அக்னிப்புரட்சி இன்றைய (11.08.2022) முக்கிய செய்திகள்.
* மணப்பாறை: துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்து; இருவர் உயிரிழப்பு.
அரியலூரிலிருந்து சிமெண்ட் ஏற்றி சென்ற லாரியும்-தூத்துக்குடியிலிருந்து காற்றாலை ஏற்றி செல்லக்கூடிய லாரியும் மோதி விபத்து.
* பிரதமரின் வேண்டுகோளை ஏற்று 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இல்லங்களில் மட்டுமல்லாது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 5800 பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை நிலையங்களில் 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்றப்படும் - தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி அறிவிப்பு.
* காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல்.
ரஜோரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு. தற்கொலை படை தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் உயிரிழப்பு.
* செஸ் ஒலிம்பியாட் - சிறப்பாக நடத்தியதாக தமிழக அரசை பாராட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி.
'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் அலுவலகத்தில் வருமானவரித் துறையனர் நடத்திய சோதனையில்.
56 கோடி ரூபாய் ரொக்கம், 32 கிலோ தங்கம் உள்பட 390 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்.
வீடியோ: https://t.co/VTIER8xiLE
கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு மட்டும் 13 மணி நேரம் ஆனதாக அதிகாரிகள் தகவல்.
* உச்சநீதிமன்றம் வரும்போது அனைத்து வழக்கறிஞர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்து வாருங்கள் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தல்.
நீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, எனவே தயவு செய்து முகக்கவசம் அணிந்து வாருங்கள் என அறிவுறுத்தல்.
* சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.
திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை.
பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியும்.
போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - மு.க ஸ்டாலின்.
போதை பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசு முடிவு.
போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
பெற்றோர்கள்,ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும்; தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும்.
மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை.
போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது.
போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை.
போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் இடங்களை அதிகமாக கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு காவலர்களும் தனது எல்லைக்குள் போதைப்பொருள் இல்லை என உறுதிமொழி ஏற்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சென்னை அதிர்ச்சி! காரோடு பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை
காரோடு பெண்ணை கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். சென்னையில் நடந்த இந்த பயங்கர செயலில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த கும்பலை கைது செய்துள்ளனர்.
சென்னையில் போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவில் காரில் சென்றிருக்கிறார். அவர் போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி காரை வழிமறித்து இருக்கிறார்கள். இதில் பயந்து போன டிரைவர் உடனே காரை நிறுத்தி இருக்கிறார்.
பின்னர் ஆறு பேரும் காரில் அமர்ந்து கொண்டு அந்த பெண்ணை காரோடு கடத்திச் சென்று இருக்கிறார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு கொண்டு சென்று கத்தி முனையில் 6 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த எட்டு பவுன் நகையையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
இதில் இருந்து தப்பிய அந்த பெண் போரூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகார் என்பதில் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி அதில் கத்தி முனையில் பெண்ணை காருடன் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து எட்டு பவுன் நகையையும் பறித்துச் சென்ற ஆறு பேர் கும்பலை கைது செய்துள்ளனர்.
அந்த ஆறு பேரும் கஞ்சா போதையில் இந்த குற்றத்தை செய்ததாக போலீசில் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
* இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு.
இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம்- உச்சநீதிமன்றம்.
இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா.
தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியமில்லையா?
இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை- தலைமை நீதிபதி.
பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது.
இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம்" -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.
* நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் ஜகதீப் தன்கர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்பு.
* அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள்:
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்;
இரு நாட்களாக நடந்து வந்த வாதம் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு தள்ளிவைப்பு
* வேலூரில் குடிநீர் அடிபம்புடன் கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு கைது.
பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை.
* அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது.
நீதிமன்றம் என்பது சட்ட பரிபாலனை நடைபெறக்கூடிய இடம்.
பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்புகளை குறைக்க வேண்டாம்.
பொதுநல வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பிரகாஷ் கருத்து.
* அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது.
விசாரணைக்கு தடை விதிக்கவும் முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்.
ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளில் பதிவான 2 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 25க்கு ஒத்திவைப்பு.
* காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மரணம்.
மதுரை மாவட்டம் தும்மகுண்டு பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் என்ற ராணுவ வீரர் வீரமரணமடைந்தார்.
* மாணவி தொடர்ந்த வழக்கு- உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.
கல்வி உதவி தொகை பெற்ற பின் இடைநிற்றல் ஏற்பட்டதற்காக, மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல.
கல்வி உதவித் தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்.
கல்வி சான்றுகள் விற்பனை பொருட்கள் இல்லை; எனவே சான்றுகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக விருதுநகரை சேர்ந்த நர்சிங் மாணவியின் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்.
வழக்கில் முடிவு எடுக்கும் வரை தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை.
அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை உத்தரவு.
கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி என பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு உத்தரவு.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கீகாரம் ஓராண்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.
ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே இறுதிவரை அங்கீகாரம் வழங்கல்.
* விசா காலாவதி ஆனதால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே - தாய்லாந்து செல்ல இருப்பதாக தகவல்.
இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடுத்து மாலத்தீவுகளுக்கு தப்பிய கோத்தபய, பின்னர் சிங்கப்பூருக்கு சென்றார்.
தாய்லாந்தில் அவர் அரசியல் அடைக்கலம் கோரவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தகவல்.
90 நாட்கள் வரை கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தங்க முடியும்.
கடனை திருப்பி கேட்டவரை வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர்! - பரபரப்பு வீடியோ!
* திருச்சி அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்டவரை அறிவாளை எடுத்துக்கொண்டு வெட்டத் துரத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்தியா கணவரின் வெறிச்செயல் சமூக ஊடகங்களில் வீடியோவாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ: https://youtu.be/mrMST9ZkD7o
தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நித்தியா. இவரது கணவர் வெற்றிச்செல்வன். இவர் இதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கி பல வருடங்கள் கடந்தும் வெற்றிச்செல்வன் கடனை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த குணசேகரன், வெற்றிச்செல்வன் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், குணசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து குணசேகரனை வெட்ட முயன்றுள்ளார். அதை தடுக்க முயன்றவர்களையும் அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்தினார். அவர்கள் பயந்து இங்குமங்குமாக ஓடினர். ஆனாலும் விடாமல் அவர்களை துரத்திக் கொண்டே ஓடினார்.
* தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் : முதல்வர்.
உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* கனியாமூர் வன்முறையின்போது பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்களுக்கு தீ வைத்த லட்சாதிபதி என்ற இளைஞரை கைது செய்து சிறப்பு புலனாய்வுக் குழு நடவடிக்கை.
வன்முறையின்போது பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு நடவடிக்கை.
* 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும், தேசப்பற்று உணர்வை போற்றும் வகையிலும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் - சென்னை மாநகராட்சி
* மாணவி உயிரிழந்த தகவல் அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
கொரோனா காரணமாக நேரில் வந்து சந்திக்க முடியவில்லை.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
No comments:
Post a Comment