அக்னிப்புரட்சி இன்றைய (22.08.2022) முக்கிய செய்திகள்.
* டாக்டரை தாக்கிய முதலமைச்சர் மகள் - வைரல் வீடியோ!
Watch: https://youtu.be/tZavX4iLhBE
மிசோரம் முதலமைச்சர் மகள் மிலாரி சாங்டே. இவர் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.
முன் அனுமதி இல்லாததால் மருத்துவர் முதல் மந்திரியின் மகளைச் சந்திக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மகள் டாக்டரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதால், முதலமைச்சர் ஜோரம்தங்கா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
* ஹிமாச்சலில் தொடரும் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஹிமாச்சல பிரதேசத்தில் பலத்த மழை தொடர்வதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 22 பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் ஆறு பேரை காணவில்லை.
ஹிமாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு, மழை கொட்டுகிறது. வரும் 28ம் தேதி வரை மிக பலத்த மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்றும் பலத்த மழை நீடித்தது. நிலச்சரிவும் ஏற்பட்டது. மண்டி, சம்பா, காங்ரா ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டி பகுதியில் ஆறு பேரை காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
* ராஜஸ்தான் மாநிலம் பிகானருக்கு வடமேற்கே அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிகானரில் இருந்து 236 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு.
* துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்- டிஎன்பிஎஸ்சி.
துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 இடங்கள் என குரூப் 1 பதவியில் அடங்கிய 92 காலி பணியிடங்கள் இதில் அடங்கும்.
தேர்வுக்கு இணையதளம்(www.tnpsc.gov.in) வாயிலாக விண்ணப்பித்தலும் தொடங்கி நடந்து வருகின்றது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
குரூப் 1 தேர்வுக்கு இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இணைய வழி விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது.
* புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
முதல்வரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.
கல்வித்துறையுடன் இணைந்துள்ள விளையாட்டு, இலைஞர் நலன் துறைக்கென தனி அமைச்சகம்;
இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.
காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ரூ.80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும்.
காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்
மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும்.-முதல்வர் ரங்கசாமி.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் ₨
ரூ.16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும்.
வாடகை இடங்களில் செயல்படும் நூலகங்கள் அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும் - முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் தலா ரூ. 1000 உதவித்தொகை
சென்னை- புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை.
காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை-முதலமைச்சர் ரங்கசாமி.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 21 முதல் 57 வயது உள்ள இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 - வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு.
புதுச்சேரியில் 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
* தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்.
ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
* கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு.
தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் 6 பேர் கொண்ட குழு நகைகளை ஆய்வு செய்து வருகிறது.
* நடப்பாண்டில் 3வது முறையாக உலக சாம்பியனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்
கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அசத்தினார்.
பிரதான போட்டி 2-2 என டிரா ஆனநிலையில் டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தினார்;
நடப்பாண்டில் மூன்றாவது முறையாக உலக சாம்பியனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்தார்.
* நெல் சாகுபடி உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை: மத்திய அரசு
நெல் சாகுபடி உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் சார்பில் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2021-2022-ல் நெல் சாகுபடி பரப்பு 22.05 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
* இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை - சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
“எண்ணி ஏழு நாள்" என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார்.
பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.
பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பிய வழக்கு.
* இந்தியாவின் முக்கிய தலைவர்களை குறிப்பாக ஆளும் கட்சி தலைவர்களை கொல்ல திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு நிறுவனம் FSB தெரிவித்துள்ளது.
* கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது.
நேரடி நியமனம் குறித்து மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அறிக்கை.
* மாநிலம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன - சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்.
மலைப்பகுதிகளில் குறைவான கடைகளே இருப்பதால், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவது எளிது - டாஸ்மாக் நிர்வாகம்.
அரசின் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்ற உதவி வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அறிவிப்பாணையாக வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
* நிறுத்தியிருந்த பைக் மேலேயே சாலை போடுவது, ஜீப்பை அகற்றாமல் ரோடு போடுவது, அடிபம்புக்கு மேலேயே கான்கிரீட்டை கொட்டி கால்வாய் அமைப்பது போன்று வேலூர் மாவட்டத்திலும்,
கழிவுநீர் கால்வாயில் சாக்கடையை அகற்றாமல் கான்கிரீட் போடுவது போன்று கரூர் மாவட்டத்திலும்,
தொடர்ச்சியாக மக்களிடமிருந்து புகார்கள் எழுந்தபோதும் எந்தவித கவலையுமின்றி கும்பகோணத்தில் சாலையின் நடுவில் இருந்த எட்டு மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அமைத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
* தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை
சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
நகைக்கடை திருட்டு வழக்கில் ₹2 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், ரோகிணி மீது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை.
* கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவக்குழு.
மாணவியின் உடல் 2 முறை கூராய்வு செய்யப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்ய நீதிமன்றம், ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.
மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையையும் கடந்த 1ம் தேதி ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவ குழு.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடன் பயின்ற இரு மாணவிகள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வாக்குமூலம்.
சுமார் 2 மணி நேரம் நீதிபதியின் முன் மாணவிகள் இருவரது வாக்குமூலம் பதிவு.
* ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த இந்தியா.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
3 போட்டிகள் கொண்ட தொடரில் 3 - 0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
No comments:
Post a Comment