அக்னிப்புரட்சி இன்றைய (19.08.2022) முக்கிய செய்திகள்.
* பீகாரில் 8 மாதங்களாக செயல்பட்டு வந்த போலி காவல் நிலையம்.
தனி அலுவலகம் அமைத்து கடைகளில் தினசரி மாமூல் வாங்கி வந்தது அம்பலம்.
விசாரணையில் 6 பேர் தலா 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியதாக தகவல்.
உயர் அதிகாரி போல் நடித்து 6 பேரிடம் மோசடி செய்தவரை தேடுகிறது நிஜ போலீஸ்.
* வர்ண விளக்குகளால் மதுரா கிருஷ்ணர் ஆலயம் ஜொலிக்கிறது.
இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து.
* மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமானது சவுதி அராம்கோ.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 48 பில்லியன் டாலரை நிகர லாபமாக ஈட்டியதன் மூலம் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.332 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
* சென்னை: வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த விவகாரம்; அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவு.
* மின்சார கொள்முதல் - விற்பனைக்கு தடை
மின்சாரம் வாங்க, விற்க தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்பட 13 மாநிலங்களுக்கு தடை
13 மாநிலங்களும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிலுவை பாக்கி
நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு நடவடிக்கை
* தர்மபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நடைப்பயண பிரச்சாரம்.
தர்மபுரியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்பும் வகையில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் கூட குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அந்த நிலை விரைவில் தமிழகத்தில் ஏற்படும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
* வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் - துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
சென்னை, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
* சென்னை அரும்பாக்கம் வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் ஒரு தனியாா் வங்கி கிளையில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இச் சம்பவம் தொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கொள்ளையா்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினா் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக வேலை செய்த கொரட்டூரைச் சோ்ந்த முருகன் என்பவா்தான் கொள்ளைக் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு, சதி திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
* டோலோ மாத்திரையை பரிந்துரைக்க ரூ.1,000 கோடி லஞ்சம்.
மக்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டோலோ மாத்திரையைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவா்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசப் பொருள்களை தயாரிப்பு நிறுவனம் லஞ்சமாக வழங்கியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ தொண்டு அமைப்பு (என்ஜிஓ) குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் மூட்டை மூட்டையாக விற்பனையான டோலோ மாத்திரைகளுக்குப் பின்னால் மக்களின் காரோனா பயம் மட்டும்தான் இருந்தது என்று நினைத்திருந்த நேரத்தில், அதனைப் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடிக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.
* சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பர திட்டம்
மாநகர போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னையில் இயங்கி வரும் மாநகர பேருந்துகளில் பல்வேறு வகையான விளம்பரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் இலாபம் இல்லாமல் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம்
வரும் 24 முதல் 26ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார். முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்…
* காதலியின் ஹேண்ட் பேக்கில் 'உச்சா' போன காதலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர், காதலி தன்னுடன் சண்டை போட்டதால் அவரது விலை உயர்ந்த ஹேண்ட்பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். ரூ 1.5 லட்சம் மதிப்புள்ள தனது ஹேண்ட்பேக்கில் சிறுநீர் கழித்ததற்காக காதலனிடம் நஷ்ட ஈடு கேட்டு காதலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் குற்றம் நிரூபணமானதால் காதலனுக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
* என்னமா இப்படி பண்றீங்களேமா! - தென் கொரியாவை எச்சரிக்கும் கிம் ஜாங் உன் தங்கை
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு பலூன் மூலம் கொரோனாவை பரப்புவதாக வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் குற்றம்சாட்டியுள்ளார். இதை தென்கொரியா மீண்டும் தொடர்ந்துகொண்டே இருந்தால் தக்க பதிலடி கொடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* எனக்குள்ள அதே உரிமை உங்களுக்கும் உள்ளது: வங்கதேச பிரதமர்
வங்கதேசத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா பேசியதாவது: அனைத்து மதத்தினரும் சம உரிமையுடன் வாழவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் (இந்துக்கள்) இந்நாட்டின் மக்கள், உங்களுக்கு இங்கு சம உரிமை உள்ளது. எனக்குள்ள அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நீங்கள் இந்நாட்டு குடிமக்கள் என நினைக்க வேண்டும். நீங்கள் சம உரிமையை அனுபவிக்க வேண்டும்.
* காவல் ஆய்வாளர் அமல் ராஜுக்கு இது கலவாடபட்ட நகை என்பது தெரிந்தும் அவர் 3 நாட்கள் வைத்து இருந்தது தவறு.
விசாரணை அடிப்படையில் அமல்ராஜ் எந்த விதமான சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என தெரிய வந்துள்ளது-ஃபெட் வங்கி கொள்ளை குறித்து கூடுதல் காவல் ஆணையர் அன்பு.
களவாடப்பட்ட நகைகளை உருக்க வேண்டும் என ஒரு இயந்திரம் வாங்கி உள்ளனர்.
அந்த மெஷினை வாங்க உதவியாக இருந்தவர் ஸ்ரீவட்சன். அதில் தான் அவர் சம்பந்த பட்டுள்ளார்- கூடுதல் காவல் ஆணையர் அன்பு.
No comments:
Post a Comment