அக்னிப்புரட்சி இன்றைய (21.08.2022) முக்கிய செய்திகள்.
* வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த சென்னை அண்ணா நகரில் “Happy Streets” நிகழ்ச்சி.
குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை "Happy Streets" நிகழ்ச்சி.
சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விளையாட்டு, பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
* 92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
tnpsc.gov.in இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
எனக்கு 70 வயது ஆனாலும், நானும் எனது மகனும் அண்ணன், தம்பி போல் இருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்.
உடற்பயிற்சி செய்ததால் தான் என்னால கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடிந்தது.
சென்னை அண்ணா நகரில் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த ‘Happy Streets' நிகழ்ச்சியை பார்வையிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
* நீங்கள் நடத்திய ரெய்டுகள் மூலம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்களா?
“நான் டெல்லியில் தான் இருக்கிறேன்.எங்கே வரவேண்டும்? சொல்லுங்கள் பிரதமர் மோடி”
பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றுக்கு தீர்வு காணக்கூடிய ஒரு தலைவரை நாடு தேடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிரதமர் யாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவது என்பதை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறார்.
2024ல் பொதுமக்கள் இவர்களுக்கு (பாஜகவுக்கு) 'லுக் அவுட் நோட்டீஸ்' கொடுப்பார்கள்- டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா.
* பல்கலை. துணை வேந்தர்கள் நியமனம் குறித்த சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார்.
அரசை விட தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இது.
மாநிலப் பல்கலையில், ஜனநாயக விரோதமான அரசியலை புகுத்துவதே ஆளுநர்தான்.
துணை வேந்தர்களுக்கு தனி மாநாடு நடத்துவது, உயர்கல்வித் துறை அமைச்சரையே ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்துவது என தனி ராஜ்ஜியம் நடத்த முயன்றார்- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
* காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3வது நாளாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நடைபயணம்.
தருமபுரி அடுத்த கம்பைநல்லூர், மொரப்பூர், ஆரூர், கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபயணம்.
* தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.
இன்று காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல்.
* காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்.
புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்றக்கோரி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதால் பரபரப்பு.
காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதியில் வெளியேறினார்.
* நாசாவின் நிலவு பயண திட்டம்: இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு
அமெரிக்காவில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இந்தியரான அமித் பாண்டே, நாசாவின் நிலவுப் பயணத் திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்டில் பிறந்த அமித் பாண்டே, வாரணாசி ஐஐடியில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மூத்த விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்ட பாண்டேவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
* தமிழ்நாட்டிற்கு மேலும் 8 அகதிகள் வருகை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்கின்றனர். அந்தவகையில் இதுவரை தமிழ்நாட்டிற்கு 134 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில், தற்போது மேலும் 8 பேர், 2 மாத கைகுழந்தையுடன் தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் தீடையிலிருந்து மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
* மதுபோதையில் குத்தாட்டம்: பின்லாந்து பிரதமருக்கு போதை மருந்து சோதனை
பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பெண் பிரதமராக சன்னா மரின் பதவி வகித்து வருகிறார். அண்மையில், பிரதமர் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக பாடி, நடனம் ஆடும் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மதுபோதையில் நடனமாடியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து அவருக்கு போதை மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. 1 வாரத்தில் முடிவு தெரியும்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
* யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை - மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்ட அறிவிப்பு.
* சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - விமான சேவை பாதிப்பு
துபாய், பக்ரைன் மற்றும் லக்னோ விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்ற விமானங்களும் தாமதம்
No comments:
Post a Comment