அக்னிப்புரட்சி இன்றைய (04.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (04.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (04.09.2022) முக்கிய செய்திகள்.

* வென்றவனுக்கும், தோற்றவனுக்கும் வரலாறு உண்டு இடையில் விமர்சித்தவனுக்கும், வேடிக்கை பார்த்தவனுக்கும் வரலாற்றில் ஒரு வரி கூட கிடையாது!

கடினமான சூழ்நிலைகள் எப்பொழுதும் கற்றுக்கொடுக்கின்றன! எந்த சூழ்நிலையிலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!

அது போல்,மதியாதார் தம் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும். உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும் என்று உலகத்திற்கே நீதி சொன்ன தமிழ்க் கிழவியின் சொல்கேட்போம். எனவே தன்மானம்தனை இழந்து, தம்மை இகழ்வார் - மதியார்பின்சென்று, தனக்கும் பிடிக்காமல், தரமற்ற வாழ்க்கை வாழ்ந்து தன்னுயிர்க்காத்திடாமல் சுயமாக இருப்பது மேல்

🙏 இரவு வணக்கம்

* சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னையில் இன்று (செப்.04) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பதால் பகல் 12 மணி முதல் இரவு 8 மணிவரை போக்குவரத்து மாற்றம்

வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, ஆர்.கே. சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்லலாம்

அடையாறில் இருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள் ராம கிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், இராயப்பேட்டை | மணிக்கூண்டு, ஒய்ட்ஸ் ரோடு வழியாக பாரிமுனை செல்லலாம்

பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய 4 கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி

* சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன் கொலை வழக்கில் பாலியல் தரகர் கணேசன் (35) கைது.

ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரனை கொலை செய்து பாலித்தீன் கவரில் கட்டி சின்மயா நகர் அருகே கால்வாயில் வீச்சு.

தொழிலதிபர் பாஸ்கரனை கொலை செய்து கால்வாயில் வீசியவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

பெண் விவகாரத்தில் தொழிலதிபர் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டதாக விருகம்பாக்கம் போலீசார் தகவல்.

* தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (விழாக்கால)07.09.2022 அன்று முதல் இயக்கம்

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் , தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் ,மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய நிறுத்துங்களில் நின்று செல்லும்.

* ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா? கடையை எப்போதும் சார் திறப்பீங்க? - ருசிகர திருடர்கள்!

திருவள்ளூர்: கவரைப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த இருவர் கைது!

வீடியோ: https://youtu.be/52ZmzGVJrRY

தண்டலச்சேரி டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சதீஷ், முனியன் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

* பாரசூட் திறக்க தாமதம்; 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த டிக்டாக் பிரபல பலி

டிக்டாக் பிரபலமான இவர் அழகி போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
ஒட்டாவா,

கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம் டொரண்டோ பகுதியை சேர்ந்த இளம்பெண் தன்யா பர்டஷி (வயது 21). கல்லூரி மாணவியான இவர் 2017-ம் ஆண்டு நடந்த 'மிஸ் டீன் கனடா' அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றுள்ளார்.

தன்யா பர்டஷி டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். அவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் டிக்டாக்கில் பின் தொடர்கின்றனர்.

இதனிடையே, தன்யா பர்டஷி வானில் இருந்து கிழே பாரசூட்டில் கீழே குதித்து சாகத்தில் ஈடுபடும் ஸ்கை டைவிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர், பல முறை 2 பேர் குதிக்கும் வகையில் உதவியாளருடன் வானில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகம் செய்துள்ளார். பின்னர் பயிற்சி பெற்று தனியாக ஸ்கை டைவிங் செய்ய உரிமம் பெற்றார்.

இந்நிலையில், தன்யா பர்டஷி டொரண்டோவில் நேற்று தனியாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். விமானத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தன்யா குதித்துள்ளார்.

ஆனால், அவர் தாமதமாக பாரசூட்டை திறந்துள்ளார். இதனால், பாரசூட் முழுமையாக திறந்து வேலை செய்வதற்குள் அவர் தரையில் வேகமாக விழுந்தார்.

இதையடுத்து, தன்யாவை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தன்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அமெரிக்காவில் பிரபல காபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் தேர்வு

அமெரிக்காவில் பிரபல காபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லட்சுமணன் நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,

உலகளவில் பிரபலமான அமெரிக்காவின் 'ஸ்டார்பக்ஸ்' காபி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வர்த்தக ஆலோசகரான லட்சுமணன் நரசிம்மன் (வயது 55) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

55 வயதான லட்சுமணன் நரசிம்மன் இதற்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த பன்னாட்டு நுகர்வோர் சுகாதார நிறுவனமான 'ரெக்கிட் பென்கிசர்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். சமீபத்தில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.

தற்போது இங்கிலாந்தில் இருக்கும் அவர் 'ஸ்டார்பக்ஸ்' நிறுவனத்தில் இணைவதற்காக விரைவில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லட்சுமணன் நரசிம்மன் வருகிற அக்டோபர் மாதம் முதல் தேதியில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் இணைவார் என்றும் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று கொள்வார் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

* இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான SB எனர்ஜி லிமிடெட், அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான அதானி கிரீன் எனர்ஜியால் $3.5 பில்லியன் பணத்திற்கு (இந்திய மதிப்பில் ரூ.27 ஆயிரம் கோடி) வாங்கப்பட்டது. இப்படி கடனிலேயெ முதலீடுகளை பெரும்பாலும் மேற்கொண்டதன் விளைவாக 2022 ஆம் ஆண்டு அதன் கடன் 2.2 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. வருடத்திற்கு 12 சதவீதம் அளவிற்கு கடனிலும் அபார வளர்ச்சி கண்டுள்ளது அதானி குழுமம்.

* அம்பானியும் கடனில் இருக்கிறார்! ஆனால் சிக்கல் அதானிக்குத்தான்! ஏன்?

இந்தியாவின் மற்றொரு கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் கடன் அதானியை விட அதிகமாகும். மார்ச் 2022 நிலவரத்தின் படி, முகேஷ் அம்பானியின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதானியை விட 80 ஆயிரம் கோடி அதிகமாக அம்பானி கடன் வாங்கியிருக்கும் போதிலும் அதானிதான் கடன் ஆபத்தில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

adani net worth, 8 லட்சம் கோடி சொத்து..
அதானிக்கு முதலிடம்.. அம்பானி  பின்னடைவு!

இதற்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அம்பானியின் நிறுவனத்திற்கு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.1.1 லட்சம் கோடி ஆகும். இதன் விளைவாக மொத்தக் கடனுக்கும் செயல்பாட்டு வருமானத்திற்கும் இடையிலான விகிதம் 2.7 ஆக உள்ளது. அதே வேளையில் அதானி நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.33 ஆயிரம் கோடி ஆகும். இதன் விளைவாக மொத்தக் கடனுக்கும் செயல்பாட்டு வருமானத்திற்கும் இடையிலான விகிதம் 6.6 ஆக உள்ளது. அதானி குழுமம் எதிர்கால விரிவாக்கத்திற்காக முதலீடு செய்கிறது என்ற உண்மையைக் கணக்கில் கொண்டாலும், செயல்பாட்டு வருமான விகிதத்திற்கான மொத்தக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதை பொருளாதார வல்லுநர்கள் ஆபத்தாகவே பார்க்கின்றனர்.

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் | ஏற்றம் கண்ட ரிலையன்ஸ் பங்குகள்; அதானியை  முந்திய அம்பானி 

அரசின் கரிசனம் அதானிக்கு உதவுமா?

அதிகரிக்கும் கடனால் அதானி குழுமம் நெருக்கடிக்குள் சிக்குமா என்றால் அதற்கு வாய்ப்பு குறைவே! 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-17 கால கட்டத்தில் 72 ஆயிரம் கோடி மதிப்பிலான அதானி குழுமத்தின் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருப்பதும் அதை சமீபத்திய இலவசங்கள் குறித்த உச்சநீதிமன்ற வழக்கில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இன்னும் நிறுவனத்தையே துவக்காத அதானிக்கு எப்படி அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

அதானி வீழ்ந்தால் மக்களுக்கும் பிரச்சினையே!

ஒன்றுக்கொன்று சாராத தொழில்களில் தான் அதானி குழுமம் முதலீடு செய்து இயங்கி வருகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் ஒரே சமயத்தில் நெருக்கடிக்குள் சிக்குவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு எனும் போதிலும், ஒன்றிரண்டு நிறுவனங்கள் நஷ்டத்தை அல்லது சுணக்கத்தை சந்திக்கும்போது ஒட்டுமொத்த முதலீடும் கடனை அடிப்படையாக கொண்டதால் அது நிறுவனத்திற்கு அழுத்தத்தை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடன் வழங்கிய வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆகியவையும் நிறுவனத்தை ஒருசேர நெருக்கடிக்கு உள்ளாக்கினால், இந்திய பங்குச் சந்தைக்கே இழப்பை அது ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், கடன் வழங்கிய வங்கிகள் எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனம் என்பதால் அவை வங்கிகளுக்கும் சுமையாக மாறி, அதன் வாடிக்கையாளர்களாக இருக்கும் சாமானியர்கள் தலையில் தான் அந்த பாரமும் விழும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

* உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் மகிழ்ச்சி

சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை
பாரம்பரிய கட்டடங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை உள்ளது

சென்னையில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் செயல்பட உள்ளன

நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் - முதல்வர் ஸ்டாலின்

* சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் இன்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைத்து வருகின்றனர்

* சங்ககால பாண்டிய மன்னர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கை துறைமுகத்தை கண்டறியும் பணியை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

சாகர் தாரா என்ற ஆய்வுக்கப்பல் மூலம் சோனார் ஸ்கேனர் மூலம் 7 நாட்களுக்கு இந்த தேடும் பணி நடைபெறுகிறது

தொல்லியல்துறை, இந்திய கடல்சாற் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சாற் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை 12 கடல் மைல் தொலைவுக்கு இந்த ஆய்வு நடைபெறுகிறது

* கடலூர்: என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் என்எல்சி ஆர்ச் கேட் எதிரில் ஆர்ப்பாட்டம் -  பாமக தலைவர் இராமதாஸ் பங்கேற்பு.

இராணுவத்தை கூட்டி வந்தாலும் என்எல்சிக்கு பூட்டு போடுவோம்.

இனி யாரும் ஏமாற மாட்டோம். நிலம் எடுக்க வந்தால் முடியாது எனக்கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது.

ஆசியாவில் தன்னூற்று இருந்த பகுதி நெய்வேலி தான். 8 அடி இருந்த தண்ணீர் ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது.

இதற்கு முழு காரணம் என்எல்சி இதனால் தான் கூறுகின்றோம் என்எல்சி தேவையில்லை.

என்எல்சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. எந்த நிறுவனத்தையும் நான் வேண்டாமென்று கூறியதில்லை;

ஆனால் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் என்எல்சி தமிழகத்திற்கு தேவை இல்லை- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி.

* அதிமுக பொதுக்குழு தடை ரத்துக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

* டாக்கா: வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக  முஷ்பிகுர் ரஹீம் ட்விட்டரில் அறிவித்துள்ளார்

* டெல்லி: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடந்து வருகின்றது.

மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்

* தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்க ளாக மாற்ற விவசாயிகள், 'உழவன் செயலி' மூலம் விண்ணப்பிக்கலாம்என கடலூர் வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தரிசு நிலங்களை விளைநிலங் களாக மாற்றும் திட்டம் 2020-2021-ம்ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கடலூர் மாவட்டத் தில், இத்திட்டத்திற்காக அரசு ரூ. 69.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 555 ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, விளைநிலங்களாக மாற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் கடலூர் மாவட்டத்திற்கு 1,812 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசிடமி ருந்து ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்படவுள்ளது.

சாகுபடிக்கு உகந்த தரிசு மற்றும்இதர தரிசு நிலங்கள் உள்ள அனைத்து வட்டார விவசாயிகள், தாமாகவே முன்வந்து 'உழவன் செயலி' மூலம் பதிவு செய்யலாம் அல்லது விருப்பமுள்ள விவசாயி கள் தகுந்த ஆவணங்களான ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும்வங்கி கணக்கு நகல் ஆகியவற் றுடன், வேளாண் துறை அலுவலர்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பல்வேறு காரணங்களினால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை தரிசாக வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

முன்னுரிமை பதிவேடு அடிப்படையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள விவசாயிகளின் நிலத்தில் உள்ள முட்புதர் மற்றும் சீமகருவேல மரம் அகற்றுதல், நிலத்தை உழுதல்,சமப்படுத்துதல் போன்ற அனைத்து உழவியல் பணிகளுக்கும், நேரடி யாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆய்விற்கு பிறகு பின் னேற்பு மானியம் வழங்கப்படும்.

பருவத்திற்கு ஏற்றாற்போல் விவசாயிகள் உளுந்து, தானிய வகை அல்லது எண்ணெய்வித்து பயிர்கள் என விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். அதற்கான விதை, உயிர்உரம், நுண்ணூட்டக்கலவை, உயிரியல் உரங்கள் போன்ற இடுபொருட்கள் மானிய விலை யில் வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து வழங்கப்படும்.

ஒரு ஹெக்டேர் உளுந்து,எள், தானிய வகை பயிர்களுக்கு ரூ.13,400 மானியமாகவும், மணிலா விற்கு ரூ22,800 மானியமாகவும் வழங் கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம்.

* சக மாணவியின் தாயால் விஷம் தரப்பட்ட மாணவன் மரணம்; ‘படிப்பில் பொறாமை, மருத்துவமனை அலட்சியம்’ - காரைக்கால் மக்கள் கொந்தளிப்பு

சக மாணவியின் தாயால் விஷம் தரப்பட்ட மாணவன் மரணம்; ‘படிப்பில் பொறாமை, மருத்துவமனை அலட்சியம்’ - காரைக்கால் மக்கள் கொந்தளிப்பு
காரைக்கால்: காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயாரால் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர் பானத்தை பருகிய பள்ளி மாணவர் உயிரிழந்தார். உரிய சிகிச்சை அளிக்கத் தவறியதாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்கால் நேரு நகர் வீட்டு வசதி வாரிய குடிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (48) - மாலதி (40) தம்பதியருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திரன் காரைக்காலில் ரேஷன் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன் (13) நேரு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முதன்மையான மாணவனாக இருந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளி ஆண்டு விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2-ம் தேதி பள்ளியில் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்று மதியம் வீடு திரும்பிய மாணவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் விசாரித்ததில், உறவினர் கொடுத்தனுப்பியதாக பள்ளிக் காவலாளி கொடுத்த குளிர்பானத்தை பருகியதிலிருந்து தனக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மாணவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகாக அனுமதித்துவிட்டு, பள்ளிக்குச் சென்று இது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டனுடன் படிக்கும் சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா (46), பால மணிகண்டனின் உறவினர் கொடுத்ததாகக் கூறி பள்ளிக் காவலாளி தேவதாஸிடம் குளிர்பானம் வழங்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவரின் பெற்றோர் சகாயராணி விக்டோரியா மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரிய வந்த நிலையில் நேற்று இரவு சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர்.

மாணவனின் வாக்குமூலம்: https://fb.watch/fk4PqIv7ZQ/

படிப்பில் போட்டி: பால மணிகண்டனுக்கும், சக மாணவி அருள் மேரிக்கும் வகுப்பில் போட்டியிருந்ததாகவும், இதனால் பால மணிகண்டன் மீது அருள் மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்ததாகவும், நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சியில் பால மணிகண்டன் பங்கேற்கக் கூடாது என்பதற்காக சகாயராணி விக்டோரியா விஷம் கலந்த குளிர் பானத்தை வழங்கியுள்ளதாகவும் பால மணிகண்டனின் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

மாணவர் உயிரிழப்பு: இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் பால மணிகண்டன் உயிரிழந்தார். இதையடுத்து உரிய சிகிச்சை அளிக்கத் தவறியதாலேயே மாணவன் உயிரிழந்ததாக் கூறி மருத்துவமனையைக் கண்டித்தும், என்ன விஷம் கொடுக்கப்பட்டது என போலீஸார் உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறியும், சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் நேற்று இரவும், இன்று காலையும் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் கண்ணாடி, குடிநீர் இயந்திரங்கள் உள்ளிட்ட சில பொருட்களை சேதப்படுத்தினர். மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம் காரணமாக மருத்துவமனை உள்ள பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ்

மாணவரின் உறவினர்கள், பொதுமக்கள் கூறியது: “அரசு பொது மருத்துவமனையில் மாணவருக்கு உரிய முறையான சிகிச்சை அளிக்கவில்லை. கொடுக்கப்பட்ட விஷம் குறித்து போலீஸாரும் குற்றவாளியிடம் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை. சனிக்கிழமை இரவு வரை நல்ல முறையில் மாணவர் பேசிக் கொண்டிருந்தார். அதுவரையிலும் சாதாரண வார்டிலேயே மாணவரை வைத்திருந்தனர். 10 மணியளவில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டப் பின்னரே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த மருத்துவமனையில் போதுமான சிச்சை வசதிகள் இல்லாத நிலையில் மருத்துவர்கள் உரிய கவனம் செலுத்தி மாணவரை முன்னரே வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்திருக்க வேண்டும். மருத்துவமனையின், அரசின் அலட்சியமே உயிரைக் காப்பாற்ற முடியாததற்கு முக்கிய காரணம் என சரமாரியாகக் குற்றம் சாட்டினர்.

சகாயராணி விக்டோரியா மீது கொலை வழக்குப் பதிவு செய்து காரைக்கால் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்து... சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு!!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜராத்திலிருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த போது சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். 2012 இல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பொலான்ஜி மிஸ்திரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருடன் பயணித்த கார் டிரைவர் உட்பட மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர். மிஸ்திரியின் உடல் குஜராத்தில் உள்ள காசா கிராமப்புற மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2012 இல் ரத்தன் டாடா பதவி விலகிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்த சைரஸ் பல்லோன்ஜி மிஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவரும் கட்டுமானத் தொழிலதிபருமான அவரது தந்தை பல்லோன்ஜி மிஸ்திரி ஓய்வு பெற்ற பிறகு 2006 இல் டாடா சன்ஸ் வாரியத்தில் சேர்ந்தார். அக்டோபர் 24, 2016 அன்று, டாடா சன்ஸ் வாரியம் (குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம்) மிஸ்திரியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வாக்களித்தது.

* முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகை எதிரொலி

கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ.. கிலோ ரூ.2,500 க்கு விற்பனை

மதுரை மாவட்டம் ஆவியூர், வளையங்குளம், உசிலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மல்லிகை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக, பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனிடையே தொடர்ந்து முகூர்த்த நாட்கள் மற்றும் ஓணம் பண்டிகை வரவுள்ளதால்,பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. 

தற்சமயம் ஏற்பட்டுள்ள வரத்து குறைவு காரணமாக, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.  கடந்த வாரம் மல்லிகை கிலோ 1200க்கு  விற்பனையான நிலையில் தற்போது கிலோவிற்கு ரூ.2,300 முதல் 2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை பூ கிலோவிற்கு ரூ.800 க்கும் பிச்சி பூ கிலோ ரூ.700 க்கும் சம்பங்கி கிலோ ரூ.250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 

* சென்னையில் நாளை நடைபெற உள்ள புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

சென்னை விமான நிலையத்தில் கெஜ்ரிவாலை வரவேற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

* பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 🏏 ரன்கள் எடுத்துள்ளது ..

பாகிஸ்தான் அணி வெற்றி பெற 182 ரன்கள் இலக்கு..

* "ரீல்" வீடியோ எடுக்கப் போன இளைஞரின் நிலை பரிதாபம்!

தெலுங்கானா - ரயில் பாதையில் "ரீல்" வீடியோவை படமாக்கும் போது பின்னால் வந்த ரயில் மோதியது...

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1566459418211807232?t=O7dWXgFpldYhX7_w8_ZQNw&s=19

காஜிபேட்டையில் இருந்து மஞ்சிரியாலா செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது "ரீல்" செய்ய சென்று கொண்டிருந்த இளைஞர்...

* இன்றைய சிந்தனை!

தயக்கம், பயம், கூச்சம்...
"நீல் ஆம்ஸ்ட்ராங்"
இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர். ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது... அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்" என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா?

என்றல்ல..."நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்"

தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."  நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார். உலக வரலாறு ஆனார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்து கொண்டிருப்போம்...
எனவே, நல்ல விடையங்களில்...
தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிற்போம்..

The Agnipuratchi1 is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages