அக்னிப்புரட்சி இன்றைய (26.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (26.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (26.09.2022) முக்கிய செய்திகள்.

* வங்காளதேசத்தில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி! பலர் மாயம்!!

கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 24 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஞாயிறு மதியம் கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 24 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய சென்று கொண்டிருந்தனர். அப்போது அவுலியார் காட் பகுதியில் இந்த விபத்து நடந்தது.

அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் 30க்கும் அதிகமானோர் மாயமாகி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அதிகம் என்று போலீசார் கூறினர்.

* புதுச்சேரி மற்றும் காரைக்காலில்
ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.

வைரஸ் காய்ச்சால் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று மாலை டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாட்டில் நிலவி வரும் பல்வேறு சூழல் குறித்து அமித்ஷாவிடம் ஆளுநர் விவாதிக்க உள்ளதாக தகவல்.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஏற்கனவே பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* பச்சிளம் குழந்தைகளை மிரட்டும் நிமோனியா காய்ச்சல் - தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

நிமோனியா தடுப்பூசியின் கையிருப்பை உறுதி செய்யுமாறு, மத்திய மாநில அரசுகளுக்கு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,

பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும், இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள் எனவும், இறக்கும் 4 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவை சேர்ந்தது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், தமிழகத்திலும் நிமோனியாவுக்கான பி.சி.வி. தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. பி.சி.வி. திட்டத்தில் குழந்தை பிறந்த மூன்று, ஆறு மற்றும் ஒன்பதாவது மாதங்கள் என 3 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில், குழந்தைகளுக்கு மீண்டும் நிம்மோனியா காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஹெச்.ஒன். என்.ஒன், டெங்கு, மலேரியா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், நிம்மோனியா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கி, உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இராஜஸ்தானில் கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு பைலட்டை முதல்வராக்க கூடாது: சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம்

இராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு பதிலாக, சச்சின் பைலட்டை முதல்வராக தேர்ந்தெடுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை தவிர வேறு யாருக்காவது முதல்வர் பதவியை வழங்கும்படி, கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில், சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடவில்லை.

இதனால், பல்வேறு மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். சோனியா  காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் ஆதரவு, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கிடைத்துள்ளது. இதனால், இவர்களின் ஆதரவுடன் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார். தவிர, சசி தரூர் உள்ளிட்டோரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். கெலாட் இத்தேர்தலில் போட்டியிடுவதால், ராஜஸ்தானின் முதல்வர் பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

ஒரு காலத்தில் ராகுலுக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் அவர் ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் பாஜவில் சேரப் போவதாக மிரட்டல் விடுத்ததால், சோனியா குடும்பத்தின் நம்பிக்கையை இழந்தார். மேலும், இவரை முதல்வராக்கினால் ராஜஸ்தானில் தனது அரசியல் செல்வாக்கு சரிந்து விடும் என்று கெலாட் நினைக்கிறார். எனவே, தனது ஆதரவாளர் ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் சச்சின் பைலட் மட்டுமின்றி, இராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் சிபி ஜோஷியின் பெயரும் அடிபடுகிறது. இந்த சூழலில், ெடல்லியில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட், முதலில் சிபி ஜோஷியை சந்தித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதே நேரம், அமைச்சர் சாந்தி தரிவாலின் வீட்டில் 16 அமைச்சர்கள் உட்பட அசோக் கெலாட் விசுவாசிகள், நேற்று மாலை அடுத்த முதல்வர் யார் என்று ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட்டின் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்றும், இதில் புதிய சட்டப்பேரவை கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதே நேரம், சச்சினை முதல்வராக்க கூடாது என்றும், வேறு யாராவது ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் கெலாட் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனால், பைலட்டை முதல்வராக தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை திட்டமிட்டப்படி கெலாட் வீட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களாக மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாக்கன் பங்கேற்றனர். இதில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை சோனியாவுக்கு வழங்கி, ஒற்றை வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய முதல்வர் யார் என்பதை சோனியா முடிவு செய்ய உள்ளார்....

* தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

சென்னை, அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலக வாயிலில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

அப்புறப்படுத்த முற்பட்டபோது காவல்துறையினருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு.

* அதிமுக அலுவலக ஆவணங்கள் ஓபிஎஸ் தரப்பிடமிருந்து மீட்பு:

அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தின்போது எடுத்துச் செல்லப்பட்ட 113 ஆவணங்கள் மீட்பு.

காணாமல்போன 113 ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது- சிபிசிஐடி தகவல்.

* அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்க தடை கோரிய மனு தள்ளுபடி.

பொதுநல மனுவை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்.

* உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

2 ஆண்டுகளுக்கு பிறகு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்பு

சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 5ம் தேதி நள்ளிரவு குலசை கடற்கரையில் நடைபெறுகிறது

* வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மும்முரம்.

அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த முறை சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என ஓரளவிற்கு நம்பிக்கொண்டுள்ளேன், எதிர்பார்க்கிறேன்.

மழை நீர் தேங்காது என்ற நினைப்போடு மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்-ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்து இந்திய ரூபாய்... டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் குறைந்து 81.50 ஆக சரிவு..!!

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. மேலும் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. கடந்த புதனன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது. இதேபோல் மறுநாளும், அதற்கு அடுத்த நாளும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாகவும், 39 காசுகள் குறைந்து 81.18 ஆகவும் சரிந்து வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதாவது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகளாக குறைந்து 81.50 ஆக வீழ்ச்சியடைந்தது. கடந்த வெள்ளியன்று அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் 3-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாகும். இதனிடையே பங்குசந்தையான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2% சரிவினைக் கண்டிருந்த நிலையில் இன்றும் கடும் சரிவில் காணப்பட்டுள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 57,488 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து 17,113 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. மேலும் இந்த சரிவானது மேலும் தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது....

* அண்ணா சிலைக்கு செருப்பு மாலை... ஆ.ராசா படத்திற்கு கரும்புள்ளி...

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து முகத்தை சிவப்பு துணியால் மூடி அவமதிப்பு செய்யப்பட்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் செருப்பு மாலையுடன் ஆ.ராசா உருவப்படத்தில் கரும்புள்ளி வைத்து அண்ணா சிலையில் மர்ம நபர்கள் மாட்டிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் வந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

* பொள்ளாச்சி: இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் நிரப்பப்பட்ட கவர்களை வீசி தாக்கிய சம்பவம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த முகமது ரபீக்,சாதிக் பாஷா, ரமீஷ்ராஜா ஆகிய 3 பேர் கைது

* குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்களுக்கு அனுமதி - திருச்செந்தூரை சேர்ந்த தசரா குழுவின் செயலர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சினிமா, டிவி நடிகைகள் ஆபாச நடனமாக ஆடுவதாக கூறி திருவிழாவில் அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் உத்தரவு.

* ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

பாஜக விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளில் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும்-திருமாவளவன்.

* வெடிகுண்டு கலாச்சாரம் அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காகும்.

அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்ட காவல்துறை தற்போது செயலற்று இருக்கிறது.

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

* ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இன்று இரவு டோக்கியோ செல்கிறேன்.

பிரதமர்  ஃபுமியோ கிஷிடாவுக்கும், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மனைவிக்கும் அனைத்து இந்தியர்களின் சார்பாக இரங்கல் தெரிவிப்பேன்- பிரதமர் மோடி.

* பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம் பதிலடி.

முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. முன்வைத்த விமர்சனத்தால் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் முற்றுகிறது.

* போலீசார் ஜிஎஸ்டி செலுத்துவதற்கு விதித்த தடை நீட்டிப்பு:

போலீசார் ஜிஎஸ்டி செலுத்தக் கோரிய, ஜிஎஸ்டி ஆணையர் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

வங்கி பாதுகாப்பு பணி செய்யும் மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே பணியை மேற்கொள்ளும் காவல்துறையிடம் சேவை வரி வசூலிப்பது நியாயமற்றது.

சேவை வரி வசூலிப்பதாக இருந்தால் போலீசாரின் சேவையை பயன்படுத்தியவர்களிடம்தான் வசூலிக்க வேண்டும் - நெல்லை காவல் கண்காணிப்பாளர் மனு.

நெல்லையில் 2013 - 2017 வரை வங்கிகள் பணம் கொண்டு சென்றபோது பாதுகாப்பு தந்ததற்கு ஜிஎஸ்டி கட்ட உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு.

* சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

வரும் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவசர சட்டம் சீர் செய்யப்படும்.

தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனை பெற்று அவசர சட்டம் தயாரிப்பு - தமிழக அரசு.

* கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக எம்.பி. ஆ.ராசா குறித்து பேசிய பாஜகவினரை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

🔴 2024 நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல்... - அண்ணாமலை அதிரடி பேச்சு...

வீடியோ: https://youtu.be/evP_5Ts57bY
கோவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சால் தமிழக அரசியலில் பரபரப்பு...

* சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து ஊராட்சிகளுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும்.

மரங்கள் அகற்றியது தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

வரும் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவசர சட்டம் சீர் செய்யப்படும்.

தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனை பெற்று அவசர சட்டம் தயாரிப்பு - தமிழக அரசு.

* சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு அய்யா தெரிவித்துள்ளார்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை 5 இடங்களில் கம்பங்கள் நிறுவப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages