அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.08.2022) முக்கிய செய்திகள்.

* ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்பு.

பொதுமக்கள் homesesi@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கலாம்.

* நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு.

* தனியார் பால் விலை திடீர் உயர்வு
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.

தனியார் பால் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி - நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது.

ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டம்.

* 10 ஆண்டுகளாக நாட்டை குட்டிச்சுவராக்கிய அதிமுகவின் கல்லாப்பெட்டி சிங்காரம், இப்போது திமுகவின் திட்டங்களை குறை சொல்கிறார் - திருச்சியில் நடைபெற்ற வேளாண் உட்கட்டமைப்பு மாநாட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச்சு.

திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த ஆட்சி காலங்களில் விவசாயிகள் நாள்தோறும் வீதியில் இறங்கி போராடும் சூழல் இருந்தது. இப்போதைய திமுக அரசு விவசாயிகளின் துயரை துடைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

* தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட நெய்தல் உப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* 2022 ஆம் ஆண்டிற்கான புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த 5 காவலர்கள் உட்பட 151 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* அக்டோபர் 1, 2022 முதல் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர வருமான வரி செலுத்துவோருக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவிப்பு.

01.10.22 தேதிக்கு முன்னர் இத்திட்டத்தில் இணைந்த வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் அறிவிப்பு.

* இன்னும் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற காவலர்களை தங்கள் உயர் அலுவலர்களின் வீட்டில் தோசை, சப்பாத்தி சுட வைத்துள்ளனர்.

அடிமைகள் போல நடத்தப்படும் ஆர்டர்லி முறை தமிழகத்தில் பின்பற்றப்படுவது வெட்கக்கேடானது-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?

ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசிடமிருந்தோ, டிஜிபியிடமிருந்தோ அந்த வார்த்தை வருவதில்லை.

ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது -சென்னை உயர் நீதிமன்றம்.

வரும் சுதந்திர தினத்திற்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும்.

உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை அமல்படுத்த, எடுத்த நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியமலையில் 1,197 சதுர கிமீ யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு.

நீலகிரி, கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனைமலையில் உள்ள நிலையில் தற்போது அகஸ்தியமலையில் மற்றொரு புதிய யானைகள் காப்பகம்.

* இந்த ஆண்டுக்கான ‘நல் ஆளுமை’ விருதுக்கு தேர்வானவர்களின் விவரங்கள்:

செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்டு,வாழ்க்கை தரத்தை உயர்த்திய திருவள்ளூர் ஆட்சியருக்கு விருது.

நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொண்ட திண்டுக்கல்,சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது.

திருநெல்வேலியில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்ததற்காக அம்மாவட்ட ஆட்சியருக்கு நல் ஆளுமை விருது.

* கோவை ஈஷா யோகா மையம் BSNL நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பதிலாக 40 ஆயிரம் செலுத்தினால் போதும் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவு  ரத்து-BSNL நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உத்தரவு - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்.

* ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட செல்வகுமார் என்வருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5.6 கோடி அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு.

2014 ம் ஆண்டு சென்னிமலையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி 140 பேரிடம் ரூ.5.56 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

* பொறியியல் மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் இருந்து பாடத்திட்டம் மாற்றம்

பல்கலைக்கழக கல்வி குழுவின் ஒப்புதல் பெற்று இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

தொழில்துறை தேவைக்கேற்ப பாடத்திட்டங்கள் வடிவமைப்பு - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்

* ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா

தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தண்ணீர் விநியோகிக்கும் வாட்டர் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவு

பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் தான் அடைக்கப்பட்டு, விற்கப்படுகின்றன. உடலுக்கு தீங்கு என தெரிந்தும், அதில் வரும் உணவுப்பொருட்களை உண்கிறோம்-நீதிபதிகள் கவலை

உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்யத் தயார். அரசின் விளக்கத்தை தெரிவிக்க அவகாசம் வேண்டும் -  தமிழகஅரசு

* தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களுக்கு  சிலைகள் வைப்போம் - திருச்சி ஶ்ரீரங்கத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேச்சு.

* J&J பேபி டால்கம் பவுடர் விற்பனை நிறுத்தம்.

அடுத்தாண்டு முதல் உலகளவில் பேபி டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு.

டால்கம் பவுடரால் புற்றுநோய் ஏற்படுவதாக அந்நிறுவனத்திற்கு எதிராக 38,000 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடருக்கு மாறுவதாக ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு.

* 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்

மாநில கல்விக் கொள்கை குழு கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை - கல்வித்துறை அதிகாரிகள்

* பட்டியலின மக்கள் பிரதிநிதிகள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்னைகள் நடக்கலாம் என தகவல் பெறப்பட்டுள்ளது.!

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

வேண்டுமென்றே அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்.! - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

* மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (12-ந் தேதி) விமரிசையாக நடந்தது.

* 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி

* வரும் சுதந்திர தின விழா, ஜாதி பாகுபாடின்றி, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொடியேற்றப்படுவதை உறுதி செய்யக் கோரி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக முதன்மைச் செயலர் இரா.அன்பு, ஐ.ஏ.எஸ்., கடிதம் வழங்கினார்.

* சுதந்திர தின அமுதப்பெருவிழா - மூவண்ணக்கொடி ஒளியில் மிதக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

* முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை

ரூ.14.96 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள், 1.68 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி பொருட்கள், ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை

கிரிப்டோ கரன்சியில் ₨20 லட்சம் அளவுக்கு முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளது - லஞ்ச ஒழிப்புத்துறை

* நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடைபெற்ற தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages