84-ஐ தேடி வந்து சந்தித்த 90! நண்பர்- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு - Agnipuratchi

84-ஐ தேடி வந்து சந்தித்த 90! நண்பர்- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு

Share This

84-ஐ  தேடி வந்து சந்தித்த 90! நண்பர்- பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு

இராணிப்பேட்டை மாவட்டம் வாலஜா நகரில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக  நான் சென்றிருந்தேன். அன்று மதியம் வேலூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். மதிய உணவுக்குப் பிறகு முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான என்.டி.சண்முகத்தின் சகோதரர் மருத்துவர் குமரகுரு அவர்களை  அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அப்போது எனக்கு மதிய உணவு எடுத்து வந்த என்.டி.சண்முகத்திடம் எனது விருப்பத்தை தெரிவித்தேன்.  அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

ஆம்...

நான் யாரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அதே மருத்துவர் குமரகுரு அவர்கள்  என்னை சந்திப்பதற்காக ஊன்றுகோல் உதவியுடன் வந்திருக்கிறார்; அடுத்த அறையில் காத்திருக்கிறார் என்பது  தான்  அவர் கூறிய பதில் ஆகும்.

மருத்துவர் குமரகுரு மிகவும் மதிப்பிற்குரியவர். புகழ்பெற்ற மருத்துவர். 90 வயதானவர். கிராமப்பகுதிகளில் இருந்து வட ஆற்காடு மாவட்டத்தின் நகரப்பகுதிகளில் வந்து பயிலும் மாணவர்களின் நலனுக்காக விடுதிகளை கட்டித் தந்த  அருணாச்சலம் பிள்ளை அவர்களின் மருமகன்.

அத்தகைய சிறப்பு மிக்கவரை, வயது முதிர்ந்தவரை நாம் நேரில் சென்று சந்திப்பது தானே சரியானதாக இருக்கும்; அவரை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் என்று என்.டி. சண்முகத்தை  கடிந்து கொண்டேன்.  பின்னர் மருத்துவர் குமரகுரு அவர்களை சந்தித்து பேசி வழியனுப்பி வைத்தேன்.

1995-ஆம் ஆண்டில் தடா சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நான், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நான், அவரது மருத்துவமனையில் தான் சில நாட்கள் தங்கியிருந்து மருத்துவம்  பெற்று வீடு திரும்பினேன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages