அக்னிப்புரட்சி இன்றைய (17.09.2022) முக்கிய செய்திகள்.
* தமிழக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.
2001 - 2006 ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்.
* பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று.
பிரதமர் மோடியின் பிறந்தநாள் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
இன்று முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை மோடி பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது.
மோடி பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல நமோ மொபைல் போன் என்ற செயலி உருவாக்கம்.
இன்று செப்டம்பர் 17 இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்.
இவர் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
பிறகு 1998-ல் குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, விரைவில் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2001-ல் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014-ல் இந்திய பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
* புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக பல்வேறு காரணங்களால் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
பல குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் அதிகமாகி உள்ளது.
இந்த பாதிப்பு காரணங்களால் குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு தியாகிகள் தினம் மற்றும் தந்தை பெரியாரின் 144வது பிறந்த தினம் இன்று.
தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாட்டம்.
தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, சமத்துவம் உள்ளிட்டவைகளுக்காக பாடுபட்டவர் பெரியார். அதேபோல் தமிழகத்தில் வன்னியர்கள் 20% இட ஒதுக்கீடுகாக 21பேர் காவல் துறையால் சுட்டு கொள்ளப்பட்டானர் என்பது குறிப்பிடத்தக்கது.
* திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை, பெரியார் திடலில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
சிறுகனூரில் 30 ஏக்கர் பரப்பளவில், நூலகம், ஆய்வகங்களுடன் 'பெரியார் உலகம்' அமைக்கப்படுகிறது.
பெரியார் உலகில் 95 அடி உயர பெரியார் சிலை நிறுவப்பட உள்ளது.
பெரியார் திடலுக்கு வந்தேன் என்றால் என் தாய் வீட்டுக்கு வந்துள்ளேன் என அர்த்தம்.தாய் வீட்டுக்கு மகன் வருவதில் ஆச்சரியம் இல்லை;
பெரியார் திடலுக்கு வந்தாலே புத்துணர்சி வருகிறது. மதவாத சக்திகளுக்கு எதிராக பெரியாருடைய கோட்பாடுகளை இந்தியா முழுவதும் அமலாக்கக்கூடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.-சென்னை பெரியார் திடலில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
* பெண் விடுதலைக்கு குரல் கொடுத்து, மூட நம்பிக்கைக்கு எதிராக, தமிழ் மொழிக்கு பல சிறப்புகளை செய்தவர் பெரியார்- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
பெரியார் திடலில் மரியாதை செலுத்திய பின் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
* பெருங்களத்தூர் மேம்பாலத்தைத் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை- வேளச்சேரி ஈரடுக்கு ரயில்வே மேம்பாலத்தின் 2ஆவது பகுதியான வேளச்சேரி - கைவேலி பகுதியை திறந்து வைத்தார்.
* அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுசெய்யப்பட்ட 22 பேருக்கு அறநிலையத்துறையில் பணி ஆணைகளை வழங்கினார் -முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* திருவள்ளுவருக்கு காவி உடை பொருத்தியுள்ளனர். அம்பேத்கருக்கு காவியை பூச நினைக்கிறார்கள். மோடியை பெரியார் என்று காட்ட நினைக்கிறார்கள். - விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.
இது வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் தான் இருக்கும்- தமிழ் மண்ணில் அவர்களின் ஜம்பம் பலிக்காது; இங்கிருந்து அவர்கள் விரட்டப்படுவார்கள்- விசிக தலைவர் திருமாவளவன்.
* தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் பன்றி, டெங்கு காய்ச்சல் காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்
9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்
* புதிய இந்தியாவில் பஞ்சாயத்து முதல் ஜனாதிபதி பதவி வரை பெண்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எந்த துறையில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கிறதோ, அத்துறையின் வெற்றி தானாக தீர்மானிக்கப்படுகிறது. பெண்களால் வழி நடத்தப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் இதற்கு சிறந்த உதாரணம் என பேசினார்.
சிறுத்தைகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதே நேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்கியது. அதன்படி 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது.
ஜெய்ப்பூருக்கு வந்துள்ள இந்த சிறுத்தைகள் பின்னர் அங்கு இருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது . இந்த சிறுத்தைகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி இன்று விடுவித்தார். தொடர்ந்து சிறுத்தைகளை பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். நமீபிய சிறுத்தைகளை https://youtu.be/gr3z4nUdtRc என்ற யூடியூப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.
* காவல்துறை உயர் அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமனம்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக நியமனம்.
சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம்.
* மோசடி பத்திரங்கள் ரத்து: சட்டத் திருத்தம் அமல்
'சென்னை-மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை, மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.ஒரு நபருக்கு தெரியாமல், அவரது சொத்தை இன்னொரு நபர், வேறு பெயர்களில் பதிவு செய்து அபகரிப்பது தொடர்கிறது.
இதில் பாதிக்கப்பட்ட நபர், காவல் துறையில் புகார் அளித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி, காவல் துறை விசாரணையில் மோசடி நடந்தது உறுதியாகும் நிலையில், அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், 'உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வந்தால் தான் பத்திரத்தை ரத்து செய்வோம்' என, சார் - பதிவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முடிவு கட்டும் வகையில், பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, கடந்த ஆண்டு சட்டசபையில் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் சமீபத்தில் கிடைத்து உள்ளது. பதிவுத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு:மோசடி பத்திரங்களை, மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் வழிமுறைகளுக்காக, பதிவு சட்டத்தில், ஐந்து பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆக., 16 முதல் இச்சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்புதிய விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்டவர்கள் முறையான நிவாரணம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் - பதிவாளர்கள், அது தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டு, சிறை செல்லவும் இந்த சட்டத் திருத்தம் வழி செய்கிறது.
* மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல்.
இந்த தலைமுறையை மது, போதை, சூது ஆகியவற்றிலிருந்து காப்பாற்ற முடியாது. அடுத்த தலைமுறையை காக்க வேண்டும்- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
* தென்காசி:பாஞ்சாங்குளம் பகுதியில் உள்ள பள்ளியிலும் தீண்டாமை தொடர்வதாக புகார்.
பள்ளியில் தங்களை மட்டும் தரையில் அமர வைப்பதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குற்றச்சாட்டு.
சாப்பிடும் தட்டில் கூட தீண்டாமை தொடர்வதாகவும் சிறுவர்கள் வேதனை.
* பாஞ்சாகுளம் : சிறுவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் கைது செய்யப்பட்டார்.
2 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு.
* சரிவு கண்ட பி.எஸ்.என்.எல்., நிறுவனம்
சென்னை--தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முறையாக சேவை வழங்காததால், ஜூலை மாதத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 2.4 லட்சமும், நாடு முழுதும் 8.19 லட்சமும் சரிந்துள்ளது.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' மாதம்தோறும் வெளியிடும். தற்போது, ஜூலை மாதத்திற்கான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.அதன்படி, தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை, 98.51 லட்சமாக இருந்தது. இது, ஜூலை மாதம் 96.11 லட்சமாக குறைந்து உள்ளது.இதன்படி, ஜூலை மாதத்தில் மட்டும், 2.4 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., சேவையில் இருந்து வெளியேறி உள்ளனர்.
தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கேரளா, புதுடில்லி, உத்தரபிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிந்துள்ளது.நாடு முழுதும், 8.19 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். பி.எஸ்.என்.எல்., 'பிராட்பேண்ட்' சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.52 கோடியாக உள்ளதாக, 'டிராய்' தெரிவித்துள்ளது.
* வருது பறக்கும் பைக்: விலை ரூ. 6.20 கோடி
டெட்ராய்ட் : உலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட் பகுதியில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 99 கி.மீ., வேகத்தில் பறக்கும்.
ஜப்பானில் இந்த பைக் விற்பனை துவங்கி விட்டதாகவும், இப்பைக்கின் சிறிய அளவை 2023ல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6.20 கோடி எனவும் ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
* லண்டன்-லண்டன், 'வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில்' வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது.
சமீபத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் நேரில் வந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு சார்பில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. அதற்கு பிரிட்டன் பார்லி.,யின் பொதுச்சபை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் அனுமதி மறுத்து உள்ளார்.
சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறலில் சீன பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறித்து பிரிட்டனை சேர்ந்த எம்.பி.,க்கள் கடந்த ஆண்டு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரிட்டனை சேர்ந்த 5 எம்.பி.,க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சீன பகுதிக்குள் நுழைய அந்நாடு தடை விதித்தது. இதையடுத்து, ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் சீன அரசு பிரதிநிதிகள் பார்லி., வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்
இதையடுத்து சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் நடக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. அவர் சார்பில் துணை அதிபர் வாங் குயிஷான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணியின் இறுதி சடங்கில் சீனா பங்கேற்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
* இந்திய உணவு கழகத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 5,043 காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ளது.
இந்திய உணவு கழகத்தில் (எப்.சி.ஐ) என்ஜினீயரிங் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்), அக்கவுண்ட், டெக்னிக்கல் உள்பட பல்வேறு பிரிவுகளில் 5,043 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.இ., டிப்ளமோ, பி.காம், பி.எஸ்சி போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
என்ஜினீயரிங் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 25, 27 வயது நிரம்பி இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசிதேதி: 5-10-2022. https://www.recruitmentfci.in/current_category_third_main_page.php?lang=en என்ற இணைய பக்கம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
* உலகக் கோப்பை டி20: இந்தியன் கிரிக்கெட் அணியின் புதிய சீருடை (ஜெர்ஸி)
* லண்டன் புறப்பட்டார் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
* கனியாமூர் கலவரத்தின் போது சூரையாடப்பட்ட பள்ளி சீரமைப்பது தொடர்பான விவகாரம்.
பள்ளியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவு.
ஆட்சியருக்கு 10 நாட்கள் பரிசீலிக்க அனுமதி வழங்கி இருந்த நிலையில் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார், பெற்றோர், பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது - ஆட்சியர்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது - ஆட்சியர்.
No comments:
Post a Comment