அக்னிப்புரட்சி இன்றைய (16.08.2022) முக்கிய செய்திகள்.
* மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக மேலும் 3 பெண்களை கைது செய்தது போலீஸ் - ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ரத்து செய்தது ஃபிபா.
கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ரத்து என தகவல்.
அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய முடிவு.
* 1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work) தரக்கூடாது.
சென்னை உயர்நீதிமன்றம் வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும்- முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு.
* ஆரணி : கோவில் திருவிழாவில் கபடி வீரர் வினோத்குமார் கரணம் அடிக்கும் போது மயக்கமடைந்தார்.
வீடியோ: https://t.co/rPpbxNdCfh
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
* பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
வரும் 20 முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும்.
25ம் தேதி முதல் பொதுப்பிரிவு களுக்கான கலந்தாய்வு.
நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைப்பு.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைப்பு.
மாற்று தேதி விரைவில் தெரிவிக்கப்படும்- அமைச்சர் பொன்முடி தகவல்.
* நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்யவதில் கூட பிரச்சினையா?
சிவகாசி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள நீர்நிலை கண்மாயில் தகனமேடை அமைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.
நீர் நிலையை என மனுதாரர் கூறியுள்ள இடத்தை வகைபடுத்த வில்லை. அதற்கு முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது ஏற்புடையது அல்ல- நீதிபதிகள்
சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த பால்பாண்டி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
* யுவான் வாங்-5 உளவு கப்பல் இன்று ஹம்பாத்தோட்டை துறைமுகத்துக்கு வந்துவிட்டது..
22-ந் தேதி வரை அது அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த 7 நாட்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் சீனா இதையெல்லாம் நிச்சயம் மதிக்காது. நிச்சயமாக அது உளவு தகவல்களை சேகரிக்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது. ஆனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் மூலம் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
விண்வெளி ஆய்வுக்கு மட்டுமே இந்த கப்பல் பயன்படுத்தப்படும் என்று பொதுவாக சீனா சொல்லிக் கொள்கிறது. ஆனால் முழுக்க முழுக்க உளவு பார்க்கும் வேலையைத் தான் இந்த கப்பல் செய்கிறது. இதே போன்று 7 உளவு கப்பல்களை சீனா வைத்திருக்கிறது. அந்த நாட்டிடம் உள்ள மிகப் பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல் தான்.
இதனால்தான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் இருக்கிறது.
எனவே இந்த உளவு கப்பல் சேகரிக்கும் தகவல்கள் அனைத்துமே சீனாவின் ராணுவ புலனாய்வு அமைப்புக்கு அடுத்த நிமிடமே சென்று சேர்ந்துவிடும். இதுதான் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இந்தியா உறுதியாக கருதுகிறது.
* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்
டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை
* நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.
புலி திரைப்படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி அபராதம் விதித்திருந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் விஜய்.
* சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற்றால் போதுமானது - நீதிபதி
வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு
* ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது பங்கேற்பார் என பிசிசிஐ தகவல்.
வாஷிங்டன் சுந்தருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியிருந்தார்.
* சென்னை, அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளும் மீட்பு.
ஏற்கனவே 28 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3.7 கிலோ தங்கம் மீட்பு.
கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகையில், 700 கிராம் மட்டும் உருக்கிய நிலையில் மீட்பு.
* ஜம்மு - காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்து.
ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 7 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு - 8 பேருக்கு தீவிர சிகிச்சை.
* அரசுப் பணியில் இருந்த போது தந்தை உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் பணிக் கோரி மகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது.
கருணை அடிப்படையிலான பணி என்பது இறந்தவரின் குடும்பத்தின் உடனடி பொருளாதாரத் தீர்வுக்காகத்தான்- உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* சென்னை கலைவாணர் அரங்கில்
விசிக தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி மணிவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார் திருமாவளவன்.
இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன்.
கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் - முதலமைச்சர் பேச்சு.
ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான்.
இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான்; நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன்.
பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது;
டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்.
ஒன்றிய அரசு - மாநில அரசு உறவு மட்டுமே இங்கே உள்ளது; திமுகவுக்கும் பாஜகவும் எந்த உறவும் இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* கணவரை வீட்டை விட்டு வெளியேற்றலாம்:
கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படும்போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும் என்றால், அதற்கான உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாம்.
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கையில், கணவர் வீட்டை விட்டு வெளியேற கேட்டு மனைவி மனுதாக்கல் செய்ததில் குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு.
* காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு எஸ்.ஐ.க்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுப்பு வழங்க உத்தரவிட்டு அரசாணை.
No comments:
Post a Comment