அக்னிப்புரட்சி இன்றைய (21.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.09.2022) முக்கிய செய்திகள்.

* தீபாவளிக்கு அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர் செல்பவர்களுக்கு முன்பதிவு தொடங்கியது

அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது
அக்.21ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு

அரசு விரைவு போக்குவரத்துக்கழக இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

* உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன் நடைபெறும் வழக்குகளின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் முடிவு

விசாரணையை செப்.27ம் தேதி முதல் யூடியூப் வாயிலாக நேரலை செய்ய உச்சநீதிமன்றம் திட்டம்.

* ஏழு வகையான பேருந்துகள் உள்ளன

ஒரு வழித்தடத்தில் அனைத்து வித பேருந்துகளுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்க இயலாது

மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயிக்க வழிவகை இல்லை அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்துள்ளோம் aoboa.co.in
- அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

ஆம்னி பேருந்து கட்டண விவரங்கள்

சென்னை to மார்த்தாண்டம் - ரூ.1030 முதல் ரூ.3000 வரை நிர்ணயம்

சென்னை to நாகர்கோவில் - ரூ.980 முதல் ரூ.2860 வரை நிர்ணயம்

சென்னை to சேலம் - ரூ.530 முதல் ரூ.1690 வரை நிர்ணயம்

சென்னை to ஊட்டி - ரூ.770 முதல் ரூ.2260 வரை நிர்ணயம்

சென்னை to ஈரோடு - ரூ.610 முதல் ரூ.1710 வரை நிர்ணயம்

சென்னை to மதுரை  - ரூ.690 முதல் ரூ.1940  வரை நிர்ணயம்

சென்னை to திருச்சி - ரூ.520 முதல் ரூ.1470 வரை நிர்ணயம்

(குறைந்தபட்ச கட்டணம் முதல் அதிகபட்சம் வரை)

* முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: விரைவாக விசாரணைக்கு பட்டியிலிடக்கோரி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு.
முறையீடு ஏற்ற நீதிபதிகள்  நாளை விசாரிக்கப்படும் என தகவல்.

* விழா காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு எதிரொலி.

ஆம்னி பேருந்து சங்கத்தின் சார்பில் கட்டணம் நிர்ணயம். aoboa.co.in என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம்- அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தகவல்.

* ரவுடி எண்ணூர் தனசேகரனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.

கடலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி எண்ணூர் தனசேகரனை போலீஸ்காவலில் விசாரிக்க அனுமதி.

கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற வழக்கில் உத்தரவு.

* பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை.

நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவு.

ஊர் கட்டுப்பாடு என கூறி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவத்தில் உத்தரவு.

* சேடப்பட்டி முத்தையா (76) உடல்நலக் குறைவால் காலமானார்.

சேடப்பட்டியார் என அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதி, முன்னாள் சபாநாயகராக செயல்பட்டவர் சேடப்பட்டி முத்தையா.

ஜெயலலிதா ஆட்சியில் பேரவைத் தலைவராக இருந்த முத்தையா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

* மியான்மரில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை தாயகம் அழைத்து வர விரைவான நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

* பழனி ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார்

12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவன் உள்பட 4 பேர் கைது
விடுதி காப்பாளர் அமுதா, விடுதி காவலாளி விஜயா பணியிடை நீக்கம்

* எல்லை மீறி நடப்பதாக மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதின் ஆவேசம்

ரஷ்யாவை பலவீனப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி
பதிலடி கொடுக்க எங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளது - ரஷ்ய அதிபர் புதின்

அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல தயார்
ரஷ்ய ராணுவத்தை அணி திரட்டவும் அதிபர் புதின் உத்தரவு.

* கொரோனா, டெங்குவுடன் பன்றிக்காய்ச்சலும் பரவுகிறது

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தொற்று குறையாத நிலையில், தினசரி 500 பேர் என்ற அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் 'எச்1என்1 இன்ப்ளூயன்சா வைரஸ்' வகையை சேர்ந்த பன்றிக்காய்ச்சலிலும் தினசரி 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று முதல் மருத்துவ முகாம்களை, தமிழக அரசு நடத்த உள்ளது.டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 47 பேர் டெங்குவுக்கு பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூலையில் 51; ஆக., 53 என படிப்படியாக அதிகரித்து, செப்., மாதத்தில் இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவ காலம் மாற்றம் ஏற்படும்போது, டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது இயல்பானது.

கொரோனாவுடன், சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, பன்றிக்காய்ச்சலும் இருப்பதால், பரவல் அதிகம் என்பதுபோல் தோற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள எட்டு கோடி பேரில், ஒரு சதவீதம் என்ற அளவில் தான் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. எனவே, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்.அதேநேரம், சுய சிகிச்சை மேற்கொள்ளாமல், டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* ஏசிசி மகளிர் டி20 சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய (சீனியர் பெண்கள்) அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், எஸ் மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, டி ஹேமலதா, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், பூஜா வஸ்த்ரகர் ராஜேஷ்வரி  கயக்வாட், ராதா யாதவ் , கேபி நவ்கிரே

* மயிலாடுதுறை: மணல்மேடு அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேரணியாக வந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

* நடிகர் சூரியின் உணவகத்தில் சோதனை: 15 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு

திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது  சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம் , அரசு மருத்துவமனை ,  சந்திப்பு , ஊமச்சிக்குளம் , கடச்சனேந்தல் , நரிமேடு , ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மன் என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சமீப காலங்களாக துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை  தொடங்கியது. இதனால் எப்போதும் உணவகங்களில் கூட்டம்  காணப்படும். இந்நிலையில் நடிகர்  சொந்தமான உணவகங்களில்  விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு  இல்லாமல் கட்டணம்  பொதுமக்களிடம் இருந்து  புகார் வந்துள்ளது.

இதனையடுத்து அம்மன்  தலைமையிடமாக  கூடிய  தெப்பக்குளம் பகுதியில் உள்ள அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது  இல்லாமல் உணவுப்  கட்டணம் வசூலித்தது மற்றும் முறையாக  இல்லாமல் பொருட்கள் கொள்முதல் செய்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக 15 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் வணிகவரித்துறையினர்  வழங்கியுள்ளனர்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம்: நிபுணர்கள் புகார்

வாஷிங்டன்: சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

2014-ல் பென்சில்வேனியாவிற்கு வந்த சீன விளக்குப் பூச்சிகள் நியூஜெர்சி, இன்டியானா, ரோட் ஐலண்ட், மேரிலேண்ட், கனக்டிகட், விர்ஜினியா உட்பட அமெரிக்காவின் 14 மாநிலங்களில் திராட்சை கொடிகள் விளக்குப் பூச்கிகளால் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

* ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்.

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

செப். 30 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து கூடுதலாக 2,050 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்பு பேருந்துகளும் இயக்கம்.

* ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2023ம் ஆண்டின் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்திலும், 2025ம் ஆண்டின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும்
- ஐசிசி

* மதுரை ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பால் தயாரிப்பு பணியில் இருந்த ஆவின் உதவி மேலாளர் சிங்கார வேலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆவின் பாலகங்களில் ஆவின் அதிகாரிகள் கொண்ட குழு நாளை முதல் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* அகமதாபாத்: கடந்த 2021-ல் கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடியாகும்.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட கவுதம் அதானி கடந்த ஓராண்டில் 11% அதிக சொத்து சேர்த்துள்ளார்.

* சென்னை: கொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ல் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடந்த போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீஸ் வழக்கு பதிந்தது. வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

* எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 61வது படத்திற்கு ‘துணிவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!

* கார் உதிரிபாகம் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்து திமுக எம்எல்ஏ மிரட்டல்!?

வீடியோ: https://youtu.be/uLmWolqfPTg

மறைமலைநகர், சென்னை: ஆலைக்கான நிலத்தை குத்தகைக்கு விட்ட நிலத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்ஆர் ராஜா செயல்பட்டதாக புகார்.

ஆலையை மூடிவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாக வீடியோ வெளியானதால் பரபரப்பு...

* பஸ்சில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில், பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்திவரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் இருந்து வைத்தீஸ்வரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் பின்னால் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் பஸ்சின் பின்னால் தொங்கியபடியும், மேல்புறத்தில் அமர்ந்த படியும் செல்லும் காட்சிகளை பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

பஸ்சில் இடம் கிடைக்காததால் இது போன்ற ஆபத்தான பயணம் மாணவர்கள் மேற்கொள்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* சென்னை தண்டையார்பேட்டையில் பணம் வைத்து சூதாட்டம் - 27 பேர் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவி ஆய்வாளர் புகாரி மற்றும் குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 27 நபர்கள் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர். மேலும் உறுப்பினர் அடிப்படையில் மாதாமாதம் பணம் கட்டி விளையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டில் இருந்து 13 சீட்டுக் கட்டுகள், 'போக்கர்' எனப்படும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் 825 சில்லுகள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து அங்கிருந்த 27 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages