அக்னிப்புரட்சி இன்றைய (30.08.2022) முக்கிய செய்திகள்.
* 100 வது நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல்-டீசல் விலை:
சென்னையில் இன்று 100 வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது.
* தமிழகத்தில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டினம், திருப்பத்தூர் மாவட்டம் பாச்சூர், ராமநாதபுரம் மாவட்டம் வெங்கிட்டாங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர உறுதி சான்று.
* தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்…
வரும் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று, திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்க உள்ளார்…
* திமுக ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை - ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.- எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றச்சாட்டு.
மக்களை மட்டுமல்ல, அவர்களை பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத் தவறியது திமுக ஆட்சி
* உலக பணக்காரர்கள் - 3ம் இடத்தில் கெளதம் அதானி.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறினார் கெளதம் அதானி; மஸ்க், ஜெஃப் பெசாஸ் முதல் மற்றும் 2ம் இடம்.
எலான் மஸ்க், ஜெஃப் பெசாஸ் முறையே முதல் மற்றும் 2வது இடம், 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி 3வது இடம்.
ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு செல்வது இதுவே முதல்முறை.
* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
தமிழகத்தில் இயங்கும் 21 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்பு.
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை.
* பல்கலை., துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
நீட் தேர்வுக்கு பயந்து, அதை எதிர்க்கவில்லை. உயர்கல்விக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம்.
புதிய தேசிய கல்விக்கொள்கையையும் அரசு எதிர்க்கிறது.
நீட் தேர்வுக்கு பயந்து, அதை எதிர்க்கவில்லை. உயர்கல்விக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம்.
புதிய தேசிய கல்விக்கொள்கையையும் அரசு எதிர்க்கிறது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தரம் குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது.
ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநில அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* மேல்மருவத்தூர் அருகே அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில், படியில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்;
தவறி விழுந்து மாணவன் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய பள்ளி மாணவர்;
பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை
* பிரபல நடிகை அமலா பாலுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது நண்பரும், படத் தயாரிப்பாளருமான பவ்நிந்தர் சிங் கைது.
புதுச்சேரி அருகே பெரியமுதலியார் சாவடி பகுதியில் பாவந்தர் சிங் தத்தை கைது செய்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.
* புதுச்சேரியில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான பணி விரைவில் தொடங்கும்; 70 - 80 வயது முதியவர்களுக்கு உதவித்தொகை ₹3000 ஆக உயர்த்தப்படும்.
திருமண உதவித்தொகை ₹15,000 ஆக உயர்வு; ஈமச்சடங்கு உதவித்தொகையும் ₹15,000 ஆக உயர்வு- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.
புதுச்சேரியில் 2022-ம் ஆண்டு விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு பேரவையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் நடை முறைப்படுத்தப்படும்.
மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
* ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன.
உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.
* கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு.
கோகுல்ராஜின் தாயார், சிபிசிஐடி தரப்பு மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றும், அவற்றை அவை தொடர்பான வழக்குகளுடன் சேர்த்துப் பட்டியலிடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
* ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நிராகரித்த கிறிஸ் ராக்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த மார்ச் மாதம் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வை அமெரிக்க காமெடி நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது வில் ஸ்மித் மனைவி குறித்து தவறாக பேசி கன்னத்தில் அறை வாங்கி விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்வைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளாராம்.
* “நான் ராஜினாமா செய்கிறேன். இபிஎஸ் செய்வாரா?” - ஒபிஎஸ் சவால்
"நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நான் உட்பட 10 அமைச்சர்கள் பதவி விலகி மாவட்டங்களில் கட்சி வேலை பார்ப்போம் என்று கூறினோம். என்னைப் பதவி வெறி பிடித்தவன் என்கிறார்கள். இந்த ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். எடப்பாடி பழனிசாமி தயாரா?தொண்டர்களைச் சந்திப்போம். அவர்கள் முடிவு செய்யட்டும்" என, ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
* சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் தேவை
பரந்தூரில் இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு இடத்திலாவது விமான நிலையம் அமைக்க தேவையான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்யவேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
* கூகுள் மேப் பார்த்துச் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து கர்நாடக மாநிலம் சர்ஜாபூருக்கு ராகேஷ் என்பவர் தனது குடும்பத்தினர் உடன் காரில் சென்று கொண்டிருந்தார். கூகுள் மேப் உதவியுடன் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது, தரைப்பாலத்தை தாண்டி ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காரில் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
காவிரி ஆற்றில் வெள்ளம்
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் உபரி நீராக திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு பவானி கூடுதுறை காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
* நெல்லுக்கு கூடுதல் ஊக்கத் தொகை வழங்க உத்தரவு. - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
தமிழ்நாட்டில் காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை செப்.1 முதல் மேற்கொள்ள அரசு உத்தரவு.
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க ஆணை.
உரங்கள் அதிக விலைக்கு விற்றது, பதுக்கல் ஆகிய காரணங்களால் 96 உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து
தடையின்றி ரசாயன உரங்கள் கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை.
374 பறக்கும் படைகள் மூலம் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், 266 உரக்கடைகளின் மீது நடவடிக்கை.
96 உரக்கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து
இன்றைய நிலவரப்படி, யூரியா 65,300 டன்னும், டிஏபி 42,000 டன்னும், பொட்டாஷ் 30,200 டன்னும், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1,55,200 டன்னும் ஆக மொத்தம் 2,92,700 டன் உரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது. - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
* UG, PG மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி unom.ac.in இணையதளத்தில் வெளியிடப்படும்
மறுகூட்டலுக்கு செப்டம்பர் 5 முதல் 14-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்- சென்னைப் பல்கலை., அறிவிப்பு.
* கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றது அல்ல - நீதிமன்றம் அதிருப்தி.
* இன்றைய சிந்தனை!
பாதைகளில் தடைகள் இருந்தால், அதை தகர்த்து விட்டுதான், செல்ல வேண்டும், என்று இல்லை, தவிர்த்து விட்டும் செல்லலாம், எறும்பைப் போல!
வார்த்தைகள், சாவியை போன்றவை, சரியாக பயன்படுத்தினால், எந்த இதயத்தையும் திறக்கலாம், எந்த வாயையும் மூடலாம்!!
பிடித்திருந்தால், குறை குறைய தெரியும், நிறை நிறைய தெரியும், பிடிக்கவில்லை என்றால், குறை நிறைய தெரியும், நிறை குறைய தெரியும்; இதுதான் உலகம்!!!
இனிய இரவு வணக்கம்🙏
No comments:
Post a Comment