அக்னிப்புரட்சி இன்றைய (18.08.2022) முக்கிய செய்திகள்.
* ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் & சென்னைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இளங்களை படிப்புகளில் சேர unom.ac.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.
* ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு
5 முறைக்கு மேல் எடுக்கும் ஓவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
* கேரளா: தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையை போல கேரளாவில் அரசு சார்பிலும் ஆன்லைன் டாக்சி சேவை தொடக்கம்.
'கேரளா சவாரி' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இ-டாக்சி சேவை நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.
ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை.
* ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு.
இணைந்து செயல்பட ஒ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.
பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீது திங்களன்று விசாரணை.
* அதிமுகவின் நலன் கருதி ஒன்றிணைந்து செயல்பட பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு!
இதுவரை ஏற்பட்ட கசப்புகளை மனதில் வைக்காமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - ஓபிஎஸ்
அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது;
இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம்.
“மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதது தான் எங்கள் நிலைப்பாடு
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்”- ஓபிஎஸ் பேட்டி
“யார் வேண்டுமானாலும் இணையலாம் என்பது சசிகலா, டிடிவி.தினகரனையும் சேர்த்துதான் கூறுகிறோம்" - ஓபிஎஸ்
* வங்கிக்கொள்ளை: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டபகலில் புகுந்த கும்பல், காவலாளி, ஊழியர்களை கட்டிப் போட்டு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 32 கிலோ நகைகளை கொள்ளை அடித்தது.
இது தொடர்பாக, அந்த வங்கியில் பணிபுரிந்த முருகன் உள்ளிட்ட குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அச்சரப்பாக்கம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்க்கு இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
* பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர்.
இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், தமிழக மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை நோக்கி முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், பாலியல் ரீதியாக சைகை காட்டுதல், புகைப்படம் எடுத்தல் போன்றவை செய்யும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம்.
நடத்துநர்களின் எச்சரிக்கையை மீறி செயல்படும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு விடுப்பார், யாரை எதிர்த்து தர்ம யுத்தம் சென்றாரோ அவருக்கும் சேர்த்தே அழைப்பு விடுக்கிறார் - எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.
அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம்: செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது - ஈபிஎஸ்.
நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன்.
எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை - ஈபிஎஸ்.
தொண்டர்கள் பலம் ஓபிஎஸ்-க்கு இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே.
அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதனை தடுக்கும் போது தான் சில பிரச்னைகள் உருவாகின்றன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்குப் பின் இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ல் ஒன்றாக இணைந்தோம்.
எப்படி இணைய முடியும்?
எந்த அடிப்படையில் இணைப்பு பத்தி பேசுகிறார்?, கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர், அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும் ?-இபிஎஸ்.
கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான், திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார்.
பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரம். தான், அவர் பதவிக்கு வரவேண்டுமென்றால் என்ன வேண்டுமானும் செய்வார்- இபிஎஸ்.
* 10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு. - ரஷ்ய அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு.
ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள்தொகை சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல.
ரஷ்யாவில் இதற்கு முன்னர் 1940 களிலும் மக்கள்தொகை பெருக்கத்தை உண்டுபண்ண இந்தத் திட்டம் அமலில் இருந்தது.
* இரயில்வே நிர்வாகம் விளக்கம்
இரயிலில் 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இவை முற்றிலும் தவறானவை, ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை,
பயணிகள் விரும்பினால்,
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக் கொள்ளலாம்,
தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக் கொள்ளலாம்
* அமைச்சர் வாகனம் மீது காலணி வீசிய வழக்கில் 3 பேரின் முன் ஜாமின் மனுவுக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு.
தேசியக்கொடி பறந்த வாகனத்தின் மீது காலணி வீசியது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்.
மூவரும் அரசு பிரதிநிதியை அவமானப்படுத்தி உள்ளனர்: சம்பவத்தன்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது - அரசு தரப்பு.
வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* சென்னை அரும்பாக்கம் ஃபெட் வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம்.
அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டிலிருந்து 3.5 கிலோ நகைகள் பறிமுதல்.
அமல்ராஜ் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட சந்தோஷ்க்கு உறவினர் என தகவல்.
* மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் என்பவர் வெட்டிக்கொலை.
சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது. வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம்.
* கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யபட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி- விழுப்புரம் நீதிமன்றம்.
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17 போலீசார் மீது நடவடிக்கை.
அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை.
எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.
கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர்.
அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.
தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது.
போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்- அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்.
ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.
* துப்பாக்கிச்சூடு - உத்தரவிட்டது யார்?
துணை தாசில்தார்கள் சேகர், சந்திரன், கலால் அலுவலர் கண்ணன் ஆகியோரிடம் போலீசார் விருப்பம்போல உத்தரவு பெற்றுள்ளனர் - விசாரணை ஆணையம்
துணை தாசில்தார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன்.
வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார்- நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்.
2018 ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
* நெல்லை கண்ணன் திருநெல்வேலி நெல்லையப்பருக்கு பக்கத்து வீட்டுக்காரர்...
ஆனால், நெல்லையில் மட்டுமல்லாமல்,
தமிழ்நாடு முழுவதும் அறிந்த பிரபலம் ஆவார்..
காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர்...
அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டதால் நாடறிந்தவரானார்..
பிறந்தது 1945"ஆம் வருடம் ஜனவரி 17ம் நாள்.. தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை, தாய் முத்து லக்குமி.
கண்ணனுடன் உடன் பிறந்தவர்கள் எட்டுப்பேர்... பாரம்பரிய விவசாயக் குடும்பம்...
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட கண்ணன்.. பாரதி கவிதைகள், கம்பராமாயணம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர்...
இவரது மேடைப் பேச்சைப் போலவே இவரது கோபமும் நெருங்கிய வட்டாரத்தில் புகழ் பெற்றது...
70-களில் தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரே காங்கிரஸ் பேச்சாளர் இவர்தான்...
அரசியல் மேடைகளில் ஆன்மீகமும், ஆன்மீக மேடைகளில் அரசியலும் இவருக்கு கைவந்த கலை...
இப்போது ‘சோலிய முடி’ பேச்சைப்போல பேசி விவாதப் பொருளாவதும் புதிதல்ல... இப்படி பல சர்ச்சைக்குரிய பேச்சுக்களையும் பேசி சிக்கியிருக்கிறார்..
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்....
கேரளாவின் ஆண்டனி,..
இன்றைய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இவரது நண்பர்கள்.
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போதெல்லாம் இவரைத் தான் நெல்லையில் நிற்க வைப்பார்கள்...
வலுவான கூட்டணி அமையும்போது கண்ணனை ‘கை’ விட்டு விடுவார்கள்.
மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி இருவராலும் மதிக்கப்பட்ட ஒரே காங்கிரஸ் தலைவர் இவர்தான்.
தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது ராகுல் காந்தி இவர் வீட்டில் வந்து மதிய உணவு சாப்பிட்டதுண்டு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் அவர் பாளையங்கோட்டையில் பேசுவதாக இருந்தது...
அவர் வரும் வரை பேசுங்கள் என்று கண்ணனை மேடை ஏற்றி விட்டார்கள்.
சிவாஜி வருவதற்கு 5 மணி நேரம் தாமதமானது... அதுவரை கண்ணன் பேசிக்கொண்டே இருந்தார்... கூட்டத்தைக் கட்டிப்போடுவதில் கண்ணன் சாமர்த்தியசாலி.
வீடியோ: https://youtu.be/jG7XExWPqNc
இருப்பினும், இவருடைய அரசியல் மேடை பேச்சை விட, இலக்கியம் மற்றும் நகைச்சுவை பேச்சுக்களே மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது.
* 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.
190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30.5 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment