அக்னிப்புரட்சி இன்றைய (02.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.10.2022) முக்கிய செய்திகள்.

* இந்தோனோசியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரசிகர்களிடையே திடீர் வன்முறை - 127 பேர் உயிரிழப்பு.

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1576377410316296192?t=ZLsDRbH3mGJyOFvIIjXWSA&s=19

* டெல்லியில், மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மலர்தூவி அஞ்சலி.

* காந்தி ஜெயந்தி: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை.

டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவையொட்டி மலர் தூவி அஞ்சலி.

* மகாத்மா காந்தி பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி இணைந்து மரியாதை.

சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை.

* மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் மலர் தூவி அஞ்சலி.

* டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மரியாதை.

* மகாத்மா காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.

* வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ரூபாய் நோட்டு சேவைகளை வங்கிக் கிளைகளில் பொதுமக்களும் பெறலாம் - இந்திய ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டு தொடர்பான சேவைகளை வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

* உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் 26 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 2வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து வாகனங்கள்; ஃபாஸ்டேக் வசூலும் நடைபெறாததால் பல லட்சம் வருவாய் இழப்பு என புகார்.

* புதுவையில் செயற்கை மின் தடை ஏற்படுத்திய 5 மின்துறை ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இன்று மதியத்திற்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்-புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி.

* தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய வாய்ப்பு.

செயற்கையான மின் தடையை ஏற்படுத்துவத்துவது சரியல்ல- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

* காமராஜரின் பொற்கால ஆட்சியின் அடிப்படையிலே, தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

வளமான தமிழ்நாட்டிற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை.

காமராஜரின் நினைவுநாளில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி.

* கடலூர் :கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கு கேட்பதில் இருதரப்பினரிடையே மோதல்.

ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால்
பரபரப்பு - போலீசார் விசாரணை.

புதுச்சேரியில் நடைபெறும் போராட்டங்களை சமாளிக்க துணை ராணுவ படையினர் 120 பேர் காலாபட்டு வருகை.

மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து ஊழியர்களும், மின்தடையை கண்டித்து மக்களும் போராட்டம்.

* 36வது தேசிய போட்டிகள்:
நீளம் தாண்டும் போட்டியில் தமிழ்நாடு வீரர் ஜெஸ்வின் அல்ட்ரின் தங்கம் வென்றுள்ளார்

* வள்ளலாரின் பிறந்த ஆண்டு, காந்தியின் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து பங்கேற்றனர்.

* 2022ல் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி.

* வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்றத்தில் நடைபெறும் என்ற பாஜகவின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. எந்தத் தேர்தலாக இருந்தாலும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் திண்டுக்கல்லில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

தேமுதிகவின் நிலைப்பாடு தேமுதிகவை பொறுத்தவரை பாரதிய ஜனதாகட்சியோ அதிமுக வுடனோ கூட்டணி கிடையாது.  யாருடனும் தற்பொழுது வரை கூட்டணியில் கிடையாது.

* தமிழகத்தில் போதை சாம்ராஜ்யம் உருவாகியுள்ளது.

திராவிடர்களாகிய நமக்கு திராவிட ஆட்சியில் தலைகுணிவு ஏற்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல்”
- டிடிவி.தினகரன் பேட்டி

* விழுப்புரம் அருகே கிராமசபை கூட்டத்தில் பாதியில் வெளியேறிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் இன்று காந்தி பிறந்த நாளையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் நடைபெற்றது.

வீரபாண்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர். அப்போது கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து சராமாரியாக கேள்வி கேட்டனர்.

தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய ஒற்றுமை பயணம் - மைசூரில் கொட்டும் மழையிலும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி.

* மைதானத்திற்குள் 🐍 பாம்பு ஓடியதால் பரபரப்பு...

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான 2வது T20 போட்டியில் 'புதிய ரசிகரால்' ருசிகரம்...

* டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 237 ரன்கள் குவித்தது.

238 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி வீரர் மில்லர் சதம் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.

* ஹலோவுக்கு பதில் வந்தே மாதரம்"
தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் அரசு ஊழியர்கள் ஹலோவுக்கு பதிலாக இனி 'வந்தே மாதரம்' என தெரிவிக்க வேண்டும் - மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் கைது .

* புதுச்சேரி : மின்வாரிய அலுவலகத்திற்குள் துணை ராணுவம் குவிப்பு.

5 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் கைது .

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages