அக்னிப்புரட்சி இன்றைய (17.08.2022) முக்கிய செய்திகள்.
* ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக பதிலடி!
திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட திமுக செய்துகொள்ளாது. டெல்லிக்கு காவடி தூக்கவா செல்கிறேன் ?கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்?கலைஞர் பிள்ளை நான் " - தி மு க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்
எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் தி மு க உறுதியாக இருக்கும் என்பதும் அறிவோம். ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை கொண்ட பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள தி மு க வால் இயலாது என்பதும் அறிவோம். தமிழினத்தை கொன்று குவிக்க உதவிய போது டெல்லி காங்கிரசிடம் தி மு க, கை கட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும். இந்திரா காந்தி அவர்களை புடவை கட்டிய ஹிட்லர் என்று கூறி விட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும்.
நாராயணன் திருப்பதி, பாஜக செய்தித்தொடர்பாளர்
ஸ்டாலின் பேசிய வீடியோ: https://youtu.be/CeBD4G6ss2c
* திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதியுடன் திருவிழா தொடங்கியது.
* டெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
* மணிவிழா காணும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
* அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது
அதிமுகவில் ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இருவரும் சேர்ந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும்
ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லாது; மீண்டும் பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் -உயர்நீதிமன்றம்.
* தீர்ப்பு வெளியானதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஓபிஸ் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
* குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம், இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது, தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளேன்- டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளேன்.
பிரதமரை சந்திக்கும் போது நீட், புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளேன்-டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
* தர்மத்தை நம்பினேன், நீதிமன்றத்தை நம்பினேன்.
அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.
ஒன்றரை கோடி தொண்டர்களை அரவணைத்து செல்வேன்- ஓபிஎஸ் அறிக்கை.
* டெல்லியில் பிரதமர் மோடி உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்தார்.
முக்கிய விவகாரங்கள் குறித்து கோரிக்கை மனுவும் அளித்தார்.
* மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் தனது ஜாமின் மனு மீது முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்-கனியாமூர் பள்ளி நிர்வாகி ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில் காவல்துறை வரும் 29ஆம் தேதி தாக்கல் செய்யும் அறிக்கையை பொறுத்து, முடிவெடுக்கப்படும் - உயர்நீதிமன்றம்.
* மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் - கனியாமூர் தனியார் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்.
பள்ளியின் கட்டடங்களில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை - புகார் மனு.
பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை வழக்காக பதிவு செய்தது, தேசிய மனித உரிமை ஆணையம்.
* அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பின் முழு விபரங்கள் வெளியானது:
பொதுக்குழு தகுதியான நபரால் கூட்டப்படவில்லை.
ஒரு கட்சியின் உறுப்பினர் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால் அதில் தலையிட முடியாது என நீதிமன்றம் மறுக்க முடியாது.
பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் அனுமதி இல்லாமல் கூட்ட முடியாது.
தற்காலிக அவைத்தலைவரால் கூட்டத்தை கூட்ட முடியாது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஜூன் 23ல் காலவதியாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; கற்பனையானது, அடிப்படை இல்லாதது. கட்சி தலைமை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
ஆனால், தேர்வு நடைமுறை மீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிட முடியும்.
செல்லாத பொதுக்குழு முடிவுகளை அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்ய கட்சி விதிகளில் திருத்தம் செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட எந்த தடையும் இல்லை.
ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பது பற்றி எந்த புள்ளி விபரமும் இல்லை.
திடீரென ஒன்னரை கோடி தொண்டர்கள் ஒற்றை தலைமை என முடிவு எடுப்பது எப்படி?
ஒன்னரை கோடி தொண்டர்களின் மனநிலையை பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேர் பிரதிபலித்தார்களா என்பது கேள்வி?
* அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம்:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்குப் புதிய துணை வேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஜி.ரவி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு டி.ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு என்.சந்திரசேகர் ஆகியோர் புதிய துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தின் பாரம்பரிய சிறுதானியங்கள் பற்றும் நெல் வகைகளை நினைவுப் பரிசாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை:
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு
* ஆன்லைன் ரம்மி - முதலமைச்சரின் நாளை ஆலோசனை.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு.
ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து கருத்து கேட்கப்பட்ட நிலையில், முதலமைச்சருடனான ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
* Chinese vessel Yuan Wang 5 - சீன கப்பல் யுவான் வாங் 5
இலங்கைக்கு வந்த சீனா உளவு கப்பல் யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல், கிட்டத்தட்ட இந்தியாவை உளவு பார்க்க மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல.
தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி விமான நிலையம், கூடங்குளம் அணு மின் சக்தி நிலையம், நாங்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் பாதுகாப்பு தளம், மகேந்திர கிரியில் உள்ள ஹெவி வாட்டர் ப்ராஜெக்ட், கல்பாக்கம் அணு மின் சக்தி நிலையம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம் மீன் பிடி துறைமுகம், கடலூர் துறைமுகம், கிருஷ்ண பட்டிணம், ஸ்ரீஹரிகோட்டா, விசாகப்பட்டிணம் என பல கேந்திர பகுதிகள் மேற்கு முகமாக கேரளத்தில் தும்பா, கொச்சி துறைமுகம், கன்டலா, மங்களூர், ஏன் பம்பாய் முதல் இமயமலை வரை கூட உளவு பார்க்க முடியும். இது புவியரசிற்கு நல்லதல்ல.
இந்தக் கப்பலில் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய பாலிஷ்டிக் ஏவுகணைகளை ஏவுவதற்கு ஏற்ப வசதிகள் எல்லாம் உள்ளன. விண்வெளி மட்டும் சேர்க்கை கோள்கள் உளவு பார்க்கவும் கடல் ஆழத்தை பார்க்கவும் நீர் மூழ்கி கப்பல்கள் எங்கெல்லாம் இருக்கின்றன உள்ளிட்டவற்றை உளவு பார்க்கும் இந்த யுவான் வாங் கப்பல் மூலமாக அறிய முடியும்.
இந்த சீன உளவு கப்பல் 728 அடி நீளமும் 85 அடி அகலமும் உடையது. சீனாவில் லாங் மார்ச் என்ற ராக்கெட்டை ஏவ இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டது. அப்படி ஒரு வீரியமான சக்தி மிக்க கப்பல் இங்கு வர வேண்டிய அவசியம் என்ன?
* ஜூனியர் பிரிவு இறகுப்பந்து போட்டியில், உலக அளவில் முதலிடம் பிடித்த தமிழகத்தை சார்ந்த சங்கர் முத்துசாமி அவர்களுக்கு இன்று (17.08.2022) அடையார் கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்று, தமிழ்நாடு இறகு பந்து கழகம் சார்பில் 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி சிறப்பித்தேன்.! பாமக தலைவரும் தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்
இந்நிகழ்வில் தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தின் செயலாளர் அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் அசோக் சிகாமணி அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.!
* இந்தியாவின் மிக நீளமான ரயில்... 295 பெட்டி, 6 இன்ஜின், 3.5 கிமீ நீளம்..!
Watch: https://youtu.be/AC07y6egzOo
உலகிலேயே மிக நீளமான 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு ரயில் இயங்கி வரும் நிலையில் இந்தியாவின் மிக நீளமான ரயில் 3.5 கிலோ மீட்டர் நீளத்தில் சுதந்திர தினத்தன்று இயக்கப்பட்டது.
சூப்பர் வாசுகி என்ற இந்த ரயிலில் 295 வேகன்கள் மற்றும் 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இந்த ரயிலில் 27 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றப்பட்டது என்பதும் இதுவரை இயக்கப்பட்ட ரயில்களில் இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூப்பர் வாசுகி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் செல்லும் வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment