அக்னிப்புரட்சி இன்றைய (30.09.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.09.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.09.2022) முக்கிய செய்திகள்.

* யாங்கூன்: மியான்மரில் இன்று காலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. பர்மாவின் வடமேற்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

* மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் வெளியானது.

* இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளுக்கு 1,900 பெயர்கள் பரிந்துரை

போபால்,
பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த 17-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தன. அந்த சிறுத்தைகளை மத்தியபிரதேச மாநிலம் குணோவில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார்.

நமது நாட்டில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, ஆப்பிரிக்காவில் இருந்து ஐந்து ஆண் சிறுத்தை குட்டிகளும் மூன்று பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. (சிறுத்தைகளின் வீடியோ: https://youtu.be/gr3z4nUdtRc ) இந்த சிறுத்தைகளுக்கு புதிய பெயர்களை பரிந்துரை செய்யுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசின் இணையதளத்தில் ஏராளமான மக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர். அதன்படி அசோகா, சந்திரகுப்தா, விக்கிரமாதித்யா, பிரித்விராஜ், லஷ்மி பாய், மில்கா சிங், சிம்பா, தேஜஸ், ருத்ரா, வித்யூத், இந்திராணி, சக்தி, கங்கா, காவேரி உள்ளிட்ட பழங்கால அரசர்கள், அரசிகள், விளையாட்டு வீரர்கள், நதிகள் என சுமார் 1,900 பெயர் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாகிஸ்தான் தலைநகரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்சாரக் கட்டணம் குறைப்பு, வரி விலக்கு, கள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனை தடுத்தல், விவசாய பொருள்களின் கொள்முதல் விலை உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள டி-செளக்கை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்காக பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும், டி-செளக்கிற்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருடனான பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆதரவாக கூட்டம் திரளும் அபாயம் எழுந்துள்ளதால், எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!

திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மூன்றாவது நாளான நேற்று சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில், திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை மறுநாள் இரவு நடைபெறுகிறது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

கருட சேவையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும்வகையில் நாளை முதல் அக்டோபர் 5 வரை மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

* 10 ஆண்டுகளில் 1733 சூழலியல் ஆர்வலர்கள் கொலை: கவலையளிக்கும் ஆய்வு முடிவுகள்

உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச உரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்ற பாதிப்பு தற்போதைய காலத்தில் உலகின் முன்னணி பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருவதாக சமீபத்திய அறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. குளோபல் விட்னஸ் எனப்படும் அமைப்பு பத்தாண்டுகளில் உலகளாவிய சுற்றுச்சூழல் போராட்டங்கள் எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதில் உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 1733 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக அமேசான் காடுகள் அமைந்துள்ள பிரேசிலில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மீது அதிகப்படியான தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் மட்டும் 85 சதவிகிதமான கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

குறிப்பாக பிரேசில், கொலம்பியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மட்டும் தலா 300 கொலைகள் நடந்தேறியுள்ளன. மெக்சிகோ மற்றும் ஹாண்டுராஸில் தலா 100 பேரும், குவாதமாலாவில் 80 பேரும், இந்தியாவில் 79 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய கொலைக் குற்றங்கள் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள ஆய்வறிக்கையானது காலநிலை பாதிப்புகளைக் களைவதற்கான ஜனநாயக குரல்கள் தொடர்ந்து ஒடுக்குப்பட்டு வருவதை கவலையுடன் தெரிவித்துள்ளது.

* குரூப் - 2, குரூப் - 4 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்தமே 21 ஆம் தேதி நடத்தியது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும், காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்கு கடந்தஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள்டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 67 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

நாட்டில் 67 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய 67 ஆபாச இணையதளங்கள் முடக்கப்படுகின்றன.

பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ஆபாசத்தை பரப்பும் வகையிலும் செயல்பட்ட63 இணையதளங்களை முடக்க உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி 67 ஆபாச இணையதளங்களை முடக்க இணைய நிறுவனங்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

* கோத்தபய ராஜபக்சேவுடன் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடுகளில் இன்றான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து முதலில் மகிந்த ராஜபக்சே விலகினார். அடுத்த சில வாரங்களில் அதிபர் பொறுப்பில் இருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டும் வெளியேறினார்.

இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில் இயல்பு நிலை சற்று திரும்ப தொடங்கியதும் வெளிநாட்டில் இருந்து கோத்தபய ராஜபக்சே திரும்பினார்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இந்த நிலையில், இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு மகிந்த ராஜபக்சே வீட்டிற்கு சென்ற சுப்பிரமணியன் சுவாமி, ராஜபக்சே வீட்டில் நடைபெற்ற நவராத்ரி பூஜையிலும் கலந்து கொண்டார். கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆவார்.

* விண்வெளியில் 6 மாத பணி நிறைவு! 195 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய ரஷிய வீரர்கள் குழு!

மாஸ்கோ,
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாத பணியை நிறைவு செய்துவிட்டு 3 ரஷிய விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்குத் திரும்பினர்.

ஒலெக் ஆர்டெமிவ், டெனிஸ் மாட்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகிய 3 ரஷிய விண்வெளி வீரர்கள் கசகஸ்தானில் அமைந்துள்ள ஜெஸ்காஸ்கன் நகரத்திலிருந்து தென்கிழக்கே 148 கிலோமீட்டர்கள் (91 மைல்) தொலைவில் பத்திரமாக தரையிறங்கினர்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பின், மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அங்கு பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட பின், அவர்கள் 195 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பினர்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பின், ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் மட்டுமே ஒத்துழைப்பு கடைசியாக எஞ்சியுள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த குழு ஒன்று ரஷியாவின் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ மற்றும் ரஷியாவின் செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோர் கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரோஸ்கோஸ்மோசால் இயக்கப்படும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
 

* ரஷியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு! வெளிநாட்டு சதி என ரஷியா குற்றச்சாட்டு

மாஸ்கோ,

ரஷியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் 'நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2' எரிவாயு குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

ரஷியா மீதான் பொருளாதார தடை நடவடிக்கைகளை தொடர்ந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷியா குறைத்தது. எனினும், அந்த குழாய்களில் எரிவாயு தேங்கி இருக்கிறது.

இந்நிலையில், ரஷியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் வகையில், கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்களில் 4வது முறையாக சில பகுதிகளில் கசிவு உண்டானது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட திடீர் கசிவுக்கு வெளிநாட்டு அரசுகளின் சதி இருப்பதாக ரஷியா சந்தேகிக்கிறது.

ரஷிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும், இது அவசர விசாரணை தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் விசாரணைக்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு தேவை.

ஒரு அரசின் தலையீடு இல்லாமல் இதுபோன்ற பயங்கரவாத செயல் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் பல நாடுகளும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றன. கசிவுகளுக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறதா என்று பதிலளிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதிலளிக்காமல் இருந்தார்" என்றார்.

ரஷியா, அமெரிக்கா ஆகிய இரு வல்லரசுகளும் இந்த சதிச் செயல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளன. கசிவுகள் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை கூடுகிறது.

இப்போதைய சூழலில், ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை இணைக்கும் 'நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2' குழாய்கள் மூடப்பட்டுள்ளன.
 

* ராணி 2ஆம் எலிசபெத் வாழ்ந்த வின்ட்சர் கோட்டை மீண்டும் திறப்பு: நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்!

லண்டன்,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று காலமானார். ராணியின் மரணத்தை தொடர்ந்து, வின்ட்சர் அரண்மனை உட்பட அரச குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் குடியிருப்புகள் மூடப்பட்டுள்ளன.

ராணியின் கணவர் இளவரசர் பிலிப், அவரது தங்கை இளவரசி மார்கரெட்டின் அஸ்தியும் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள 'மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்துக்கு' ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டி மாற்றப்பட்டது.

இந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அடக்கம் செய்யப்பட்டுள்ள பாரம்பரியமிக்க அரச குடும்பத்தின் இல்லம் மற்றும் அதன் வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.

இதனையடுத்து, லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் அரண்மனையை பார்வையிட, கோட்டைக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர். சுற்றுலாப் பயணிகளின் கையில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன், கோட்டையின் ஆடம்பரமான சுவர்களுக்கு வெளியே உள்ள குறுகிய தெருக்களில் நீண்ட வரிசையில் நின்று உள்ளே சென்று பார்வையிட்டனர்.

* கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குங்கள் - வீதிகளில் இறங்கி போராடிய மக்கள்

வெனிசுலா,
தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா மற்றும் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

வெனிசுலாவில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். பொலிவியாவில் கருக்கலைப்பு தடை சட்டத்தால் பெண்கள் உயிர் ஆபத்தில் தள்ளப்படுவதாக பல காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது. கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் அமல்படுத்தப்படும் நாடுகளில் எல் சல்வேடரும் ஒன்று.

இந்த நிலையில், இந்த 3 அமெரிக்க நாடுகளிலும் பெண்களின் உயிரைக் கருத்தில் கொண்டு கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

* பாகிஸ்தான்: ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் விடுவிப்பு

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் நெஸ்கோல் லிமிடெட் மற்றும் நீல்சன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்கள் பார்க் லேனில் உள்ள அவென்பீல்ட் ஹவுசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த குடியிருப்புகள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை பணியகம் குற்றம் சுமத்தியது. மேலும், கடந்த 2006-ம் ஆண்டு மரியம் நவாஸ் போலி பத்திரங்களை தயாரித்தாகவும் அவரது கணவர் கேப்டன் சப்தார் அதில் கையெழுத்திட்டதாகவும் குற்றம்சுமத்தியது.

இது தொடர்பாக வழக்கு தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு மரியம் நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஆகஸ்டில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதே ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அவென்பீல்ட் ஹவுஸ் ஊழல் வழக்கில் இருந்து பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவரை விடுதலை செய்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மரியம் நவாஸ் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்.

* வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கனுக்கான வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தியது ரிசர்வ் வங்கி.

ரெப்போ வட்டி விகிதம் 5.4%ல் இருந்து 5.9%ஆக உயர்வு.

தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு. கடந்த 5 மாதங்களில் 4வது முறையாக உயர்வு.

* இலங்கை கடற்படையினர் தாக்குதலை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கு.

தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னையை களைய மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?-உச்சநீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு,  வழக்கை அக் 14ம் தேதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

* முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பெகாட்ரான் நிறுவனம் பல நாடுகளில் தொழிற்சாலைகளை தொடங்கி ஏராளமானவர்களுக்கு வேலை வழங்கி வருகிறது.

உலக புகழ்பெற்ற தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் வந்து செல்போன் உற்பத்தியை தொடங்குவது பெருமை அளிக்கிறது.

பெகாட்ரான் நிறுவனம் ரூ.1200 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை தொடங்கி உள்ளது என்றார்.

* ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனு.

தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

* அதிமுகவில் உட்கச்சி தேர்தல் நடத்த தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு.

உட்கட்சி தேர்தல் நடத்த இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பதிலளித்த ஈபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை

அதிமுக வழக்கில் இறுதி தீர்ப்பு வந்தபிறகே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உறுதி அளித்தோம் - சி.வி.சண்முகம்

* மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை.உணர்ச்சித் தூண்டல் அரசியலே போதும் என்ற மிதப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் மக்கள் தவிப்பில் உள்ளார்கள் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் மாநில செயலாளர்.

* நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும்- தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நவம்பர் 6ம் தேதி அனுமதியளிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு.

அனுமதி வழங்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

* கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தனிப்படை போலீஸ் விசாரித்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

* “பேச்சு வழக்கில் சொன்னது”
பேருந்தில் பெண்கள் ஓசியில் செல்கிறார்கள் என்று விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், நான் பேச்சு வழக்கில் கூறியதை தவறாக புரிந்து கொண்டனர் என கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

* Luhansk, Donetsk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய உக்ரைனின் 4 முக்கிய பகுதிகளை
'ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள்' என அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

இதன் மூலம் உக்ரைன் நாட்டின் 15% பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவிப்பு.

'ஓசி' டிக்கெட் பற்றிய கேள்விக்கு பத்திரிக்கையாளர் மீது கடுப்பான அமைச்சர் பொன்முடி...

https://twitter.com/IndiaNewsDigest/status/1575846131199668228?s=19

* நவராத்திரியை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலுவினை நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள், பொதுமக்கள்ஊ பார்வைக்காக அனுமதி! - ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியீடு

* தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா! சூரரைப் போற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இது சூர்யாவின் முதல் தேசிய விருது. மனைவி ஜோதிகாவுடன் தமிழ் பாரம்பரியத்தில் வேட்டி சேலை அணிந்து வந்தார் சூர்யா. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு தேசிய விருதினை வழங்கி கௌரவித்தார்.

* விழிப்புணர்வு பதிவு...
கூடுதல் மொபைல் டேட்டா பலன்களைப் பெற ஏதேனும் இணைப்பைக் கிளிக் செய்யும்படி மோசடி செய்திகள் வருவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். OTPகள் மற்றும் பிற நிதித் தகவல்கள் போன்ற ரகசியத் தகவல்களைத் திருட, மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்தைப் பிரதிபலிக்கலாம்.

PIN, கடவுச்சொல், OTP, உள்நுழைவு ஐடி, டெபிட்/கிரெடிட் கார்டு எண், CVV, காலாவதி தேதி போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம். விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

* உணவகங்களில் சோதனை - அதிகாரிக்கு தடை.

உணவகங்களில் சோதனை நடத்தும் போது ஊடகங்களை அழைத்து சென்று வீடியோ பதிவு செய்து வெளியிட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தடை.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ்குமாருக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

👏 படிப்பறிப்பு இல்லை... பாட்டறிவு மட்டும் தான் - தேசிய விருது பெற்ற இயற்கையின் பாடகி - அரங்கமே எழுந்து நின்ற நெகிழ்ச்சி தருணம்

பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்ற நஞ்சம்மா - எழுந்து நின்று கைதட்டிய அரங்கம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages