அக்னிப்புரட்சி இன்றைய (24.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.09.2022) முக்கிய செய்திகள்.

* அந்தமான் - நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
போர்ட் பிளேர்,

அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கே இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 75 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

* சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ரோகித் சர்மா

சர்வதேச டி20களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார்.
நாக்பூர்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது.

ஆடுகளத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 91 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார் ரோகித் சர்மா. இந்த நிலையில் இன்று அவரின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் (176) பெற்றுள்ளார்.

* புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப் பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புரட்டாசி: பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதைய õகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

* உக்ரைன் போரில் பங்கேற்பதை தவிர்க்க அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷிய ஆண்கள்.

உக்ரைன் போரில் பங்கேற்று சண்டையிடுவதை விரும்பாத ரஷியாவை சேர்ந்த ஆண்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடி வருகின்றனர்.
மாஸ்கோ,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார்.

போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறினார்.

எனினும் போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்பு வெளியானது முதல் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷியர்கள் தங்களின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷிய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக ரஷியா-ஜார்ஜியா எல்லயைில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அதேபோல் ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சாலை மார்க்கமாக மக்கள் வந்த வண்ணம் இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதினின் அறிவிப்பை தொடர்ந்து, ரஷியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன் மடங்கு உயர்ந்ததோடு, குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகள் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன.

இது ஒருபுறம் இருக்க 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷிய விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனாலேயே ரஷியாவை சேர்ந்த ஆண்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

* உக்ரைன் நிலைமை உலகத்திற்கே கவலை: ஐ.நா-வில் இந்திய அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: உக்ரைனில் தற்ேபாது ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்திற்கே கவலை அளிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா சபை கூட்டத்தில் பேசுகையில், ‘நீண்ட காலமாக நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்பாக இந்தியா கவலையடைந்து வருகிறது. அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றால், இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதின் அவசியத்தை மீண்டும் இந்தியா வலியுறுத்துகிறது.

இந்திய பிரதமர் மோடி கூறியது போன்று, இருநாடுகளும் போரிடுவதற்கான நேரம் இதுவாக இருக்க முடியாது. போரின் போதும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறுவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அத்தகைய செயல் எங்கு நடந்தாலும் உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். உக்ரைனில் தற்ேபாது ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்திற்கே கவலை அளிக்கிறது’ என்று கூறினார்.
 

* கொரோனா இல்லாத பண்டிகை காலம்: 6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்

புதுடில்லி:வரும் பண்டிகை காலத்தை ஒட்டி, கிட்டத்தட்ட 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுஉள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவல் இருந்த நிலையில், இந்த ஆண்டு பண்டிகை காலம், அத்தகைய அச்சம் எதுவும் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, பொருட்களின் சில்லரை விற்பனை அதிகரிக்கும் என்றும், வேலைவாய்ப்புகள் உயரும் என்றும் கருதப்படுகிறது.குறிப்பாக, மின்னணு வர்த்தக நிறுவனங்கள், கிடங்குகள், சரக்கு போக்குவரத்து, வினியோகம் உள்ளிட்ட துறைகளில், அதிகம் பேர் பணியமர்த்தப்படுவர் என தெரிகிறது.பண்டிகை கால தேவைக்காக, கடந்த ஜூலையிலிருந்தே ஆட்களை பணிக்கு சேர்க்கும் நடவடிக்கைகள் துவங்கி விட்டன. கொரோனா பாதிப்புகள் இல்லாத காரணத்தால், இந்த பண்டிகை காலத்தில் 5 முதல் 6 லட்சம் தற்காலிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதால், பல நிறுவனங்கள் முன்கூட்டியே ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்க துவங்கி விட்டனர்.

* பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87 வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர் அலுவலக கூட்டமைப்பு சார்பில் மரியாதை.

திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை.

* சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* 30 மாதங்களுக்குப் பிறகு பூட்டான் எல்லைகள் திறப்பு: இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1200 செலுத்தி தங்கலாம்

திம்பு: சுமார் 30 மாதங்களுக்குப் பிறகு இந்தியா - பூட்டான் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் தங்க விரும்பும் இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நாடு கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளது.

இமயமலையின் சிறிய சிற்றறரசு நாடு தான் பூட்டான். கரோனா தொற்று பரவல் காரணமாக தனது எல்லை கதவுகளை மூடியது. இந்நிலையில், சுமார் 30 மாதங்களுக்குப் பிறகு எல்லைகளை திறந்துள்ளது அந்த நாடு. பூட்டானுக்கு சுற்றுலா நிமித்தமாக இந்தியர்கள் அதிகம் சென்று வரும் தளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டுக்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த சூழலில் அப்படி வரும் வெளிநாட்டு மக்களிடம் கட்டணம் வசூலிக்க பூட்டான் அரசு கொள்கை அளவிலான முடிவை எடுத்தது. அதன்படி இப்போது அந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் பூட்டான் சென்றால் நாள் ஒன்றுக்கு சுமார் 1200 ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிகிறது. அதே போல மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் சுமார் 200 அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிகிறது.

இந்தியாவில் இருந்து செல்லும் மக்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை காண்பித்து பூட்டான் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்து. ஆன்லைன் மூலம் தங்களது வருகை குறித்து பதிவு செய்வதும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளின் எல்லை திறந்ததும் வியாபார நோக்கிலும், வேலை தேடியும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பூட்டான் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கோடீஸ்வரனாகியும் மகிழ்ச்சியில்லை;

"தலைமறைவாக உள்ளேன்” - லாட்டரியில் ரூ.25 கோடி கிடைத்த ஆட்டோ டிரைவர் வருத்தம்

கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாயை வென்றார் திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர். குலுக்கலுக்கு முதல்நாள் மாலையே அந்த லாட்டரியை அனூப் வாங்கியிருந்த நிலையில் அதிர்ஷடம் அவரைத் தேடிவந்தது.

தனது மகன் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிருந்தார். இதற்காக, கேரள கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார். இப்போது லாட்டரி பரிசு கிடைக்க, லோனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் திட்டத்தையும் கைவிட்டுளளார்.

25 கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கும் அனூப்புக்கு 10 சதவிகிதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் 30 சதவிகிதம் வரி போக 15.75 கோடி ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பணம் கிடைக்கப்போகும் சந்தோசத்தில் அனூப் இதுநாள் வரை இருந்து வந்தார். ஆனால், நேற்று தான் சந்தோசத்தில் இல்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், "லாட்டரி பரிசு கிடைத்தபோது சந்தோஷமாகவே இருந்தது. ஆனால், இப்போது எனது மகிழ்ச்சி அனைத்தும் போய்விட்டது. காரணம் வெளியே எந்த இடத்துக்கும் என்னால் போக முடியவில்லை. உதவிகேட்டு நிறையபேர் வருகிறார்கள். என் கையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை. இதை அவர்களிடம் சொன்னால் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். கொஞ்சமாவது பணம் கொடு என்கிறார்கள். அதனால் தான் எனது வீட்டில் என்னால் இருக்க முடியாமல் தலைமறைவாக உள்ளேன்.

நான் எங்குச் சென்றாலும், என்னத் தேடி வருகிறார்கள். இதனால் குழந்தையை பார்க்க முடியாமல், தலைமறைவாக உள்ளேன். எனக்கும் உதவி செய்யும் எண்ணம் உள்ளது. ஆனால், பணம் இன்னும் வந்துசேரவில்லை என்ற நிலையை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு பெரிய பரிசுத்தொகை கிடைக்காமல் போயிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்

* புதிய டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்: விலை & விவரம்

சென்னை: டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்கூட்டரான ஜூபிடர் கிளாசிக் வாகனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் யூனிட்களை இந்த ஸ்கூட்டர் நெருங்கும் நிலையில், அந்த மைல்கல்லை முன்னிட்டு ஜூபிடர் கிளாசிக் வாகனத்தை அந்நிறுவனம் களம் இறக்கியுள்ளது.

கடந்த 1978 முதல் டிவிஎஸ் நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. டிவிஎஸ் 50 வாகனம் தான் அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. தொடர்ந்து ஸ்கூட்டி, விக்டர், ஸ்டார் சிட்டி, அபாச்சி, வீகோ என பல மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்தது. இன்று இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில், புதிய ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த வாகனப் பிரிவில் டாப் வேரியண்ட் மாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. 110 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், டிஸ்க் பிரேக், டைமண்ட் கட் அலாய் வீல், ஆள்-இன்-ஒன்-லாக், கில் ஸ்விட்ச், யூஎஸ்பி சார்ஜர், எகனோமீட்டர் போன்றவை இடம்பெற்றுள்ளன. முந்தைய மாடல்களை காட்டிலும் கூடுதலாக இரண்டு புதிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

இந்த வாகனத்தின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.85,866 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு ஜூபிடரின் பிற மாடல் வாகனங்களில் 1000 முதல் 3000 ரூபாய் வரையில் விலை உயர்ந்துள்ளது. ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டர் ப்ரீமியம் ரக வாகனம் என டிவிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

* மிஸ்பா உல் ஹக் ஸ்கூப் ஷாட் அடிக்க முயன்று பின்புறம் தூக்கி அடித்தார். சிக்ஸர் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கையில் கேட்ச்சாகவும், வெற்றியாகவும் மாறியது.

ஜோகிந்தர் சர்மா பார்த்து ஓடிவந்த தோனி அவரைக் கட்டி அணைத்து, தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்திய அணி தனது முதலாவது டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் அபாரமாக வென்றது.

அழகிய அந்த தருணத்தைக் கடந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் நினைவில் இருக்கும். உலகக் கோப்பை வென்ற அந்த தருணத்தை நினைவுகூர்ந்து பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

* கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனை.

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு.

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை.

* ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கூறினார்.

அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% முடிந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பேசியது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம்.

* கால்நடை மருத்துவப் படிப்பு.. கால அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்.3 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AH பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும்.

செப்.26 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* B.Ed., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்..

தமிழகத்தில் B.Ed., படிப்பில் சேர இன்று முதல் அக்டோபர் 3ம் தேதி வரை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

B.Ed., சேர விரும்பும் SC/ST 40%, MBC 43%, BC 45%, General 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.

அக்.6ல் விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், அக்.12ல் கலந்தாய்வு நடைபெறும்.

* போரை நிறுத்தும் குழுவில் பிரதமர் மோடி பெயர்

உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்தும் குழுவில் பிரதமர் மோடி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய தொடுத்த போர் 7 மாதங்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐநா பொதுச் செயலாளர் கட்டரெஸ் அடங்கிய சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிக்க வேண்டும் என மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ லூயிஸ் பரிந்துரை செய்துள்ளார்.

மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரெஸ் முன்மொழிந்த திட்டத்தை வழிமொழிந்துள்ளதாக கூறியுள்ளார்.

* மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மின்வாரியம் அறிவிப்பு

31  சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு
ஜூலை மாதத்திலிருந்து இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்

* காய்ச்சலுக்கு அடுத்து பன்றி காய்ச்சல்:

புதுச்சேரியில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி.

2 பேர் ஜிப்மரிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தகவல்.

சென்னை வண்டலூர் பூங்காவில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

* காலை எழுந்ததும் மொபைல் பார்ப்பவரா நீங்கள்?

காலை எழுந்தவுடன் மொபைல் பார்ப்பவரா நீங்கள்? அப்ப இது உங்களுக்குதான். காலை எழுந்ததும் மொபைல் பார்க்கும் பழக்கம் நமது மன அழுத்தத்தை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவில் வரும் மெசேஜ்கள், தவறவிட்ட செய்திகள் ஆகிவற்றை ஒட்டுமொத்தமாக காலையில் படிக்கும்போது அது தேவையற்ற மனப்பதற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் அன்றைய நாள் முழுவதும் ஒருவித அழுத்தத்திலேயே இருக்க நேரிடுகிறது.

* சென்னையில் வீட்டு வாடகை சுமார் 15% உயர்வு!

கொரோனாவுக்கு பிந்தைய நிலையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்று சென்னையிலும் வீட்டு வாடகை 10 முதல் 15% வரை உயர்ந்துள்ளதாக மனை-வணிகத்துறை ஆய்வு நிறுவனமான 'அனரோக்' தெரிவித்துள்ளது. சென்னையில் குறிப்பாக அண்ணாநகர், திநகர், கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு பங்களாக்களின் வாடகை சுமார் 18% உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

* அறிமுகமாகும் யுபிஐ லைட்; இணையமில்லா பரிவர்த்தனை

இணையம் மூலம் யுபிஐ வழியாக பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி தற்போது இணையம் இல்லாத நேரத்தில் பரிவர்த்தனை செய்யும் வசதி யுபிஐ லைட் என்ற பெயரில் அறிமுகமாகிறது. யுபிஐ பரிவர்த்தனை போலவே அதில் இருக்கும் ஒரு வாலட்டில் ரூ.200 வரை மாற்றிக் கொண்டு அதை இணையம் மற்றும் பின் இல்லாமலேயே பயன்படுத்த முடியும். எனினும் இந்த வாலட்டில் பணம் சேர்க்க இணையம் தேவை.

* என்ன ஓர் அற்புதமான விளையாட்டு தருணம்: நெகிழ்ந்த சுந்தர் பிச்சை

பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் நேற்று (செப்டம்பர் 23) தனது கடைசி போட்டியில் விளையாடி முடித்ததும் உணர்ச்சி வசப்பட்டு அழுதார். அதைப்பார்த்து அவருடன் விளையாடிய ரபேல் நாடலும் அழுதார். இந்த தருணத்தை சுட்டிக்காட்டிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ’என்ன ஓர் அற்புதமான விளையாட்டு தருணம். இப்படி பல அழகான தருணங்களைத் தந்த உங்களுக்கு நன்றி பெடரர்’ என நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

* ரோஜர் பெடரருக்காக அழுத ரபேல் நாடல்: வைரலாகும் காணொளி

ஸ்விட்சர்லாந்து நாட்டின் பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், நேற்று (செப்டம்பர் 23) தனது கடைசி போட்டியில் ரபேல் நாடலுடன் இணைந்து விளையாடினார். விளையாடி முடித்ததும் ரோஜர் பெடரர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்த, அவர் அருகில் இருந்த ரபேலும் அழுத காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னை எதிர்த்து ஆடிய ரபேலையை அழ வைத்துவிட்டார் பெடரர் என ரசிகர்கள் நெகிழ்கிறார்கள்.

* மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் பெற்றோர் மீதும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

"பேருந்து படிக்கட்டுகளில் தொங்கக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதையும் மீறி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.

* தூத்துக்குடி துறைமுகத்தில் 10 டன் போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகத்திற்கு மலேசியாவில் இருந்து வரும் கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று (செப்டம்பர் 24) அதிகாலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த மலேசிய கப்பலை சோதனை செய்த புலனாய்வுப் பிரிவினர், 10 டன் அளவிலான பாப்பி சீட் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.70 கோடி.

* இந்தியாவில் ரூ.5000 கோடி முதலீடு செய்யும் நெஸ்ட்லே

சர்வதேச உணவு, குளிர்பான நிறுவனமான நெஸ்ட்லே, 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ. 5,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 9 ஆலைகளை நடத்தி வரும் நெஸ்ட்லே நிறுவனம், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் புதிய ஆலைகளை நிறுவ இடம் தேடி வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கும் இந்நிறுவனம் இந்தியாவில் 1960ல் உற்பத்தியை தொடங்கியது.

* ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் சொத்து மதிப்பின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 2021ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ. 64.97 கோடி மதிப்புள்ள சொத்துகளை வைத்துள்ளார். இதில் ரூ.3.45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.6,434 மதிப்புள்ள கார் ஆகியவைகளும் அடங்கும்.

* புக்கர் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்!

புக்கர் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார். அவருக்கு வயது 70. 'அற்புதமான பணியை எங்களுக்கு அவர் விட்டுச் சென்றதற்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என அவரது புத்தக நிறுவனத்தின் வெளியீட்டாளர் எஸ்டட்புக்ஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, நவம்பர் முதல்  உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குக.

அகவிலைப்படி வழங்கியது குறித்து நவ.25ல் அறிக்கை தாக்கல் செய்க-தமிழ்நாடுஅரசு,போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* கனியாமூர் பள்ளியை அரசு எடுத்து நடத்த கோரி வழக்கு:

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் விரைவில் விசாரணை.

குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு - மனு.

* சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்ப் பரப்புரைக் கழகம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ் வெறும் மொழியல்ல நம் உயிர்; தமிழ் மொழி வெறும் மொழி அல்ல, அது நம் உயிர்.

தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்ததில் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

தமிழ் பரப்புரை கழகத்தின் துவக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நாசாவின் ஆர்ட்மிஸ் ராக்கெட் நிலவுக்கு ஏவுவது, புயல் காரணமாக ஒத்திவைப்பு.

தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்கனவே 2 முறை விண்ணுக்கு செலுத்துவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புயல் காரணமாக 3வது முறையாக தடைபட்டுள்ளது.

* மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1573708737029677057?t=nMMSDnpIbbq27h_Va7d4LA&s=19

ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரையிலும் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றியும், பெட்ரோல் குண்டு எறிவது, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவதுப் பற்றியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம்.

* நன்னடத்தை அடிப்படையில் மேலும் 75 கைதிகள் விடுதலை

தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன.

அந்த வகையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நீண்ட காலம் சிறைகளில் இருக்கும் கைதிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி கைதிகள் தேர்வு செய்யப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி ஏற்கனவே சுதந்திர தினத்தையொட்டி 70 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மதுரை மத்திய சிறையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் இருந்து 13 பேர், கோவை மற்றும் திருச்சி சிறைகளில் இருந்து தலா 12 பேர் விடுதலையாகி உள்ளனர்.

* சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

வீடியோ: https://youtu.be/FoOudFx5V50

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும்  80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகனங்கள் பெய்ஜிங்கை நோக்கிச் செல்கின்றன என கூறப்படுகிறது.

மேலும் வணிகப் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஜி ஜின்பிங்கின் கைது பற்றிய கதைகள் பெய்ஜிங்கிலும் உலகளாவிய இணையத்திலும் பரவுகின்றன.

* மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மூத்த பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் நல்லுறவு நீடித்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கான மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்ட அவர், மனிதவள மேம்பாடு, உள்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் முன்னிலை வகிப்பதாக கூறினார்.

மக்கள் தொடர்பான பிரச்னை என்றால் தானே முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவேன் என்றும் தெரிவித்தார். மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர் முதலமைச்சர் என்றும் புகழாரம் சூட்டினார். அவரையும், அமைச்சர்களையும் நல்ல நண்பர்களாக கருதுவதாகவும், அவர்களுடன் எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடமில்லை, அதுவே இறுதிக் கருத்தாக இருந்தால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது கடினம் என்றும் தெரிவித்தார். மசோதா மீதான சட்ட நிபுணர்களின் இறுதிக் கருத்துக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சனாதான தர்மத்தை ஆதரித்துப் பேசுவதன் மூலம் குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக குற்றம்சாட்டப்படுவதை அவர் மறுத்தார்.

அரசியலமைப்புக்கு உட்பட்டே தனது கருத்துகளை கூறி வருவதாகவும், தனது அனுபவத்தில் பல்வேறு அமைப்புகளை கண்டிருந்தாலும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆபத்தானது என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

* இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் பணிகளை தொடங்கினார் - புதிய படம்!

A new picture of King Charles III has been released that shows him at work with his red box in the Eighteenth Century Room at Buckingham Palace.

The photograph seen behind him of the Queen and Duke of Edinburgh was given to King George VI for Christmas in 1951 by the couple

பிரிட்டன் ஆட்சியில் பட்ஜெட் பை - ராணி / அரசர் பயன் படுத்தும் சிவப்பு பெட்டி மரபு - சம்பிரதயாமாக கடைபிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages