அக்னிப்புரட்சி இன்றைய (18.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.09.2022) முக்கிய செய்திகள்.

* விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்களை தேட வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் பேரங்கியூரில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சாலை மாறியலால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு 3 கீ.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

* கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே யூனிவர் காயின் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

ஓசூர், பர்கூர் உள்ளிட்ட 6 இடங்களில் இடைத்தரகர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

* பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பெங்களூரு வளர்ச்சி வாரிய ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

ஒப்பந்ததாரர் ராமலிங்கத்திடம் எடியூரப்பா சார்பில் பிரகாஷ் என்பவர் ரூ.12 கோடி பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முகமது சமிக்கு கொரோனா தொற்று உறுதி ; ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமிக்கு பதிலாக மாற்று வீரராக உமேஷ் யாதவ் அறிவிப்பு.

* பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல் வின்ஸ்டரில் நாளை அடக்கம்; ராணி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

* அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமை தோறும் போடப்படும்

அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தகுதியுள்ள அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.

அக்டோபர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இல்லை.

1044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் உள்ளது. பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும்.

பருவகாலத்தில் வரும் காய்ச்சல் என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை.

முகக்கவசம், தனிமனித இடைவெளி கிருமிநாசினி பயன்பாட்டை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* சினிமா துணை நடிகை விபரீத முடிவு.

(மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050)

சென்னை விருகம்பாக்கத்தில் துணை நடிகை தீபா என்ற பவுலின் (29) தனது வீட்டில் தற்கொலை.

காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.

வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

* வருகிற செப்டம்பர் 28ம் தேதி மதுரையிலும், அக்டோபர் 8ம் தேதி கோவையிலும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து “சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்” என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

* குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழையத் தடை.

பாஞ்சாங்குறிச்சி சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழையத் தடைவிதிப்பு.

பட்டியலின மக்களுக்கெதிராக குற்றம்புரிவோரை சில காலத்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில் நடவடிக்கை - தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க்.

* புதுச்சேரி: காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 177 ஆக உயர்வு.

நேற்று மட்டும் புதுச்சேரியில் 42 பேரும், காரைக்காலில் 8 பேர் என 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்- சுகாதாரத்துறை தகவல்.

* ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து விழுந்து பயங்கர விபத்து - இதுவரை 7 பேர் உயிரிழப்பு

பலர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

* தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... பரபரப்பு வீடியோ

தைவானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று 6.8 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவான நிலையில்,

இன்று பகல் 12 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் 7.2ஆக பதிவாகியுள்ளது. யூஜிங் நகருக்கு கிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

* எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு

கர்நாடகா: கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு  செய்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் புதிததாக குடியிருப்பு கட்டடுவதற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. பெங்களூரு  பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைவராக இருந்த ஜி.சி.பிரகாஷ் மூலம் 12 கோடி ரூபாய் லஞ்சத்தை ராமலிங்கம் கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி சம்பந்தி தொடர்புடைய 7 போலி நிறுவனங்கள் மூலம் லஞ்சம் பணம் கைமாறியுள்ளதாகவும் குற்றசாட்டு வைத்துள்ளனர். லஞ்சம் பணம் எடியூரப்பா மகனும், பாஜக மாநில துணை தலைவருமான விஜயேந்திராவுக்கு சென்று சேராதது தொடர்பான உரையாடல் வெளியானது.

ஏற்கனவே முடிந்த ஒப்பந்த பணிகளுக்கான தொகையை வழங்க மேலும் ரூ.12.5 கோடி லஞ்சம் பேரம் பேசப்பட்டதாகவும் புகார் குவிந்துள்ளது. லஞ்சம் பேரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி ராமணலிங்கமும், எடியூரப்பாவின் பேரன் சசிதரன் பேசிய தொலைபேசி உரையாடலும் வெளியானது. தொலைபேசி உரையாடல் ஏற்கனவே தரப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகத்தில் முக்கிய அரசு ஒப்பந்ததரராக உள்ள ராமலிங்கம் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளது என்று கூறியுள்ளனர்.

 தமிழ்நாட்டில் அரசுப்பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளது. தற்போது ரூ.12 கோடி லஞ்சம் கொடுத்தாக கர்நாடக லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்திருப்பதால் ராமலிங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 666.62 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழங்க 12 லஞ்சம் கைமாறியதாக கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொகாலி, பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் அங்கு பயிலும் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால், எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரே இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்தே மாணவர்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் பரவியாதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் பெற்றோர்களும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட மாணவி தனது செயலை ஒப்புக்கொண்டதாகவும் தற்போது போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வீடியோக்கள் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாணவிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசாரும் மறுத்துள்ளனர்.

* திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் தொடக்கம்.

மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல்.

* தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!

• தைவான் நிலநடுக்கம்: விளையாட்டு மைதானம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழும் சிசிடிவி காட்சி.

வீடியோ: https://youtu.be/J6-L-DQsi0E

• தைவான் நிலநடுக்கம்: ரயில் நிலையத்தில் ஆட்டம் கண்ட ரயில் பெட்டிகள்.

• தைவான் நிலநடுக்கம்: மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு.
வீடுகள், கட்டடங்கள் சேதம் - மக்கள் அச்சம்...

* அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

CGL exam notification.

அஞ்சல் எழுத்தர் நேரடி தேர்வு Staff Selection Commission மூலமாக நடைபெற உள்ளது. புதிய recruitment விதிமுறைகள்படி இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி - Any Degree.

வயது வரம்பு 18-27
OBC - 30, SCST - 32

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.10.2022.

The Agnipuratchi is now on Telegram!
JOIN US: https://t.me/Agnipuratchi1

* வேலை வாங்கி தருவதாக மோசடி: மியான்மரில் தவித்த இந்தியர்கள் 30 பேர் மீட்பு..

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை சர்வதேச கும்பல் ஏமாற்றி வருகிறது. அப்படி ஏமாறுபவர்களை அந்த கும்பல் சட்ட விரோதமாக மியான்மருக்கு அழைத்து வந்துள்ளது. தற்போது வரை கிடைத்த தகவல்களின்படி 60 பேர் ஏமாந்துள்ளனர். தற்போது அவர்கள், மியான்மர் அரசின் முழு கட்டுப்பாட்டில் இல்லாத மியாவாடி பகுதியில் உள்ளனர். இந்த பகுதி, ஆயுதம் ஏந்திய குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரும் அந்த குழுவின் பிடியில் உள்ளனர். அவர்களை மீட்பதற்காக, மியான்மர் அரசுடன் இணைந்து நமது தூதரகம் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 30 பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களையும் மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages