அக்னிப்புரட்சி இன்றைய (23.08.2022) முக்கிய செய்திகள்
* வியாழன் கோளின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது நாசா.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இதில் வியாழனின் 2 நிலாக்கள், வியாழனை சுற்றி 2 வளையங்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது.
* ஆத்தூர்: ஆம்னி பஸ், கார் மோதல்: 6 பேர் பலி; 5 பேர் படுகாயம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புறவழிச் சாலையில் கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
* தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் - அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்.
மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது - முதல்வர் ஸ்டாலின்.
* அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
ஓ.பி.எஸ் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
* அக்- 30 ஆம் தேதி நடைபெறும் குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்.
92 காலி பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியான நிலையில் 3,16,678 லட்சம் பேர் விண்ணப்பம்.
தேர்வர்கள் ஆக 27 முதல் 29 வரை தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
* இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என தகவல்.
* ஆம்பூரில் உள்ள ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரி துறை அதிரடி சோதனை.
தமிழகத்தில் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
* ஆர்டர்லி முறையை 4 மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும்.
இது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய மனுவை 10 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் பள்ளியை சீரமைக்கும் பணிக்கு அனுமதிக்க முடியாது- அரசு தரப்பு.
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - தமிழக அரசு.
* புதுச்சேரியில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு - பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
* பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது - உச்சநீதிமன்றம்.
நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் பினாமி பரிவர்த்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.
பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 3 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை, புதிய சட்டப்படி 7 ஆண்டுகள் வரை அதிகரிப்பு.
பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 நவம்பர் 1ஆம் தேதிக்கு முன் தேதியிட்டு அமலாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
* இலவசங்கள் தொடர்பான வழக்கு:- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
திமுக வில் உள்ள உங்கள் கட்சி மற்றும் அமைச்சர் பேசுவதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறோம் என்று எண்ணி விடாதீர்கள்
திமுக மட்டும் தான் சாதுரியமான, புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்.
பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால் அதை அறியாமல் இல்லை என நினைக்க வேண்டாம் - தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் உச்சநீதிமன்ற நீதிபதி கடும் விமர்சனம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்?
இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்சனையாக கருதுகிறீர்கள்?
ஆனால், தேர்தல் இலவசத்தை தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது அதுவும் கவனிக்கப்பட வேண்டியது, சரிபடுத்தப்பட வேண்டியது ஆகும்.
இங்கு அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வாதிடுகிறீர்கள்.
நாங்கள் மொத்தமாக இலவசம் அறிவிப்பு தொடர்பாக கட்டுப்பாடு வேண்டும் என நினைக்கிறோம் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
* வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன? இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இருந்து மாற்றுக் கருத்து இல்லை என குறிப்பிட்டார்.
* சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை.
குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21 வரை tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-டிஎன்பிஎஸ்சி.
செப். 26 - 28ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்.
டிசம்பர் 18ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்- டிஎன்பிஎஸ்சி.
* அனைத்து பல்கலை., துணைவேந்தர்களுடன் ஆகஸ்ட் 30ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.
* இந்திய கடற்படை ஏவுகணை சோதனை வெற்றி.
ஒடிசா கடற்கரையில் இந்திய கடற்படை, தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வி.எல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகனை அழித்தது.
சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
* 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
* சென்னை: பள்ளி மாணவர்கள் தங்கள் பெயரின் இனிஷியலை தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பெயரின் இனிஷியல் மற்றும் கையொப்பத்தையும் தமிழில் இட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
* சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மொபைல் தயாரிக்கப்பட உள்ளது.
சீனாவில் அதிகப்படியான ஐபோன்களை தயாரித்து வந்த ஆப்பிள் நிறுவனம், வேறு நாட்டில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஐபோன் உற்பத்தி பாகங்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீனாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வர தீவிரம்காட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் சீனா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
* NDTV தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்கினார் அதானி
புகழ்பெற்ற ஆங்கில ஊடகமான NDTV யின் பங்குகளை கௌதம் அதானியின் AMG மீடியா நிறுவனம் வாங்கியது
* சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். பல இடங்களில் தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி திறந்த நிலையில் உள்ளன எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
* அலோபதி மருத்துவ முறையை பாபா ராமதேவ் விமர்சித்து பேசக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது யோகா மருத்துவ முறையை விளம்பரப்படுத்த பாபா ராமதேவ் அலோபதியை விமர்சிப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சிலின் மனு மீது மத்திய அரசு, பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* டோக்கியோ: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு சாய்னா முன்னேறினார். சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் சீயங் கன் யி -யை வீழ்த்தினார்.
* ஆகஸ்ட் 30ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 30ம் தேதி காலை 11 மணியளவில் நடைப்பெற உள்ளது.
* இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
coe1.annauniv.edu/home/
aucoe.annauniv.edu/regular_result
என்ற முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
* மலேசியாவில் கோலாம்பூர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியா சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment