உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிமுக வழக்கின் தீர்ப்பு முழு விபரம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்து பிறப்பித்த ஐகோர்ட் பெஞ்ச் நீதிபதிகளின் தீர்ப்பு முழு விபரம்:
* கட்சி பொது செயலாளர் அடிப்படை உறுப்பினர் மூலம் தேர்வு என விதி உருவாக்கப்பட்டது. அதில் மாற்றம் செய்ய தடை விதித்தும் இன்னொரு விதி உருவாக்கப்பட்டது.
* 25 ஆண்டுகளுக்கும் முன் எம்.ஜி.ஆர். மறைவில் இதே நிலை ஏற்பட்டபோது பொது செயலாளர் ஜெயலலிதாவை அணுக முடியவில்லை என கூறி துணை பொதுச் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு கூட்டிய பொதுக்குழு கூட்டம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது, அதில் பொதுகுழுவுக்கு தடை விதிக்கப்பட்டது.
* திருநாவுக்கரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் ஏற்றுள்ளதால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு உகந்தது தான் என முடிவுசெய்து விசாரித்தோம்.
* ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு விதிகள் திருத்தம் 2017ல் செய்யப்பட்டது.
* 2021 டிசம்பர் பொதுக்குழுவில் ஒரே வாக்கு முறைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என திருத்தம் செய்யப்பட்டதால், அதனால் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது.
* ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகள் காலியாகிவிட்டதா என பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும்.
* உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது.
*அடுத்த பொதுக்குழு ஜூலை 11 நடக்கும் என ஜூன் 23ல் பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ் தான். முறையான நோட்டீஸாகத்தான் கருத வேண்டும்.
*’பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
* ஒ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால், தனக்கு தெரியாது என கூற முடியாது.
* இருவருக்கும் மோதல் காரணமாக இணைந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவார்கள் எனவும் எதிர்பார்க்கமுடியாது.
* ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பொதுக்குழுவே கூட்டமுடியாத நிலைதான் உள்ளது.
* திருநாவுக்கரசு வழக்கில் துணை பொதுச் செயலாளர் கூட்டிய கூட்டத்தால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வழக்கில் போட்டி பொதுக்குழு கூட்டாததால் அந்த வழக்கின் உத்தரவு தற்போது பொருந்தாது.
* இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இடையே பிரச்சினை நிலவுவதால், ஜூன் 23ல் அவைத்தலைவர் அழைப்பு விடுத்த ஜூலை 11 பொதுக்குழு சட்டவிரோதம் என்று கூற முடியாது.
* அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குதான் உச்ச பட்ச அதிகாரம் உள்ளது.
* இருவரும் இணைந்து கூட்ட இயலாத நிலையில் ஒவ்வொரு முறைமுறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது.
* பொதுக்குழுவுக்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை.
* பதவி காலி என்பதால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுவிட்டு, தலைமை நிலைய செயலாளர் என்ற நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
* அப்படி ஒரு நிலையில் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு செயற்குழுவை கூட்ட வேண்டுமென்று கூற முடியாது.
* எனவே ஜூலை 11 பொதுக்குழு என்ற அறிவிப்பில் தடையில்லை.
* 2460 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து 2539 உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
* ஜூலை 11 கூட்ட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், கூட்டம் போலியானது என்று சொல்ல முடியாது.
* பொதுக்குழு, செயற்குழு இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவால் காட்சிக்கு ஈடு செய்ய முடியாது பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. கட்சி முடக்கும் நிலையிலும் உள்ளது.
* இருவரும் இணைந்து எடுக்கும் முடிவுகளையும் பொதுக்குழுதான் ஒப்புதல் தரமுடியும்.
* ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது.
* இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டுமென்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
* ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு.
* இரு பதவிகள் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜூன் 23 பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை, பதவிகள் காலியாகிவிட்டது போன்ற விகாரத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அவை பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும்.
* ஜூலை 11ல் பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவர் அறிவித்தது முறையானதுதான்.
* அதனடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது....
No comments:
Post a Comment