அக்னிப்புரட்சி இன்றைய (06.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.09.2022) முக்கிய செய்திகள்.

* கன்னியாகுமரியில் நாளை ராகுல்காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார்.

அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி.

இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* மழையில் தத்தளிக்கும் பெங்களூரு... தலைக்கு ரூ.50 என ஷேர் ஆட்டோவாக செயல்படும் ட்ராக்டர்கள்!

தொடர்கனமழையால் பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பல மென்பொருள் பணியாளர்கள், ட்ராக்டரில் அலுவலகத்துக்கு பயணித்துவருகின்றனர். ஒவ்வொருவரிடமும் ரூ.50 வீதம் கலெக்ட் செய்து, ட்ராக்டர்கள் பிரத்யேக பயண வாகனமாக அங்கு பயன்படுத்தப்படுகிறது.

தாழ்வான பகுதிகள் பலவற்றிலும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்படுகிறது. பல ஏரிகள் நிரம்பி வழிவதாலும், மழைநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ரெயின்போ ட்ரைவ் லே அவுட், சன்னி ப்ரூக்ஸ் லே அவுட், சர்ஜாபுர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் படகுகளிலும், டிராக்டர்களிலும், மாணவர்களும், அலுவலகம் செல்வோரும் பயணப்பட்டனர். பல ஐடி நிறுவனங்கள் உள்ள புறவட்ட சாலையின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். தொடர்ந்து நீடிக்கும் வெள்ளத்தால் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன.

image

Mahdevapura மற்றும் Bommanahalli பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரிடர் மேலாண்மைக்குழுக்களை அனுப்ப அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் தேங்கியுள்ள மழைவெள்ளத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே பெங்களூருவுக்கு குடிநீர் தரக்கூடிய பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் தெரிவித்துள்ளது.

image

இவை அனைத்துக்கும் இடையேவும், மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் யேமலூர் என்ற பகுதியுள்ள மென்பொருள் நிறுவன ஊழியர்கள் ட்ராக்டரில் அலுவலகத்துக்கு பயணம் செய்துவருகின்றனர். அலுவலகத்தில் நிறைய விடுமுறை கொடுப்பதில்லை என்றும், இதனால் தங்களின் பணி பாதிப்பதாகவும் தெரிவிக்கும் அந்த பணியாளர்கள், ட்ராக்டர்களுக்காக காத்திருந்து, பயணித்து வருகின்றனர். ட்ராக்டர் ஓட்டுநர்கள், ஒவ்வொரு பயணத்துக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.50 வாங்குவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

* டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம்... புதிய பெயர் என்ன தெரியுமா?

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முதல் நேதாஜி சிலை வரையிலான ராஜபாதை, கர்த்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டம், வரும் 8 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ராஜபாதையின் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது சென்ட்ரல் விஸ்டா திட்டம். டெல்லி ராஜ பாதையில் முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் முழுமையாக மறு வடிவமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

* 24 ஆண்டுகளில் 5000 கார்கள்: இந்தியாவின் பலே கார் திருடரை கைது செய்தது டெல்லி போலீஸ்

டெல்லி: கடந்த 24 ஆண்டுகளில் 5000 கார்களை திருடிய பலே ஆசாமியை கைது செய்துள்ளனர் டெல்லி போலீசார். நாடு முழுவதும் தன் கைவரிசையை அவர் காட்டி வந்துள்ளதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர் கார்களை கொள்ளையடிக்கும் குழுவின் தலைவன் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அவர் பெயர் அனில் சவுகான். வயது 52. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்தால் அவர் மீது 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்த போது போலீசார் ஆறு துப்பாக்கிகள், திருடப்பட்ட பைக் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

யார் இவர்? அனில் சவுகான் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 1998 முதல் கார்களை அவர் திருடி வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 கார்களை அவர் திருடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடந்த காலங்களில் அவர் பல்வேறு முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார் என தெரிகிறது.

அசாம் அரசின் முதல் பிரிவு ஒப்பந்ததாரராக அவர் இயங்கி வந்துள்ளார். அமலாக்கத்துறை சோதனையில் அவரது சொத்துகள் பறிபோயுள்ளது. அதன் பின்னர் அவர் மீண்டும் திருட்டு வேலையில் இறங்கியதாக தெரிகிறது. அதோடு சட்டத்திற்கு புறம்பாக ஆயுத விநியோகம் மேற்கொண்டு வந்ததாகவும் தெரிகிறது. இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவருக்கு மூன்று மனைவி மற்றும் ஏழு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டெல்லி: 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டெல்லியில் முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, ஷேக் ஹாசீனாவை நேரில் வரவேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்க செய்தார்.

* மதுரை: மதுரை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப் பூ ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் முகூர்த்த தினம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்வு உயர்ந்துள்ளது.

மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 3000 க்கு விற்பனை, முல்லை ரூ.1500, சம்பங்கி ரூ. 750 பிச்சிப்பூ, ரூ.1000 ரூபாய், பட்டன் ரோஸ் ரூ.250, செண்டுமல்லி ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.

* சென்னை: சென்னை பாரிமுனையில் உரிமம் இன்றி இயங்கிய 160 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.

பாரிமுனையில் கோவிந்தப்ப நாயக்கன் தெரு, குடோன் தெருவில், உரிமம் இன்றி இயங்கிய 160 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

* வீட்டிற்குள் புகுந்த மழைநீர் - 2 மூதாட்டிகள் பலி.

சேலம் நான்கு ரோடு பகுதியில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி ருக்குமணி(70), பழனியம்மாள்(80) உயிரிழப்பு.

* மழையால் பயன்படுத்தவே முடியாத நிலையில் மதுரை சாலைகள்: தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்

மதுரையில் தற்போது பெய்யும் மழையால் முக்கிய சாலைகள் முதல் குடியிருப்பு சாலைகளை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தவே முடியாத படி தண்ணீரில் தத்தளித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 13 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும், 1,545 கி.மீ., மாநகராட்சி சாலைகளும் உள்ளன. இதில், 265 கி.மீ., சாலைகள் பஸ்கள், கனரக வாகனங்கள், கார்கள் சென்று வருகின்றன. 1,253 கி.மீ., சாலைகள் குடியிருப்பு சாலைகளாக உள்ளன. இதில், 75 சதவீதம் மாநகராட்சியின் பிரதான சாலைகள், முதல் குடியிருப்பு சாலைகள் மோசமாக உள்ளன. இந்த சாலைகள் குண்டும், குழியுமான நிலையை கடந்து தற்போது போக்குவரத்திற்கே பயன்படுத்த முடியாமல் உருகுலைந்து காணப்படுகிறது.

தற்போது மாநராட்சி போதிய வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால், மாநகராட்சியால் சாலை, சுகாதாரப்பணி, குடிநீர் கட்டமைப்பு பணிகளை கூட செய்ய முடியவில்லை. தற்போது மழை பெய்வதால் இந்த சாலைகள் அனைத்தும் தண்ணீர் தேங்கி நிற்பதோடு சேறும், சகதியுமாக உள்ளன.

பெரும்பாலான சாலைகளில் மழை தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளன. இரு சக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரில் தத்தளித்தப்படியே தினமும் இந்த சாலைகளில் அபாயகரமாக சாகச பணயம் செய்கின்றனர். தற்போது பெய்யும் மழைக்கும் தண்ணீர் தேங்கிய சாலையில் திடீர் பள்ளங்களும், சில இடங்களில் சாலை முற்றிலும் மழைக்கு கீழே உள்வாங்கி இருக்கலாம். ஆனால், அந்த ஆபத்தையும் கடந்தே மதுரை நகர வாசிகள் இந்த சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் பள்ளங்களில் இரு சக்கர வாகனங்ளோடு விழுந்து காயமடைகின்றனர். அன்றாடம் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்ல வேண்டி உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்த சாலைகளை கடந்துதான் அலுவலங்களுக்கு கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது.

குறிப்பாக மதுரை குருவிக்காரன் சாலை சந்திப்பில் அண்ணா நகரில் இருந்து மதிச்சியம், ஆழ்வார்புரம் செல்லும் சாலையில் கடந்த 2 ஆண்டாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதும், கோடை காலத்தில் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இந்த பகுதியில் வைகை கரை நான்கு வழிச்சாலை போடாததால் வாகன ஓட்டிகள், இந்த மோசமான மழை தண்ணீர் தேங்கி நிற்கும் சாலை வழியாக தான் காமராஜர் சாலை, முனிச்சாலை, கே.கே.நகர், அண்ணா நகர், விரகனூர் சந்திப்பில் இருந்து வருகிறவர்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது.

அனைவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்களுடன் புகுந்து செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை பயன்படுத்தி பாழாய் போய் கிடக்கும் இந்த சாலைகளை பராமரிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 8.2% உயர்ந்து 620.7 பில்லியன் டாலராக அதிகரிப்பு

புதுடெல்லி: நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டு கடன் நிர்வாகப் பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021-22 குறித்த 28-வது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2021 மார்ச் இறுதியில், 573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவீதம் அதிகரித்து 620.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் வெளிநாட்டுக்கடன் அளவு ஓராண்டுக்கு முன் 21.2 சதவீதம் என்பதிலிருந்து கணிசமாக குறைந்து 2022 மார்ச் இறுதியில், 19.9 சதவீதம் ஆகியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு, விகிதத்தில் ஓராண்டுக்கு முன் 100.6 சதவீதம் என்பதை விட, 2022 மார்ச் இறுதியில் 97.8 சதவீதம் என வெளிநாட்டுக்கடன் லேசாக குறைந்துள்ளது.

நீண்டகால கடன் அளவு 499.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், குறுகிய காலக்கடன் அளவு 121.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மொத்தக்கடனில் 90 சதவீதம் வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகள் குறைந்தகால வர்த்தகக்கடன், பலவகை கடன்கள் ஆகியவையாகும்.

* சென்னையில் பெட்ரோல் பங்க்குகளில் ‘நோ ஸ்டாக் போர்டு’ திடீர் டீசல் தட்டுப்பாடு: சாலையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் நேற்று திடீரென டீசல் விநியோகம் தடைபட்டது. சென்னையில் நேற்று மாலை முழுதும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டது. எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, மணலி உள்பட சென்னையில் பெரும்பாலான பங்க்குகளில் ‘டீசல் நோ ஸ்டாக்’ என்ற போர்டை வைத்துள்ளனர். இதன் காரணமாக வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகள், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், வெளியூர்களில் இருந்து சென்னை வந்த சுற்றுலா வாகனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.

மேலும் வார விடுமுறையை அடுத்து திங்கட்கிழமையான நேற்று காலை பணிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் பெட்ரோல் நிலையங்களில் தங்கள் கார்களுக்கு டீசல் போட வந்த நிலையில், அங்கு டீசல் இல்லை என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தங்களது வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்து மற்றும் நண்பர்களின் பைக்குகளில் அலுவலகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வெளியூர் செல்வதற்காக பயணிகளை ஏற்ற திட்டமிட்டிருந்த நிலையில் டீசல் இல்லாத காரணத்தால் வெளியூர் பயணம் தடைபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

டீசல் தட்டுப்பாடு தொடர்பாக பெட்ரோல் விநியோகஸ்தர்கள் கூறியதாவது: பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களது உற்பத்தியை குறைத்ததன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மணலியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்திகரிப்பு பணியை 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக குறைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு வழங்கியதும் ஒரு காரணம். கச்சா எண்ணெயின் வரத்தும் திடீரென குறைந்துள்ளது. இதனால் தான் சென்னையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இந்தியன் ஆயில் மூலம் டீசல் வழங்குகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.

பல மணி நேரம் நிற்கும் வாகனங்கள்
டீசல் போட வந்த வாகன ஓட்டிகள் கூறுகையில்,‘‘ டீசல் முடியும் தருவாயில் எனது வாகனத்தை ஓரங்கட்டி டீசல் போட வந்தேன். இப்போது டீசல் இல்லை என்கின்றனர். நான் மட்டுமல்ல சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பஸ் ஒன்று காலை முதலே இந்த பங்க்கில் தான் நிற்கிறது. டீசல் வழங்கினால் தான் இங்கிருந்து எங்களது வாகனங்களை எடுக்க முடியும் என்ற சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு நேரம் இங்கு நிற்கப் போகிறோமோ தெரியவில்லை. தொலைபேசி மூலம் விசாரித்து விட்டோம். இந்த பங்க்கில் மட்டுமல்ல அடுத்தடுத்த அனைத்து பங்க்குகளிலும் இதே நிலை தானாம்’’ என்றனர்....

* பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் முறையை ரத்து செய்ய கோரிய விவகாரம்.

எந்தெந்த விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை சுருக்கமான வரைவாக தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

வழக்கு மீண்டும் செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு, அன்று வழக்கின் நிலை குறித்தும், வழக்கு குறித்தும், எப்போது  விசாரணை நடத்தப்படும் என்ற தேதிகள் அன்றைய தினம் இறுதி செய்யப்படும்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவு.

* வேளாண்துறை சார்பில் கட்டிடங்கள் திறப்பு:

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 125 கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 4 ஆய்வகக் கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக மையங்கள், வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையக் கட்டடம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* வெளிநாடுகளுக்கு கண்டெய்னர் லாரிகளில் அனுப்பும் பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் கைது.

ரூ.2.75 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல். கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேர் கைது -தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்.

தமிழ்நாடு  தலைமைச்  தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின்  தேர்தல்  இம்மாதம்  23 9 2022 அன்று நடக்கவிருக்கிறது   இந்தத் தேர்தலில்    நான்கு அணிகளாக  தேர்தல்  நான்கு அணிகளாக களம் இறங்குகிறது  முதலாவதாக  கவிஞர் முனைவர்   பீட்டர் அந்தோணிசாமி தலைமையிலான  வின்னர்ஸ் அணியும்  இரண்டாவதாக   சதீஸ்  தலைமையிலான   டீம் அணியும்   மூன்றாவதாக  வெங்கடேசன் அகரம் அணியும்   நான்காவதாக  கார்த்திக் தலைமையிலான  அச்சீவர்ஸ்  அணியும்   நான்கு அணிகளாக   களம்  இறங்கி  தேர்தலில்  போட்டி இடுகிறார்கள்  தலைமைச் செயலக கோட்டை வட்டாரங்களில் உள்ள  அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள்  தலைமை செயலக முதல்வர் அலுவலக  அதிகாரிகள்  மற்றும் ஐஏஎஸ்  அதிகாரிகள்  தமிழக  முதலமைச்சர்  அமைச்சர் பெருமக்கள்  எதிர்க்கட்சி தலைவர்கள்  ஆளுங் கட்சி எம்எல்ஏக்கள்  எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்  யார் இந்த அணியில் வெற்றி பெற  வாய்ப்பு உள்ளன  என்று  மிகவும் எதிர்பார்ப்புடன்  உள்ளனர் கோட்டை வட்டாரத்தில் விசாரித்த பொழுது   பெண்கள்  மத்தியல் பீட்டர்   அந்தோணி சாமி அவர்களுக்கு நல்ல பெயர் இருப்பதாகவும்  அரசு ஊழியர்கள் சம்பந்தமான எந்த விஷயத்திற்கும்  அரசு ஊழியர்கள்   இவர்களை அணுகினால்  உடனே தலையிட்டு  அனைத்து காரியங்களையும் செய்து கொடுப்பதாகவும்   கூறுகிறார்கள்  ஆண்கள் மத்தியில்  நல்லது கெட்டது காரியத்திற்கும் அழைத்தால் உடனடியாக அதை தீர்வு காண்பது இவரின் முக்கிய வேலையாக இருப்பதாக கூறுகிறார்கள்  மிகவும் எளிமையாக பண்பாக அனைத்து ஊழியர்களும் இவரை தொடர்பு கொண்டு எந்த விஷயத்தில் எந்த நேரத்திலும் கேட்கலாம் என்றும் கூறுகிறார்கள்  மொத்தத்தில்  கோட்டை வட்டாரத்தில் உள்ள அலுவலர்கள் மத்தியில்  அதிகமாக பேசப்படுகிறது  பீட்டர் அந்தோணிசாமி அணி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  வாய்ப்பாக தெரிகிறது   என  கூறுகிறார்கள்.

* Suresh Raina announces retirement from all formats of cricket.

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு.

* 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

* ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள வருவாய்த்துறையினர்

17 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கு அருகே இருக்கும் தரைப்பாலம் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

* நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 22ம் தேதி மீன் பிடிக்க சென்று முல்லை தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்த 10 மீனவர்களும் விடுதலை-இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

வரும் 10 ம் தேதி விசைப்படகின் உரிமையாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவு.

* இந்தியா வங்கதேசம் இடையே பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று டெல்லியில் இந்திய பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார்

பின்னர்  இரு தரப்பு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.

* இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

http://neet.nta.nic.in என்ற முகவரியில் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை

* உயிர் பிழைத்து விடுவான் என்று கருதி இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த கொடூரம்!

பல்லாரி :நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கங்கம்மா. இந்த தம்பதியின் மகன் பாஸ்கர் (வயது 12).

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டு இருந்த பாஸ்கர், எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்த குழியில் விழுந்து விட்டான். இதனால் அவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த நிலையில் பாஸ்கர் தண்ணீர் தேங்கிய குழியில் பிணமாக மிதப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

அப்போது முகநூலில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மீது உப்பு குவியலை கொட்டினால் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் என்று ஒரு பதிவை படித்தது சேகருக்கு நினைவுக்கு வந்தது. இதனால் அவர் பாஸ்கர் உடல் மீது உப்பு குவியலை போட்டார். ஆனால் 8 மணி நேரம் ஆகியும் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை. இதன்பின்னர் பாஸ்கரின் உடல் உப்பு குவியலில் இருந்து எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

பாஸ்கர் உடல் மீது உப்பு குவியல் கொட்டி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

* சியோல் : தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், 'ஹின்னம்னார்' சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருவதால் நாடு முழுதும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், சமீபத்தில் கன மழை பெய்தது. தலைநகர் சியோல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் 14 பேர் உயிரிழந்தனர்.

கன மழை பெய்து சில வாரங்களே ஆன நிலையில், தென் கொரிய கடற்கரை பகுதியில், 'ஹின்னம்னார்' சூறாவளிப் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால், நாடு முழுதும் கன மழையுடன் கூடிய சூறாவளி காற்று வீசி வருகிறது.

இந்தப் புயல், ஜெஜு தீவு நகருக்கும், புசான் நகருக்கும் இடையே இன்று கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 290 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புசான் நகரை சுற்றி 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், நேற்று இரவு முழுதும் தன் அலுவலகத்திலேயே தங்கி இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்தார்.

* 🇩🇪ஜெர்மனியின் லீப்ஜிக் எரிசக்தி விலைகள் குறித்த அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான போராட்ட அலைகளை எதிர்கொள்கிறது.

* மதுரை வைகையாற்ற்றில் வெள்ளப் பெருக்கு, ஆற்றில் வினாடிக்கு 15,000 கன அடி நீர் வர துவங்கியதால் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்

வைகை அணை மற்றும் பிற ஆறுகளில் இருந்து வைகையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மதுரை வைகையாற்றில் வெள்ளப் பெருக்கு

யானைக்கல், மீனாட்சி கல்லூரி இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்

ஆற்றின் கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை

* கடலூர்: மத்திய சிறை சப்-ஜெயிலர் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்ல முயன்ற வழக்கு.

போலீசாரால் தேடப்பட்டு வந்த 2வது குற்றவாளியான, திருவள்ளூர் கத்திவாக்கத்தைச் சேர்ந்த மணவாளன் உள்ளிட்ட 3 பேர் பட்டுக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண்.

* பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி.

அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம்.

* லக்னோவில் ரூ.1200 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த போதை பொருட்கள் பறிமுதல் - டெல்லி காவல்துறை அதிரடி

ஆப்கானிஸ்தானைச்சேர்ந்த  இருவர் கைது. இந்திய வரலாற்றில் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்டது இதுவே மிகப்பெரிய அளவாகும்.

* நாளை திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

காரணம் நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு -  மாவட்ட ஆட்சித்தலைவர்

* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

* காரின் பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்; மீறினால் அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்

- சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்து நிகழ்வு குறித்த கேள்விக்கு சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

* சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் பாரத ஒற்றுமை பயணத்தை நாளை கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்க உள்ளார்

* காரின் பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்; மீறினால் அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்

சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்து நிகழ்வு குறித்த கேள்விக்கு சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

* சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் பாரத ஒற்றுமை பயணத்தை நாளை கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்க உள்ளார்

* இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.

விழுப்புரம் மாவட்டம்
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கஸ்தூரிபாய் நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 78 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பள்ளியில் ஒரே ஒரு ஓட்டு கட்டிடம் மட்டுமே உள்ளது. மிகவும் குறுகலான இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கும் மற்றொரு பகுதியில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியின் வெளியே உள்ள மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது.

மேலும் இடநெருக்கடியால் ஒரே அறையில் 4 வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத அவல நிலையும் உள்ளது. இது தவிர கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் ஆங்காங்கே உடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் உடைந்த ஓடுகள் வழியாக உள்ளே புகுந்து வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கி குளமாக மாறிவிடுகிறது. இதனால் மழை பெய்யும் போது பாதுகாப்பு கருதி 5-ம் வகுப்பு மாணவர்களை தவிர மீதமுள்ள 4 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கியுள்ள இந்த காலத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பள்ளிக்கட்டிடங்களின் மீதும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு உடனடியாக புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

*'திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெறும்.

நாளை மறுநாள் திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், படி பூஜையும் உண்டு.

நாளை முதல் 10ம் தேதி வரை தினமும் மதியம் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும்.

10ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை சார்த்தப்படும்.

தரிசனத்துக்கு, ஆன்லைன் வாயிலான முன்பதிவு நடைபெறுகிறது.

நிலக்கல்லில், ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

The Agnipuratchi1 is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages