கழனி வேலைக்கு சென்ற பெண்மணி கொடுத்த காலை உணவு: கேப்பைக் கூழும் கருவாட்டுக் குழம்பும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவின் 1996 ஆம் ஆண்டு நினைவுகள். - Agnipuratchi

கழனி வேலைக்கு சென்ற பெண்மணி கொடுத்த காலை உணவு: கேப்பைக் கூழும் கருவாட்டுக் குழம்பும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவின் 1996 ஆம் ஆண்டு நினைவுகள்.

Share This

கழனி வேலைக்கு சென்ற பெண்மணி கொடுத்த காலை உணவு: கேப்பைக் கூழும் கருவாட்டுக் குழம்பும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவின் 1996 ஆம் ஆண்டு நினைவுகள்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவுக்கு செல்கிறேன். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து இராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்  அ.ம. கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இன்று காலை உரையாடிக் கொண்டிருந்த போது பழைய நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது.

அந்த நிகழ்வு நடந்த நாள் 18.07.1996.

அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக காலையிலேயே சென்றிருந்தேன். கொடியேற்று விழா நிறைவடைந்த போது சாலை வழியாக பெண்கள்  கழனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்ததனர். அனைவரின் தலையிலும் உணவுக் கலையம்.
அதைப் பார்த்த நான், அந்தப் பெண்களை அழைத்துப் பேசினேன். ‘‘ கஞ்சி கலையத்தில் என்ன எடுத்துச் செல்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். அவர்களில் ஒருவர் சொன்னார்... ‘‘அய்யா, கேப்பைக் கூழ் தான் கொண்டு செல்கிறோம் அய்யா’’ என்று.

உங்களிடம் உள்ள கேப்பைக் கூழில் எனக்கு கொஞ்சம் தருவீர்களா? என்று கேட்டேன். அவர்களில் ஒருவர், அய்யாவுக்கு தருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறி, கூழ் கொடுக்க முன்வந்தார். அதற்குள்ளாக சிலர் அந்த பெண்மணியிடம் இருந்த  செம்பை எடுத்து கழுவதற்காக ஓடினார்கள். அவர்களைத் தடுத்த நான், கழனிக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் செம்பை தூய்மையாகத் தான் வைத்திருப்பார்கள் என்று கூறினேன். பின்னர் அதே செம்பில் அந்த பெண்மணி எனக்கு கூழ் கொடுத்தார்.

கூழை வாங்கிக் கொண்ட நான், அதற்கு தொட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்று அந்த பெண்மணியிடம் கேட்டேன். அவர் கொஞ்சம் கூச்சப்பட்டுக் கொண்டே,‘‘கருவாட்டுக் குழம்பு’’ என்று கூறினார்.

தொடர்ந்து அதையும் வாங்கி, கருவாட்டுக் குழம்பு, அதிலிருந்து கத்தரிக்காய் ஆகியவற்றுடன் கேப்பைக் கூழை குடித்து பசியாறினேன்.

இந்த நிகழ்வுடன் இராணிப்பேட்டை மாவட்டம் சார்ந்த இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது.

1987-ஆம் ஆண்டில் ஒரு நாள் பாணாவரத்தில் உள்ள இரயில்வே கேட் முன்பாக,  தொடர்வண்டி  கடந்து செல்வதற்காக மகிழுந்தில் காத்திருந்தேன். அப்போது அந்த வழியாக பள்ளிச் சிறுவர்கள் சிலர் வந்தனர்.

அவர்களில் ஒரு மாணவர் ஓடிச் சென்று எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் சூடாக போண்டாவும், தண்ணீரும் வாங்கி வந்து கொடுத்தார். அந்த போண்டா மிகவும் சுவையாக இருந்தது. அப்போது போண்டா வாங்கி வந்து கொடுத்த 10&ஆம் வகுப்பு மாணவன் தான், இப்போது இராணிப் பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவராக பணியாற்றி வரும் அ.ம. கிருஷ்ணன்.
                                   ******************

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages