை, பெங்களூரு உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகமாகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய அளவிலான 5ஜி அலைக்கற்றையை வாங்கி உள்ளது.
இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் முடிவடைந்தது. ஏழு நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் 40 சுற்றுகளுக்குப் பிறகு ஏல தொகை ரூ. 1.5 லட்சம் கோடியை எட்டியது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்று இருந்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவிலான 5ஜி அலைக்கற்றையை வாங்கியது. மொத்த அலைக்கற்றை ஏலத்தில் அதன் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் 5ஜி சேவை செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முதற் கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. மத்திய அரசு 5G வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை ஆனால் தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அக்டோபர் மாதத்தில் 5ஜி அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 29-ந்தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நடத்தும் தொடக்க விழாவில் 5ஜி நெட்வொர்க்கை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்று பிரபல பிசினஸ் லைன் நாளிதழ் தற்போது தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நரங்களில் 5ஜி சேவை வெளியிடப்படுகிறது.
* போதை பொருள் விற்பனை, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
போதை பொருள் தடுப்பு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன்
மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் எனக்கு உறுதி அளிக்க வேண்டும் - மு.க ஸ்டாலின்
போதை என்பது தனி மனித பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை
போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும்
போதைப்பழக்கம்தான் பல்வேறு குற்றங்களுக்கும் காரணமாக உள்ளது.
போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழகம் குறைவுதான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை - முதல்வர் ஸ்டாலின்
* புதுச்சேரி பட்ஜெட்:
புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது;
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரூ.9,709 கோடி (94%) செலவிடப்பட்டுள்ளது-துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
* மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1,000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.
குஜராத் விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஆயிரம் முதலைகளை பராமரிக்க போதுமான இட வசதி உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்.
* குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுடன் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி இன்றுடன் ஓய்வு பெறும் வெங்கையா நாயுடு அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
குடியரசுத் துணைத் தலைவராக மிகச்சிறந்த முறையில் பணியாற்றி, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்த சந்திப்பின் போது வெங்கையா நாயுடு அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
* துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு;
மத்திய அரசிடம் இருந்து பட்ஜெட்டுக்கு அனுமதி கிடைக்காததால், காலவரையறையின்றி ஒத்திவைப்பு.
* போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;
நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
ஆகஸ்ட் 12 முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது
* இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படம் தோர் : லவ் அண்ட் தண்டர். மார்வெல் ஸ்டூடியோ தயாரித்திருந்த இந்த படத்தை தைக்கா வாட்டிட்டி இயக்கி இருந்தார். கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் நல்ல வசூலை தந்தது.
இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. இந்த படம் இந்தியாவில் 100 கோடி வசூலித்துள்ளதாக மார்வெல் ஸ்டூடியோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே வெளியான மார்வெல் ஸ்டூடியோவின் படங்களான அவென்ஜ்ர் இன்பினிட்டி வார், அவென்ஜர் எண்ட் கேம், ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், டாக்டர் ஸ்டேரன்ஜர் படங்களுக்கு பிறகு இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. பிரமாண்ட பாலிவுட் படங்கள் கூட வசூலில் பலமிழந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் ஹாலிவுட் படம் 100 கோடி வசூலித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
* கோவேக்ஸின், கோவிஷீல்ட் பயனாளிகளுக்கு பூஸ்டராக கோா்பிவேக்ஸ்: மத்திய அரசு ஒப்புதல்
கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கோா்பிவேக்ஸ் தடுப்பூசி தற்போது 12 முதல் 18 வயதுடைய சீறார்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தப் பரிசோதனையில், நோய் எதிா்ப்பாற்றல் அதிகரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பரிசோதனைகள் தொடா்பான விவரம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடா்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் முதல் இரண்டு தவணைககளாக கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டு செலுத்திக் கொண்டாலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு தவணைகளாகச் செலுத்திக்கொண்ட தடுப்பூசிக்கு பதிலாக வேறொரு தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாகச் செலுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி கோா்பிவேக்ஸ் ஆகும்.
* காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர் ஆவார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன். காஷ்மீர் பண்டிட்டுகளான ராகுல் பட், அம்ரீன் பட் உள்பட பல பொதுமக்களை சுட்டுக் கொன்றவன் ஆவான். பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.
* நீலகிரி: உதகை அருகே மைனலா அரக்காடு பகுதியில் தேயிலை தோட்டத்தில் விளையாடிய சரிதா என்ற 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை;
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
* 8வது முறை பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்.
ஜேடியூ-ஆர்ஜேடி-காங். கூட்டணி அரசின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு.
பாட்னாவில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பீகார் துணை முதலமைச்சராக பதவியேற்றார் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ்.
* அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் மீறப்பட்டு இருந்தால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்- சென்னை உயர்நீதிமன்றம்.
பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக வைரமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.
சட்டப்பூர்வமாக அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதா? முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா? எனவும் நீதிபதிகள் கேள்வி.
சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தால் மட்டும் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும் - நீதிபதி
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு, சிறப்பு பொதுக்குழு கூட்டம் அல்ல - வைரமுத்து தரப்பு
அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என கூறி, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அதே பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன் ? - பழனிசாமி தரப்பிற்கு நீதிபதி கேள்வி.
பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை - பழனிசாமி தரப்பு பதில்
* மாலத்தீவு, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு கோத்தபய ஓட்டம்
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு ஓட்டம் பிடிக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் அதிபரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால் வேறுவழியின்றி மாலத்தீவு வழியாக கடந்த ஜூலை 14ம் தேதி முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு ஓட்டம்பிடித்தார். இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டின் விசா விதிமுறைகளால், அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு கோத்தபய ராஜபக்சே செல்கிறார். நாளை அவர் தாய்லாந்து வந்து சேர்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
* சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான டெண்டரில் இருந்த சாதி நிபந்தனைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வாபஸ் பெற்றுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள அரசிற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் புகார்கள் பறந்தது.
மேலும், இந்த அரசு விளம்பரம் சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என்று கலாச்சார பேரவை தலைவர் சிவன் கண்டித்திருந்தார். இதனையடுத்து, சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 2001-ம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை; தற்போது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவந்த சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாரட்டி வருகின்றனர்.
* பி.எம். கிசான்: ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2,000 நிதி
சென்னை: மத்திய அரசு வழிகாட்டுதல் படி, ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது மத்திய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000 மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மத்திய அரசு 12-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஒ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்த 12 வது தவணைத் தொகையானது பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணைத் தொகை விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, இதுவரை பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
காவல்துறையினருக்கான மனநல புத்தாக்க பயிற்சிகள் முறையாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு முடித்து வைப்பு.
* இதுவரை நடந்த பயிற்சிகள் மூலம் 4,484 காவல்துறையினர் அதிக அழுத்தத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான கவுன்சிலிங்கும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது-தமிழக அரசின் பதில் மனுவில் தகவல்.
ஆளுமை வளர்ச்சி, உணர்வு மேலாண்மை, கோப மேலாண்மை, ஊடகங்களை கையாள்வது உள்ளிட்ட 12 தலைப்புகளின் கீழ் காவலர்களுக்கான புத்தக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது-தமிழக அரசு.
சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் அறிவிக்கலாம்.
இத்தகைய நடவடிக்கைகள், நமது குழந்தைகளிடம் இருந்து உரிமைகளை பறிப்பதுடன், நாடு தன்னிறைவு பெறுவதை தடுக்கும்.
வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றிவிடும்- பிரதமர் மோடி.
இயற்கையை வழிபடும் நம் நாட்டில் இயற்கையைப் பாதுகாப்பதில் உயிரி எரிபொருள் முக்கியமானது.
இதை நம் விவசாயிகள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள்- இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2ஜி எத்தனால் ஆலையை காணொளி வாயிலாக திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு.
* ரஜினிகாந்தை அச்சுறுத்துகிறதா பாஜக?- திருமாவளவன்.
ரஜினிகாந்த் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறாரோ என்று ஒரு யூகம் இருக்கிறது.
அவரை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் ஒரு கருவியாக பயன்படுத்தி தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.
ஆர்.என்.ரவி என்பதை விட அவரை ஆர்.எஸ்.எஸ்.ரவி என்றே சொல்லலாம்.
தமிழகத்துகுள் மத பிரிவினைவாத அரசியலை வலுப்படுத்தும் வேலைகளை செய்துவருகிறார்.
அதில் ரஜினியை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது- விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.
* தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு:
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள் உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.
* வேலூரில் மீண்டும் சம்பவம்….
அடி பம்பு மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரர்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் சிஎம்சி எதிரே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தையும், சாய்நாதபுரம் பகுதியில் ஜீப்பையும் அப்புறப்படுத்தாமல் சாலைப் போட்டிருந்தார்கள்.
இந்த செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியதை அடுத்து வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
தற்போது சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில், அடி பம்பை அகற்றாமலேயே, புதைத்து கால்வாய் கட்டியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
No comments:
Post a Comment