அக்னிப்புரட்சி இன்றைய (24.08.2022) முக்கிய செய்திகள்.
* பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி.
அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள்.
* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதாக பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்.
சோனியா காந்தியுடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் செல்ல உள்ளனர்.
* சுற்றுலா செல்லும் போது பயண விபரங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்.
சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு கேரள காவல்துறை எச்சரிக்கை.
* பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது
243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்-க்கு 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது.
* பொங்கல் வேட்டி, சேலை திட்டத்துக்கு 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க டெண்டர்.
இலவச வேட்டி, சேலைத் திட்டத்திற்கான நூல் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது கைத்தறித்துறை;
கைத்தறி, விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியை மேற்கொள்ள விரைவில் ஆணைகள் வெளியீடு.
* பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் நாளை நடைபெறவிருந்த பொதுப்பிரிவினர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2நாட்களுக்கு பிறகு கலந்தாய்வை நடத்த திட்டம்- அமைச்சர் பொன்முடி.
* பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற நிலையில் நிதிஷ்குமாரின் கூட்டணி கட்சி தலைவரான லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
* காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது,
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்படும் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்க செயற்குழு கூட்டம் கூடுகிறது.
அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்.
* கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்?
நாளை மறுதினம் காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும்- சென்னை உயர்நீதிமன்றம்.
பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் ஜாமீன் கோரிய வழக்கு ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
* கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்.
1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின். எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்தவன் நான்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன்.
சொந்த கட்சியின் குளறுபடிகளை மறைக்க திமுக ஆட்சியை விமர்சிக்கின்றனர்.
ஓராண்டில் ஓராயிரம் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்- முதலமைச்சர் ஸ்டாலின்.
ஏதோ சிலருக்கு உதவிகளை செய்து கணக்கு காட்டுபவர்கள் நாங்கள் அல்ல.
கொளத்தூர் தொகுதியை போன்று அனைத்து தொகுதிகளுக்குமே முக்கியத்துவம்.
‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கைகளை அனுப்ப எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது.
தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் உற்றுநோக்கி வருகிறார்கள்.
கட்டணமில்லா பேருந்து, இலவச மின்சாரத்தை சுட்டிக்காட்டி கோவையில் முதல்வர் பேச்சு.
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு.
கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.
கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. -முதலமைச்சர் ஸ்டாலின்.
* இலவச திட்டங்கள் காரசார விவாதம்:
இலவச திட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு குழு அமைக்கலாமே?
அல்லது மத்திய அரசு தரப்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி ஒரு முடிவு எட்டலாமே? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை.
சில அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமை என கோருகின்றன.
அதே நேரத்தில், சில அரசியல் கட்சிகள் இலவசம் என்ற ஒரு அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முற்படுகின்றனர் என மத்திய அரசு வாதம்.
இதுபோன்ற இலவசம் அறிவிப்புகள் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் இது ஒரு தீவிரமான விவகாரம் ஆகும்; எனவே இது கவனிக்கப்பட வேண்டியது.
இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கை டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
* கள்ளக்குறிச்சி கலவரம்: கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரிக்கை மற்றும் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இழப்பீடு கோரிக்கையுடன், ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது விசாரணைக்கு உகந்ததல்ல.
கோரிக்கைகளுடன் வேறு வழக்காக தாக்கல் செய்ய வேண்டும் -மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
36மணி நேரத்தில் 15 படுகொலைகள். எங்கே போகிறது தமிழகம்? - எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.
படுகொலை சம்பவத்திற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்று திறமையற்ற காவல்துறையாக இருக்கிறது- எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.
* கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றோர் தரப்பிடம் ஒப்படைக்க மறுப்பு.
விசாரணை நிலுவையில் உள்ளதால், ஜிப்மர் ஆய்வு அறிக்கையை தர நீதிமன்றம் மறுப்பு.
* அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம்.
இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல்.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ. 2,012-ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என தகவல்.
நடத்துனர்களுக்கு ரூ 1,965 முதல் ரூ. 6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும் ஊதிய உயர்வு!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பேமெட்ரிக்ஸ் முறையில் கிடைக்கவுள்ள ஊதிய உயர்வு:
ஓட்டுநர்: ரூ.2,012 முதல் ரூ.7,981 வரை.
நடத்துநர்: ரூ.1,965 முதல் ரூ.6,640 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
தொழில்நுட்ப பணியாளர் - ரூ.2,096 முதல் ரூ. 9,329 வரை
அலுவலக பணியாளர் - ரூ.1,965 முதல் ரூ.6,640 வரை.
தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள்: ரூ.4,585 முதல் ரூ.8,476 வரை.
பயணச்சீட்டு பரிசோதகர்கள்: ரூ.4,692 முதல் ரூ.7,916 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
* 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஊதிய ஒப்பந்தத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன்.
* சாகித்ய விருது அறிவிப்பு:
சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதை தமிழ் எழுத்தாளர் காளிமுத்து பெறுகிறார்.
தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற கவிதை தொகுப்புக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி வழங்கும் சிறுகதைகளுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருத்தாளர்களுக்கு ரூ.50,000 ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது.
* அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் மனு - நீதிமன்றம் கடும் கண்டனம்.
தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி.
* தமிழ்நாடு - மாவட்டம் வாரியாக: ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நபரும் மது அருந்துவதற்கு செலவிடும் பணம். மாநில சராசரி - ரூ. ஒரு நபருக்கு ஆண்டுக்கு 4,952. தரவு ஆதாரம்: TASMAC.
* ஹரியானாவில் 130 ஏக்கரில் 2600 படுக்கை வசதி கொண்ட அம்ரிதா அம்மா இலவச மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
* காவல்துறை மதிப்பு இதுதானா?
திராவிடமாடல் மந்திரி ஒரு போலிஸ் உயர் அதிகாரியை எங்களுடன் வளர்ந்தால் எப்படி இருப்பாரென்று சான்றிதழ் கொடுக்கிறார். திராவிடமாடல் அமைச்சர் கே.என்.நேரு
Watch: https://t.co/QSxeIQ8ipE
"எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர் இன்று டிஎஸ்பியாக உயர்ந்திருக்கிறார். அவர் திறமை யாரை வேண்டுமானாலும் யாரையும் குற்றவாளி ஆக்க முடியும் யாரையும் விடுவிக்க முடியும்.
No comments:
Post a Comment