அக்னிப்புரட்சி இன்றைய (26.08.2022) முக்கிய செய்திகள்.
* ஆசியக்கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்.
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 6 அணிகள் மோதுகின்றன.
நாளை நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிதான் மோதல்.
28ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம் காண்கின்றன.
* செப்டம்பர் 7- வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்.
வரும் 30-ம் தேதி இறுதி விடைக்குறிப்பு, OMR தாள் வெளியிடப்படும்.
* உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முதல் முதலாக நேரலை செய்யப்படுகின்ற Live Link:
webcast.gov.in/events/MTc5Mg--
* திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு டெல்லி வந்தடைந்தார்; இந்திய அரசு அவருக்கு உத்தியோகபூர்வ கார் மற்றும் பாதுகாப்பு வழங்குகிறது.
* கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்.
* இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் 'கௌ பூஜை' செய்கிறார்; வீடியோ வைரலாகிறது.
* தானமாக கொடுக்கப்படும் மாடுகளை பராமரிப்பதற்கு இடம் வழங்கக் கோரிய வழக்கு:
மாடுகள் நேர்த்திக்கடனாக பெறப்பட்டால் கோயில் இடத்தில் பராமரிக்க வேண்டும். ஆனால், கோயில் இடங்களை பிளாட் போட்டு விற்று விட்டால் எவ்வாறு இடம் இருக்கும் -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.
நேர்த்திக்கடனாக பெறப்படும் மாடுகளை பராமரிக்க இடமில்லை என்றால் கோவிலின் வெளியே மாடுகள் பெறப்படாது என பலகை வைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
* காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகல்:
ராகுல்காந்தியின் நடவடிக்கைகள், அரசியலில் அவருடையை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
சோனியா காந்திக்கு குலாம்நபி ஆசாத் எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குறித்து காட்டம்.
ராகுல்காந்தியை சரமாரியாக விமர்சித்துவிட்டு கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத்.
* ஈரோட்டில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்டப்பணிகள் மற்றும் ரூ. 261.57 கோடி மதிப்பில் 135 முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்தார்.
அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈரோடு பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.10 கோடியில் மஞ்சள் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது.
நெல் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது.
அனைத்து மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழகத்தில் தான் அதிகம்.
முதலமைச்சராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன்.
பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம், இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
முன்னதாக வரும் 30ம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் தேதி மாற்றம்.
* இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.
டெல்லியில் 8, உத்தரபிரதேசத்தில் 4 என உள்ள நிலையில், தமிழ்நாட்டில் போலி பல்கலைக்கழங்கள் ஏதும் இல்லை - யுஜிசி.
* இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை நீக்கியது ஃபிபா.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஃபிபா அமைப்பு
வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் - ஃபிபா
No comments:
Post a Comment