அக்னிப்புரட்சி இன்றைய (10.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.09.2022) முக்கிய செய்திகள்.

* பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்.

இன்று முதல் நவ.13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

* பலாவ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு

மெலிகியோக்,
அமெரிக்க கண்டத்தின் பசிபிக் தீவுக்கு உட்பட்ட பகுதியில் தன்னாட்சி குடியரசாக உள்ள பலாவ் நாட்டின் மெலிகியோக் மாகாணத்தின் தென்கிழக்கே 1,165 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.01 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

* புதிய மின்கட்டண உயர்வு அமல்.
தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு.

2026 - 27ம் ஆண்டுவரை புதிய மின்கட்டண உயர்வு அமலில் இருக்கும் என அறிவிப்பு.

* முகத்தில் மட்டும் 150 தையல்கள்.. பூங்காவில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த 11வயது சிறுவன் ஒருவன் அங்கிருக்கும் பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுபாஷ் தியாகி என்பவர் தனது வளர்ப்பு நாயான பிட்புல் நாயுடன் வாக்கிங் வந்துள்ளார்.

அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை இந்த நாய் துரத்தி கவ்வியுள்ளது. இதனால் சிறுவன் பயந்து ஓட பின்தொடர்ந்து நாய், அதை விடாமல் கவ்வியுள்ளது. இதனை கண்ட உரிமையாளரும் அந்த நாயை இழுக்க முயன்றபோதும் அது சிறுவனை விட்டபாடில்லை.

இதையடுத்து இதனை கண்ட அருகிலிருந்தவர் ஒருவர் சிறுவனை மீட்டுள்ளார். இருப்பினும் அந்த நாய் சிறுவனை கடிதத்தில் அவரது முகம் உட்பட உடல் முழுவதும் 150 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இதையடுத்து இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாய் வளர்க்கும் உரிமையாளர் பிட்புல் நாயை உரிமம் பெறாமல் வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்குள்ள நகராட்சி நிர்வாகம் உரிமையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

முன்னதாக இதே உத்தரபிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மகன் வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்து கொன்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதே மாதம் இறுதியில் பஞ்சாபில் பிட்புல் நாய் சிறுவனின் காதை கடித்து துப்பியுள்ள நிகழ்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் உத்தரபிரதேசத்தில் பிட்புல் நாய் சிறுவன் ஒருவனை கொடூரமாக கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன் காலத்தில் பிட்புல் நாயை வேட்டையாட பயன்படுத்த பட்டதால், இதன் குணம் மிகவும் கொடூரமாக இருக்கும். இதனால், இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் இந்த நாயை வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* ராமநாதபுரத்தின் அவலநிலை: காலி குடங்களுடன் குடிதண்ணீரை தேடி அலையும் மக்கள்...!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வறண்ட மாவட்டம் என்று தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் அழைக்கப் பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களைவிட மழை பெய்வது குறைவாக இருப்பதோடு மட்டுமில்லாமல் குடிதண்ணீர் பிரச்சினை என்பது மிக முக்கிய பிரதான பிரச்சினையாக உள்ளது.

ஒருபுறம் வைகை அணையிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கடலில் கலந்து வீணாகி வருகின்றது. மறுபுறம் மக்கள் குடிதண்ணீருக்காக குடங்களுடன் அலையும் நிலையும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை அருகே ஆனைகுடி சாலையில் குடிதண்ணீருக்காக மோட்டார் சைக்கிளில் தள்ளு வண்டியை இணைத்து குடங்களுடன் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீரை தேடி மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மின் கட்டண உயர்வு தேவையற்றது.

* மக்களின் மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

* கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவ படிப்புக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

* சென்னை: ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும்  பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது!

மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் தான் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கருத்துத் தெரிவித்தனர். அதன்பிறகும் மின்கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல!

மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தேவையற்றது. மக்களின் இந்த மனநிலையை உணர்ந்து மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!

* பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை அடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் தேர்வு செய்யப்பட்டார்;

இங்கிலாந்து வரலாற்றில் அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான்.

* ஒரு ரூபாய்க்கு புடவை முண்டியடித்து குவிந்த பெண்கள்

கிருஷ்ணகிரியில் பிரபல ஜவுளி கடையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முதலில் வரும் 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என கூறியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். அவர்கள் புடவைகளை வாங்கிச் சென்றனர்.

* திருப்பதி மலைப்பாதையில் 27 முதல் மின்சார பேருந்து

திருமலை: திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி- திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை முதல்வர் ஜெகன் மோகன் அளித்ததை தொடர்ந்து, ஓலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புதிய மாடல் எலெக்ட்ரிக் பேருந்து இன்று காலை திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாக பொறுப்பு, ‘மெகா இன்ஜினியரிங்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 36 இருக்கைகள், குளிர் சாதனம். சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த பேருந்து, முன்பாக இன்னும் 10 பேருந்துகள் வர உள்ளன. ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு முதல்வர் ஜெகன் பட்டு வஸ்திரம் சமர்பிப்பார்.  அப்போது, இந்த பேருந்து போக்குவரத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

* சனி, ஞாயிறுகளில் மட்டும்...!  மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்

உசிலம்பட்டி: திருமணத்துக்கு பின்னும் மணமகனை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டுமென அவரது நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்ற சம்பவம் வியப்பு கலந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விபரம் வரமாறு:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் என்ற அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் ஹரிபிரசாத்துக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை சந்தித்து திருமணத்திற்கு பின்னரும் ஹரிபிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது என்ற ஒப்பந்த பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றனர்.

இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பின்னர் மணமகன் விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் ஒரு சில சமயம் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம்.

தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் -ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

அக்டோபர் 15ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு, ஆன்லைன் மூலமாக வெளிப்படையாக நடக்கும்.

அரசு கருவூலத்தில் பல்லாயிரம் கோடிக்கு பணம் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் இலக்கு அல்ல நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற தேவையான பணம் இருந்தால்போதும் என்று நினைக்கிறோம்.

நீங்கள் தனி தீவு கிடையாது, நானும் உங்களில் ஒருவன்;  நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன்.

அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள்.
இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சி.

அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமாக இருப்பேன் - முதல்வர் ஸ்டாலின்.

* மாநில போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டியில்  டி.ஜி.பி. சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில், உயரதிகாரிகளுக்கான பிரிவில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதலிடம் பெற்று சாதனை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages