அக்னிப்புரட்சி இன்றைய (01.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (01.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (01.10.2022) முக்கிய செய்திகள்.

* மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை முடிவு செய்ய வேண்டியது மாநில அரசு தான்.

நீதிமன்றத்திற்கு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு இருக்கும் என தெரியாது- மாநில காங்., கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

ஆர்எஸ்எஸ் வன்முறை இயக்கம். இந்த இயக்கம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வன்முறை நடந்திருக்கிறது.

மகாத்மா காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பலவற்றில் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு இருக்கிறது.

* கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டு வயதான பாட்டி வாக்குவாதம் செய்த விவகாரம்.

அதிமுகவைச் சேர்ந்த துளசி அம்மாள் உட்பட 4 பேர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு.

இச்சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்ட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர் மதுக்கரை போலீசார்.

வைரலான அந்த வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1575365512972095489?t=UKwJcZ3HV-wACiX1x8dKfQ&s=19

* இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

5ஜி தொழில்நுட்பம் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கை

5ஜி மூலம் பல புதிய வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கும்
டிஜிட்டல் இந்தியா என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம்

டெல்லியில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் - பிரதமர் மோடி

* சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதி மறுப்பு.

அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட்டாக மனுத்தாக்கல்.

* மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை :

இலவச டிக்கெட் தொடர்பாக வைரலான மூதாட்டி மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விளக்கம்.

பாட்டியை வெறும் சாட்சியாக மட்டுமே சேர்த்திருப்பதாக எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்

பாட்டியை தூண்டி விட்டதாக கூறி அதிமுகவினர் 3 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு -கோவை போலீஸ்

* அக்டோபர் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் - விசிக தலைவர் திருமாவளவன்.

அக்டோபர் 2ஆம் தேதி அனுமதி வழங்க இயலாதது குறித்து காவல்துறை அதிகாரிகள் விளக்கியதுடன் ஒத்திவைக்கும்படி கேட்டதன் அடிப்படையில் மாற்றம்.

* கேரளா சிபிஐ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:

திமுக-கம்யூனிஸ்ட் நட்பு என்பது கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே இருக்கிறது.

நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் திமுக கட்சி கொடியின் நிறத்தில் கூட பாதி சிவப்பு உள்ளது.

தேசிய கல்வி கொள்கை, காவி கொள்கையாக உள்ளது.

தமிழகம், கேரளா மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.

ஆளுநர்களை ஏவி மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.

இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்ற பட வேண்டும்.

* வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தலா 15 மேற்பார்வைப் பொறியாளர்கள் & செயற்பொறியாளர் சிறப்பு அலுவலர்களாக CHN_Metro_Water நியமனம்.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை இந்த அதிகாரிகளிடம் தெரிவித்து உதவி பெறலாம் என அறிவிப்பு.

* கவனத்திற்கு !!
1- 10 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

சிறுபான்மை பள்ளிப்படிப்பு கல்வித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அக்டோபர் 15 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கடந்த 2008 -09 ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுமான்பை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் 100% நிதியால் செயல்படும் இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு  நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் சிறுபான்மை பள்ளிப்படிப்பு கல்வித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்.30 ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அக்டோபர் 31 ஆம் தேதி வரை உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சரி செய்துக் கொள்ளலாம்.  மேலும் மாவட்ட /மாநில /மத்திய அமைச்சக அளவிலான சரிபார்ப்பு  பணிகள் நவம்பர் 15ம் தேதி வரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://scholarships.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்த உதவிதொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதுபோல் மாணவர்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தகுதியான 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு சேர்க்கை கட்டணம் ரூ.500 வரையிலும், கற்பிப்புக் கட்டணம் ரூ.3,500 (மாதம் 350- 10 மாதத்துக்கு) வரையிலும் வழங்கப்படுகிறது.

இதுக்குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ள minorityaffairs.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளவும்.

* அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை பதவிக்கு காமராஜர், பி.வி.நரசிம்ம ராவுக்கு பிறகு தெற்கிலிருந்து ஒருவர் தேர்வாகவுள்ளார்.

* செப்டம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ₨1,47,686 கோடி

கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வரி வசூல் 26% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இருந்து ₨8,637 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதியமைச்சகம்

* மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்

தென்மேற்கு ரெயில்வே சார்பில், பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

நெல்லை-யஷ்வந்த்பூர்

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தென்மேற்கு ரெயில்வே சார்பில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, யஷ்வந்த்பூர்-நெல்லை மற்றும் தூத்துக்குடி-மைசூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. யஷ்வந்த்பூர்-நெல்லை சிறப்பு ரெயில் (வ.எண்.06565) வருகிற 4-ந் தேதி மற்றும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமைகளில்) யஷ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நெல்லை-யஷ்வந்த்பூர் சிறப்பு ரெயில் (வ.எண்.06566) வருகிற 5-ந் தேதி மற்றும் 12-ந் தேதி (புதன்கிழமைகளில்) நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 11.30 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

* இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி.

மேற்கு வங்கம், மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* கேரள மாநில முன்னாள் அமைச்சர் (சிபிஎம்) கொடிவேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் புற்றுநோய் காரணமாக சிகிச்சையில் இருந்தார்.

* முற்றிலும் இருளில் மூழ்கியது புதுச்சேரி மாநிலம்!

மின்சாரத்துறை தனியார்மயத்தை எதிர்த்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் எதிரொலியாக, புதுச்சேரி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி மாநிலமே முற்றிலும் இருளில் மூழ்கியிருக்கிறது.

பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர்.
மின்விநியோகம் வழங்க நடவடிக்கை - நமச்சிவாயம்.

மின்விநியோகம் இல்லாத பகுதிகளில் மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்விநியோகம் வழங்கவுள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

நிலைமையை சமாளிக்க இரண்டு கம்பெணி துணை ராணுவப்படை வர உள்ளது.

வில்லியனூர், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வயர்களை துண்டித்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரி முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

* திண்டுக்கல்: இயற்கை எழில்கொஞ்சும் கொடைக்கானலில் 7 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி பூ மலைக்கிராமங்களில் பூக்க துவங்கியுள்ளது.

*:கள்ளழகர் கோவிலில் தீ விபத்து
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் வளாகத்தில் உள்ள மடப்பள்ளி அருகேயிருந்த பழைய பொருட்கள் வைக்கக் கூடிய அறை ஒன்றில் திடீர் தீ விபத்து.

தீ விபத்து அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவுவதால் பக்தர்கள் அச்சம். தீயை அணைக்கும் முயற்சியில்  தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

* தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயனிகளால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages