அக்னிப்புரட்சி இன்றைய (31.08.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (31.08.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (31.08.2022) முக்கிய செய்திகள்.

* அக்னிப்புரட்சி இதழின் சார்பில் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்🙏

* பங்களாதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பை T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது..

* நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

* சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் (வயது 91) காலமானார்.

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய 1991 வரையிலான சோவியத் யூனியனின் அதிபர் கோர்பசேவ்.

1985 முதல் 1991-ம் ஆண்டு வரை சோவியத் யூனியன் அதிபராக இருந்தார் கோர்பசேவ்.

* கனியாமூர் பள்ளியின் தாளாளர்  உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் இன்று சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆசிரியைகள் கிருத்திகா மற்றும் ஹரிப்பிரியா சேலத்தில் தங்கியிருக்க நிபந்தனை

பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேரும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

* விநாயகர் சிலை ஊர்வலம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை.

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது.

அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதி குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது.

எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.

ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளக்கூடாது.

* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி  மலைக்கோட்டை அருள்மிகு உச்சி பிள்ளையார் மற்றும் அடிவாரத்திலுள்ள மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்ட "150 கிலோ எடையுள்ள மெகா கொழுக்கட்டை".

* அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி மனிதர் காலமானார்

பிரேசிலின் அடர்ந்த வனமான அமேசான் காட்டில், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் பல ஆண்டாக தனியாக வசித்து வந்தார்.

தனது உறவுகளை இழந்த அவர் வெளி மனிதர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். அவரது பெயர் என்ன, என்ன மொழி பேசுவார் என எந்த தகவல்களும் யாருக்கும் தெரியாது. உலகின் தனிமை மனிதர் என அழைக்கப்பட்ட அவர், அமேசான் காட்டில் பொலிவியா எல்லையில் உள்ள ரோன்டோனியா மாகாணத்தின் தனாரு பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார். அவர், மேன் ஆஃப்தி ஹோல் என்று அழைக்கப்பட்டார். அதாவது, நிலத்தின் அடியில் குழிதோண்டி அதில் அந்த கடைசி மனிதர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 60 வயதான நிலையில் அந்த பூர்வ பழங்குடியினத்தவர் மரணமடைந்துள்ளார்.

இது குறித்து, பிரேசில் உள்ள பழங்குடியினருக்கான அமைப்பான புனாய் கூறுகையில், ‘‘நாங்கள் தொடர்ந்து அமேசான் காட்டில் பழங்குடியினரின் கடைசி மனிதரை கண்காணித்து வந்தோம். சமீபகாலமாக உடலில் பசுந்தழைகளையும், பறவைகளின் இறக்கைகளையும் கட்டியிருந்தார். இவ்வாறு பழங்குடியினர் இருப்பது அவர்கள் இறப்புக்கு தயாராவதைக் குறிக்கும். அந்த வகையில் கடந்த 23ம் தேதி அந்த கடைசி மனிதர் உயிரிழந்தநிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனிதருக்கு ஏறக்குறைய 60 வயது இருக்கும்’’எனத் தெரிவித்துள்ளது.
அமேசானில் வாழ்ந்த பூர்வ பழங்குடியினத்தவர்களில் கடைசி மனிதர் இவர்தான். இவரும் இறந்து விட்டதால் பூர்வ குடிகள் யாரும் இல்லை.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.38,032க்கு விற்பனை செய்யப்படுகிறது!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4,754க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..

பெங்களூர், கொச்சி நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கேரளாவில் கடந்த சில தினங்களாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 9 அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது பெய்த அடைமழையால் கொச்சி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பெரும்பாலான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எர்ணாகுளம் தெற்கு மற்றும் வடக்கு ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் சிக்னலில் பழுது ஏற்பட்டது. இதனால் மங்களூரு- நாகர்கோவில் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே கேரளா முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று ஒன்றிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல, கர்நாடகாவில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால், பெங்களூருவில் பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழையால் மைசூரூ - பெங்களூரு சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

* கியூபா புரட்சியாளர் சேகுவாராவின் மகன் 'திடீர்' மரணம் உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவாரா. கியூபாவை சேர்ந்த இவர் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர். சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா. இவர் சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கமீலோ சேகுவாரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60 ஆகும். கமீலோ சேகுவாராவின் மறைவுக்கு கியூபா நாட்டு அதிபர் இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார்.

* சென்னைவளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசியிலும், நாளை நீலகிரி, கோவையிலும் மிக கனமழை பெய்யலாம். விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

* அனைவருக்கும் பொதுவான முதல்வர் ஏன்  விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை;

கட்சியின் தலைவரிடம் கேட்கவில்லை. மாநிலத்தின் முதல்வரிடம்தான் கேட்கின்றோம், அவர் திரும்ப திரும்ப இந்த தவறை செய்து கொண்டு இருக்கின்றார். - வானதி சீனிவாசன், பாஜக எம்எல்ஏ

* UG படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அவகாசம் மேலும் நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் 110 கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் - சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

* பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரம் - விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு.

* காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ இத்தாலியில் காலமானார்..!

* ஆசியக் கோப்பை டி-20🏏 : இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

* ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி.

ஆசிய கோப்பை டி20 தொடரில் தனது 2வது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages