எஸ்.பி.ஐ., அறிமுகப்படுத்தும் 2 இன்டெக்ஸ் பண்டுகள்: முதலீடு செய்யலாமா?
கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ரிட்டர்ன்ஸ் வழங்கி வரும் எஸ்.பி.ஐ., மியூட்சுவல் பண்ட் நிறுவனத்திலிருந்து 2 இன்டெக்ஸ் பண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று எஸ்.பி.ஐ., நிஃப்டி மிட்கேப் 150 இன்டெக்ஸ் பண்ட் மற்றொன்று நிஃப்டி ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் பண்ட். பாசிவ் முதலீட்டு வகையில் இவை வருகிறது. அதாவது பண்ட் மேனேஜர் பங்குகளை வாங்க மாட்டார். நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் இன்டெக்ஸ் வெயிட்டேஜ் படி முதலீடு செய்யப்படும்.
மியூட்சுவல் பண்ட் நிறுவனங்கள் புதிய பண்ட் திட்டங்களை என்.எப்.ஓ., என்ற பெயரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடும். அந்த சமயத்தில் யூனிட் ஒன்றினை ரூ.10 என்ற குறிப்பிட்ட விலையில் வாங்க முடியும். என்.எப்.ஓ., காலம் முடிந்த பின்னர் சந்தை விலையில் அவை கிடைக்கும். தற்போது எஸ்.பி.ஐ., கொண்டு வந்துள்ள எப்போது வேண்டுமானாலும் முடித்துக்கொள்ள கூடிய பண்ட் ஆன நிஃப்டி மிட்கேப் 150 இன்டெக்ஸ் பண்ட் மற்றும் ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் பண்டுகளின் என்.எப்.ஓ.,க்களில் செப்., 21 முதல் 26 செப்டம்பர் வரை முதலீடு செய்யலாம். அக்டோபர் 3 அன்று யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். பண்ட் திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு எனும் என்.ஏ.வி., அக்டோபர் 11 முதல் தெரியவரும்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
புதிய பண்ட் அறிமுகம் குறித்து எஸ்.பி.ஐ., மியூட்சுவல் பண்ட் துணை மேலாண் இயக்குனர் டிபி சிங் கூறியதாவது: வளர்ந்து வரும் தொழில்களின் வளர்ச்சித் திறனைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நுழைவாயிலை இந்த மிட் மற்றும் ஸ்மால்-கேப் இன்டெக்ஸ் பண்டுகள் வழங்குகின்றன. இவற்றின் சந்தை மதிப்பு ஸ்மால் கேப்பில் இருந்து மிட்கேப்பாகவும், அதிலிருந்து லார்ஜ் கேப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. முதல் முறை பங்குசார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த இரண்டு பண்ட்களை நீண்ட கால அடிப்படையில் பணத்தை திரட்டுவதற்காக பரிசீலிக்கலாம். இவ்வாறு கூறினார்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்
இந்த இரு பண்ட் என்.எப்.ஓ.,க்களிலும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். என்.எப்.ஓ., காலம் முடிந்து என்.ஏ.வி., வெளியான பின்னர் தினசரி, வாராந்திரம், மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு எஸ்.பி.ஐ., என வசதிக்கேற்ப முதலீடுகளை செய்யலாம்.
யார் முதலீடு செய்யலாம்!
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பண்டுகள் உள்ள இன்டெக்ஸ் அதிக ரிஸ்க் கொண்டவை. இன்று முதலீடு செய்துவிட்டு நாளை லாபம் எதிர்பார்ப்பவர்கள் இந்த பண்டை விட்டு விலகியே இருங்கள். அடுத்த 10 ஆண்டுகளை இலக்காக கொண்டு முதலீட்டை தொடங்க விரும்புபவர்கள் இந்த பண்ட் ஆபரை பயன்படுத்திக் கொள்ளலாம். மிட்கேப்பில் பெரும்பகுதி இருக்கின்ற படி பார்த்துக்கொள்வது சிறந்தது. சிறிய நிறுவனங்கள் அதிக லாபம் தற்சமயம் தந்திருந்தாலும், அதிகம் சறுக்கி விடவும் வாய்ப்புகள் உண்டு.
No comments:
Post a Comment