அக்னிப்புரட்சி இன்றைய (09.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.09.2022) முக்கிய செய்திகள்.

* உடல்நலக் குறைவால் உயிரிழந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறவுள்ளார்.

பிரிட்டன் வழக்கப்படி, ராணி உயிரிழந்த 2ம் நாள், சார்லஸை புதிய அரசராக அறிவிக்கிறார்கள்.

புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

* நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் இன்று 3வது நாள் நடை பயணத்தை துவங்கினார் ராகுல்காந்தி எம்.பி.

நாகர்கோவில், சுக்கான் கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை வழியாக தக்கலை வரை நடைபயணம்.

* CUET - UG தேர்வு முடிவுகள்
செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும்-UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவிப்பு.

UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET - UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.

* கல்வி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்- நீதிமன்றம்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச் செலவையும் அரசாங்கமே வழங்குகின்றது- நீதிமன்றம்.

* தமிழகத்தில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு:

ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தமிழகத்தில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளது.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் எனும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஓசூரில் தொடங்கியுள்ளது.

டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.  

* ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்; 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க  உத்தரவிட்டுள்ளது. 

* கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி.

தொண்டாமுத்தூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் 120 அடி ஆழ கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஆதேஷ், ரவி, நந்தனன் ஆகியோர் பலியானார்.

* பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத் மறைவை ஒட்டி இந்தியா முழுவதும் வரும் 11ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை துக்கம் அனுசரிப்பு

அன்றைய தினம் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு

* டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு:

அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு  ஒத்திவைப்பு.

நிர்வாக காரணங்களுக்காக தேர்வு நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

* நாட்டா தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற அறிவிப்பை மீறி பி.ஆர்க் சேர்க்கை மறுத்த விவகாரம்.

மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பற்ற கல்வியாளர்கள், அதிகாரிகளால்  இளைஞர்களின் வாழ்வு பாதுகாப்பற்றதாக மாறுவதற்கான உதாரணம் இந்த வழக்கு - நீதிபதி.

பெயருக்கு பின்னால் கல்வி தகுதியை பெற்றிருக்கும் ஆணவக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால், மாணவர்களின் வாழ்க்கை வீணாகிறது - உயர் நீதிமன்றம்.

கல்வி வணிகமயமானதுடன், தகுதி இல்லாதவர் மற்றும் அறிவுசார் ஆணவகாரர்களின் கைகளிலும் விழுந்துவிட்டது - நீதிமன்றம்.

* Queen Elizabeth - Red briefcase
Committed to duty until the end: In this official photograph I took this year for Accession Day, one of her last official photographs, The Queen Elizabeth Two is working on her iconic ‘red box’, symbolic of her indefatigable dedication to her role, working on a daily basis until the end…

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்பது முழு பெயர். அவருடைய படம் நாணயம் -பண நோட், ஸடாம்பில் இடம்பெற்று இருக்கும். இனி இதில் சார்லஸ் -3 இடம் பெறும்.

பிரிட்டன் அரசு அரசியின் ஒப்புதல் பெற அனுப்படும் ஆவனங்களை வைக்க தன்னோடு சிவப்பு பெட்டியை அரசி இராண்டாம் எலிசபெத் எப்போது வைத்திருப்பது பிரிட்டிஷ் மரபு. பட்ஜெட் தாக்கல் செய்ய பட்ஜெட் ஆவனத்தை வைக்கும் தோல் பையை போல மரபு-வாடிக்கை.

* சிகிச்சை முடிந்து இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பினார்.

சென்னையில் இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் . அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை வீடு திரும்பினார்.

* கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு. செப்டம்பர் 12 முதல் 26ஆம் தேதிவரை adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

* போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

போக்சோ வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பிய பின் மாவட்ட குழந்தை நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்றும், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்களிடம் நடத்தப்படும் விசாரணையை வீடியோவாக பதிவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

* இனி உணவகங்களின் மெனு கார்டில் கலோரி குறித்த தகவல்கள் கட்டாயம்: FSSAI அதிரடி

புதுடெல்லி: இனி வரும் நாட்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெற்றுள்ள உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு உட்பட்டு இது நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் இனி உணவுப் பிரியர்கள் தங்களது ஆர்டரில் உள்ள பர்கர், பீட்சா, பட்டர் சிக்கன் என அதன் சர்விங் அளவைப் பொறுத்து, அவற்றின் கலோரி விவரத்தை மெனு கார்டு மூலம் அறிந்து கொள்ளலாம். இது kcal என குறிப்பிடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

உணவுப் பொருட்களில் உள்ள கலோரி அளவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது. இருந்தாலும், இதனை நடைமுறைக்குக் கொண்டுவர உணவகங்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மெனு கார்டில் கலோரி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இதனை நடைமுறைக்கு கொண்டு வருகிறோம். ஆரோக்கியமே வாழ்வின் வளம். எப்படி நாம் ஆடை அணிகலன்களை வாங்கும்போது அது குறித்து அறிந்துகொண்டு வாங்குகிறோமோ, அதுபோல தான் இதுவும். மக்களின் நலனைக் கருதி இதனைக் கொண்டு வருகிறோம்.

முதலில் பெரிய உணவகத்தில் இருந்து இதனைத் தொடங்குகிறோம். படிப்படியாக சிறிய உணவகங்களுக்கும் கொண்டு வரப்படும். பெரும்பாலான உணவகங்கள் இதற்கு ஒத்துழைப்பு தந்துள்ளன. சில நிறுவனங்கள் அவகாசம் கேட்டுள்ளன” என உணவுப் பாதுகாப்பு அதிகாரி இனோசி ஷர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 நவம்பர் வாக்கில் இந்த அறிவிப்பை FSSAI வெளியிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவக நிறுவனங்களுக்கு ஜனவரி 1, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜூலை 1 வரை அது நீட்டிக்கப்பட்டது. இப்போது இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவகங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

The Agnipuratchi is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1

உடற்பருமன் (obesity) சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக இங்கிலாந்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உடற்பருமனுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் இருக்கிறது.

* பெங்களூருவில் 5 வது நாளாக வடியாத வெள்ளம் | அன்றாட உணவுக்கே அல்லாடும் கோடீஸ்வரர்கள் - ஐடி நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி நஷ்டம்

பெங்களூருவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, மகாதேவ புரா, எமலூர், பெல்லந்தூர் உட்பட 70-க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஆடம்பர பங்களா, வில்லா ஆகியவற்றுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் படகு, டிராக்டர் மூலம் மீட்கப்பட்ட மக்கள் தனியார் விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். விடுதிகள் நிரம்பி வழிவதால், கட்டணமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் 5-வது நாளாக நேற்றும் முழுமையாக வடியவில்லை. எனவே பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளை சூழ்ந்த நீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் போதிய வடிகால் வசதி இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் வெள்ளத்தை வடிய வைப்பதில் மாநகராட்சி பணியாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சில இடங்களில் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். அங்கு ஆன்லைன் உணவு விநியோகம் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதால் கோடீஸ்வரர்களும் ஒருவேளை உணவுக்கே அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஐடி நிறுவனங்கள் பாதிப்பு:

பெங்களூருவில் பெய்துவரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, வெளிவட்ட சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. ஊழியர்கள் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. மின்சாரமும், குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டதால் இந்த நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பெங்களூருவின் வருமானத்தில் 32 சதவீத தொகை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. ஆனால் சாலை வசதி, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு, வெள்ள அபாய தடுப்பு ஆகிய பணிகளை அரசு மேற்கொள்வதில்லை. இந்த சூழலை சரி செய்யாவிடில் நாங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐடி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, 6 மாதங்களுக்குள் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன் உறுதி அளித்தார்.

* பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி காவிரி பாலம் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செப்டம்பர் 10) நள்ளிரவு 12 மணி முதல் காவிரி பாலம் மூடப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி - சென்னை செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலை சென்று காவிரி புதுப் பாலம் வழியாக செல்லலாம் எனவும் அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை சென்று திருச்சி அடையலாம் எனவும் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள், அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம்.

பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் வழக்கம்போல காவிரி பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages